அஸ்பாரகஸ் அஸ்பாரகஸ் டிப் அஸ்பாரகஸ் வதக்கல் அஸ்பாரகஸ் உசிலியல் அஸ்பாரகஸ் காளான் கிரேவி
|
|
வாசகர் கைவண்ணம் - கோதுமை மாவு சேவை |
|
- |ஜூன் 2005| |
|
|
|
தேவையான பொருட்கள்
கோதுமை மாவு - 1 கிண்ணம் உப்பு - 1 சிட்டிகை சமையல் எண்ணெய் - 1 தேக்கரண்டி
செய்முறை
கோதுமை மாவில் உப்பு, (தேவையானால் எண்ணெய் விட்டு), தண்ணீர் ஊற்றித் தோசை மாவு பதத்திற்குக் கரைத்துக் கொள்ளவும். இட்டலித் தட்டில் எண்ணெய் தடவி, மாவை ஊற்றி 10 நிமிடம் வேகவிடவும்.
வெந்தபின் எடுத்து, சூடாக இருக்கும் போதே தேன்குழல் நாழியில் போட்டுப் பிழியவும். சேவை (இதை இடியாப்பம் என்றும் சொல்லுவர்) நன்கு ஆறியபின் சிறிது எண்ணெயைக் கையில் தொட்டுக் கொண்டு உதிர்க்கவும்.
இதிலிருந்த கீழ்க்கண்டவற்றைச் செய்யலாம். |
|
1. பால் சேவை பால், சர்க்கரையை சேவையில் சேர்த்து சாப்பிடலாம். மிகவும் சுவையாக இருக்கும்.
2. வெல்லச் சேவை சேவையின் அளவிற்கேற்ப வெல்லத்தை எடுத்துக் கொண்டு தண்ணீரில் நன்கு கொதித்தபின், பிழிந்த சேவையைப் போட்டு (தேவையானல் சிறிது தேங்காயை சேர்த்துக் கொள்ளலாம்) நன்றாக கிளறவும். பிறகு கீழே இறக்கி, ஏலக்காய், முந்திரி பருப்பு ஆகியவற்றை சேர்க்கவும்.
3. தேங்காய்ச் சேவை எண்ணெய்யில் கடுகு, உளுத்தம் பருப்பு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயப்பொடி தாளித்து தேங்காய்த் துருவலைச் சேர்த்து வறுக்கவும். சேவையை அதில் போட்டுக் கலக்கவும்.
4. எலுமிச்சம்பழச் சேவை கடுகு, கடலைப்பருப்பு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயம் இவற்றை எண்ணெய்யில் தாளித்து ஒரு கிண்ணத் தில் வைத்து உப்பு, மஞ்சள் தூள், எலுமிச்சை சாறு சேர்த்து (தேவைக்கு ஏற்ப) சேவையுடன் கலக்கவும்.
5. காய்கறிச் சேவை எண்ணெய்யில் லவங்கப் பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்க்கவும். பின்னர் நறுக்கிய வெங்காயம், பீன்ஸ், காரட், காலிபிளவர், தக்காளி, பச்சைப் பட்டாணி, (தேவையானால் உருளைக் கிழங்கு) சேர்த்து தேவைக்கு ஏற்ப உப்புச் சேர்த்து காய்கறிகள் சற்று வெந்தவுடன் சேவையுடன் கலக்கவும்.
6. எள் சேவை எண்ணெயில் உளுத்தம் பருப்பு, மிளகாய் வற்றல், பெருங்காயம் சேர்த்து வதக்கவும். பிறகு வெள்ளை எள்ளை எண்ணெய் இல்லாமல் சிவக்க வறுத்துக் கொண்டு, எல்லாவற்றையும் ஒன்றாக மிக்சியில் பொடி செய்து கொள்ளவும். பிறகு உப்புப் பொடி சேர்த்துச் சேவையுடன் கலக்கவும்.
விஜயலக்ஷ்மி |
|
|
More
அஸ்பாரகஸ் அஸ்பாரகஸ் டிப் அஸ்பாரகஸ் வதக்கல் அஸ்பாரகஸ் உசிலியல் அஸ்பாரகஸ் காளான் கிரேவி
|
|
|
|
|
|
|