ஹூஸ்டன் தமிழ் இருக்கை: அருஷி நிஷாங்க் வருகை. தமிழ்நாடு அறக்கட்டளை ஆண்டு விழா
|
|
|
|
உலகறிந்த ஞானி மற்றும் யோகக்கலை நிபுணரான சத்குரு அவர்கள் தமது அகப் பொறியியலை (Inner Engineering) மருத்துவத் துறையினருக்கு இலவசமாகக் கற்பிக்கிறார். தற்போது நிலவிவரும் கோரோனா தொற்றை எதிர்த்துப் போராடும் மருத்துவத் துறையினருக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக அவர் இதனை ஆன்லைன் வழியே கற்பிக்கிறார்.
தொடர்ந்து யோகப் பயிற்சிகளைச் செய்வதால் மன அழுத்தம், மனச்சோர்வு, உயர் ரத்த அழுத்தம், ஆஸ்த்துமா, தலைவலி, கழுத்துவலி, முதுகுவலி, சர்க்கரை நோய், உறக்கமின்மை ஆகியவற்றிலிருந்து நிவாரணம் தெரிவதாக ஆய்வுகள் காண்பிக்கின்றன. 30 ஆண்டுகளுக்கும் மேலாக சத்குரு கற்பித்துவரும் அகப் பொறியியலைத் தொடர்ந்து செய்வோரில் 90 சதவிகிதத்தினருக்கு மன அமைதியை ஏற்படுத்துவது நிரூபிக்கப்பட்டுள்ளது. தற்போது நிலவும் சூழலில் இதனைக் கற்பது நல்ல விளைவுகளை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.
அகப் பொறியியல் நிகழ்ச்சியில் 7 ஆன்லைன் வகுப்புகள் உண்டு. ஒவ்வொன்றும் 60 முதல் 90 நிமிடங்கள் நடக்கும். |
|
இதற்கு இங்கே பதிவு செய்துகொள்ளவும்
சத்குருவின் ஈஷா அக அறிவியல் கல்விக்கூடம், டென்னசியின் மக்மின்வில்லைத் தலைமையிடமாகக் கொண்ட, லாப நோக்கற்ற அறக்கட்டளை ஆகும்.
செய்திக்குறிப்பிலிருந்து |
|
|
More
ஹூஸ்டன் தமிழ் இருக்கை: அருஷி நிஷாங்க் வருகை. தமிழ்நாடு அறக்கட்டளை ஆண்டு விழா
|
|
|
|
|
|
|