SKCC: ஸ்ரீ மஹாபெரியவர் 26வது ஆராதனை மைத்ரி நாட்யாலயா: 'நாயிகா' பெண்-USA விழா 2019 அரோரா: வறியோர்க்கு உணவு பகவான் ஸ்ரீ சத்ய சாயிபாபாவின் 94வது பிறந்தநாள் விழா
|
|
TNF விரிகுடாப்பகுதி: நட்சத்திரக் கொண்டாட்டம் |
|
- உஷா சந்திரா|ஜனவரி 2020| |
|
|
|
|
டிசம்பர் 14, 2019 அன்று தமிழ்நாடு அறக்கட்டளை, விரிகுடாப்பகுதி 'நட்சத்திரக் கொண்டாட்டம்' என்னும் விழாவை, மில்பிடாஸ், கலிபோர்னியாவில் சிறப்பாகக் கொண்டாடியது. விழாவில், தமிழ்மொழி பயிற்றுதல், இசைப்பயிற்சி, நாட்டியப் பயிற்சி ஆகிய துறைகளில் தம்மை அர்ப்பணித்துச் சிறப்பாகச் சேவை செய்பவர்கள் கௌரவிக்கப்பட்டார்கள்.
தமிழ்மொழிக்கான விருது திருமதி வெற்றிச்செல்வி ராஜமாணிக்கம் (நிறுவனர், உலகத்தமிழ் கல்விக்கழகம்) அவர்களுக்கு விருது வழங்கப்பட்டது. கர்நாடக இசை கற்பிப்பதற்கான விருது திரு ஹரி தேவநாத் (நிறுவனர், ஸ்ரீ பாதுகா அகாடமி) அவர்களுக்கு வழங்கப்பட்டது.
பரதநாட்டியம் கற்பிப்பதற்கான விருது திருமதி விஷால் ரமணி (நிறுவனர், கலை இயக்குனர், ஸ்ரீக்ருபா டான்ஸ் அகாடமி) அவர்களுக்கு வழங்கப்பட்டது.
விழாவில் விரிகுடாப்பகுதியைச் சேர்ந்த பிரணவ் செந்தில்குமார், சம்யுக்தா நடேசன் மற்றும் கீர்த்தனா ரவிஷங்கர் ஆகிய மூன்று இளைஞர்களும் 'தமிழ் நாடு பௌண்டேஷன் கல்வி மற்றும் சேவை' விருது பெற்றனர். இவர்கள் கோடையில் அறக்கட்டளையின் ஏபிசி திட்டத்தில் தத்தெடுக்கப்பட்ட தமிழக அரசுப்பள்ளிகளில் தன்னார்வத் தொண்டு செய்தனர்.
முதன்மை விருந்தினராகத் திருமதி புஷ்பலதா C.J. (துணைத்தூதர், இந்திய துணைத் தூதரகம், சான் ஃபிரான்சிஸ்கோ) வந்திருந்தார். அவர் அறக்கட்டளை மற்றும் அதன் விருது பெற்றவர்களைப் பாராட்டி வாழ்த்தினர். முக்கிய விருந்தினராக ஃப்ரீமான்ட் துணைமேயர் திரு ராஜ் சல்வான் கலந்துகொண்டார். |
|
திரு ஹரி தேவநாத் மற்றும் ஸ்ரீ பாதுகா அகாடமி மாணவர்கள் திருக்குறள், திருப்புகழ் மற்றும் பல தமிழ்ப் பாடல்களைப் பாடினார்கள்.
திருமதி விஷால் ரமணி அவர்களின் மாணவர்கள் தமிழ்ப் பாடல்களுக்கு உணர்வூட்டும் பரதநாட்டியம் ஆடினார்கள்.
அறக்கட்டளையின் விரிகுடாப் பகுதி, சென்னையை உடன்பிறந்த மாவட்டமாக ஏற்றுக்கொண்டதுடன், ஏபிசி திட்டத்திற்கென சென்னையில் இரண்டு பள்ளிகளைத் தேர்ந்தெடுத்துள்ளது.
மேலும் தகவலுக்கு: tnfusa.org/bayarea
கோடைக்காலச் சேவை வாய்ப்புகளுக்கு: tnfusa.org/internship-overview
பொதுவான தகவலுக்கு: tnfusa.org
உஷா சந்திரா, தலைவர், TNF விரிகுடாப்பகுதி |
|
|
More
SKCC: ஸ்ரீ மஹாபெரியவர் 26வது ஆராதனை மைத்ரி நாட்யாலயா: 'நாயிகா' பெண்-USA விழா 2019 அரோரா: வறியோர்க்கு உணவு பகவான் ஸ்ரீ சத்ய சாயிபாபாவின் 94வது பிறந்தநாள் விழா
|
|
|
|
|
|
|