Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
November 2019 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | அன்புள்ள சிநேகிதியே | மேலோர் வாழ்வில் | வாசகர் கடிதம்
சூர்யா துப்பறிகிறார் | Events Calendar | ஹரிமொழி | சிறுகதை | சமயம் | சாதனையாளர் | சிறப்புப்பார்வை | முன்னோடி | அஞ்சலி | பொது
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
அன்புள்ள சிநேகிதியே
உங்கள் மனமுதிர்ச்சி உதவும்
- சித்ரா வைத்தீஸ்வரன்|நவம்பர் 2019|
Share:
அன்புள்ள சிநேகிதியே,
உங்கள் பகுதியை வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் படிப்பேன். தமிழில் நாட்டம் உண்டு. படித்ததெல்லாம் கான்வென்ட்டில் என்றாலும், என் அம்மா நிறைய எழுதுவார், அதைப் படித்துப் படித்து நன்றாக எழுதக் கற்றுக்கொண்டேன். கொஞ்சம் ஆங்கிலத்தில் சிந்தித்து, தமிழில் எழுத நேரமாகி விடுகிறது. முழுதும் தமிழில் எழுத ஆசையாகத்தான் இருக்கிறது. ஆனால், மன்னித்துக் கொள்ளுங்கள். இரண்டும் கலந்து வரும்.

I am single. Team Manager ஆக இருக்கிறேன். தனி வாழ்வில் கொஞ்சம் பிரச்சனை இருந்து, என்னுடைய apartmentல் ரொம்பத் தனிமையாக உணர்ந்தேன். அப்போது என் கம்பெனியில் சீனியர் மேனேஜர் லெவலில் ஒரு பெண் வந்து சேர்ந்தாள். அவள் ஊர் மைசூர். இங்கே செட்டில் ஆகி 15 வருடம் ஆகிறது என்று நினைக்கிறேன். முதல் சந்திப்பிலேயே we hit it off. மிகவும் friendly. என்னைவிட வயதில் கொஞ்சம் பெரியவள். நிறைய தனிப்பட்ட விஷயங்களைப் பகிர்ந்து கொண்டேன். என் பாய் ஃபிரண்டு என்னை dump செய்ததைப்பற்றியும் எப்படி டிப்ரெஷனில் போய்க்கொண்டு இருந்தேன் என்பது பற்றியும் விலாவாரியாகச் சொன்னேன். அப்போது அவர் என்னைச் சமாதானப்படுத்தி, தான் விவாக ரத்தானவள் என்பதைத் தெரிவித்தாள். காதல் கல்யாணம் செய்து, பத்து வருஷங்கள் கழித்து இருவரும் பிரிந்து போக முடிவெடுத்தார்களாம். He was very possessive and suspicious. இவள் நன்றாக இருப்பாள். துரத்தித் துரத்தி, காதல் வசனங்களைப் பேசி மயக்கி அந்த மனிதர் திருமணம் செய்து கொண்டாராம். அப்புறம் எல்லாம் மாறிப் போனதாம். எல்லாவற்றையும் control செய்ய ஆரம்பித்தாராம். அதனால் வெறுத்துப் போய்ப் பிரிந்து வந்துவிட்டாள். எங்களுக்குள் இந்த ஒற்றுமை இருந்ததாலோ என்னவோ நாங்கள் மிகவும் நட்பாகி விட்டோம். எங்கும் ஒன்றாகச் சென்று வருவோம்.

மூன்று வாரத்திற்கு முன்பு என்னை அவசரமாகச் சந்திக்க வேண்டுமென்று செய்தி அனுப்பினாள். லன்ச் பிரேக்கில் சந்தித்தோம். குலுங்கிக் குலுங்கி அழுதாள். சினிமாவில் வருவதுபோல் நடந்திருக்கிறது. அந்த முன்னாள் கணவர் இதே கம்பெனிக்கு வந்திருக்கிறார். இவளைவிட சீனியர் லெவல். Meet and Greet போல ஒரு பார்ட்டி. போகவேண்டிய நிர்ப்பந்தம். அதில் அந்த மனிதர் தன் கேர்ள் ஃபிரண்டையும் கூட்டிக்கொண்டு வந்திருக்கிறார். அங்கு அதிகம் பெண்கள் இல்லை. என் தோழிக்கு அந்தப் புது டைரக்டரின் Wife or girl friend உடன் பழகவேண்டிய நிர்ப்பந்தம். அவருக்கு இவளைப் பார்த்ததும் முதலில் அதிர்ச்சியாக இருந்தாலும் கண்டுகொள்ளாமல் இருந்தாராம். அந்தப் பெண்ணிடம் சொல்லியதாகத் தெரியவில்லை. ஏனென்றால் அவள் பெருமையாகத் தன் ’ஆளை’ப்பற்றி இவரிடம் சொல்லிக் கொண்டிருந்தாளாம்.

இப்போது என் தோழிக்கு இங்கே வேலை செய்யப் பிடிக்கவில்லை. இடமாற்றம் கேட்கலாம் அல்லது வேறு கம்பெனிக்கு மாறலாம் என்று தீவிரமாக முடிவெடுத்திருக்கிறாள். எனக்கு அதைக் கேட்டவுடன் மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. முதலில் அந்தச் செய்தி. இரண்டாவது, என்னை விட்டு என் தோழி பிரிந்து போய்விடுவாளோ என்ற பயம். இரண்டு வருஷமாக ஜாலியாக இருந்தேன். இப்போது மறுபடி டிப்ரெஷனில் போய் விடுவேனோ என்ற பயம் வேறு. நான் எப்படி அவளை இங்கேயே தங்க ஒப்புக்கொள்ள வைப்பது என்றும் தெரியவில்லை. அவளுடைய உணர்ச்சிகளைப் புரிந்துகொள்ளாமல் சுயநலமாக இருக்கிறேனோ என்ற சங்கட உணர்ச்சியும் இருக்கிறது. I don't know how to handle this. என் தோழி நல்ல பதவியில் இருக்கிறாள். இதைவிட்டு இந்த மனிதருக்குப் பயந்துகொண்டு ஏன் வேறு வேலை தேட வேண்டும் என்று தோன்றுகிறது. I need your help. நன்றி.

இப்படிக்கு,
...........
அன்புள்ள சிநேகிதியே
உங்களைவிட உங்கள் தோழி வயதிலும் தொழிலும் சீனியர் என்று சொல்லியிருக்கிறீர்கள். பயமோ, இல்லை கசப்போ, வெறுப்போ, சங்கடமான நிலையோ - பிறர் அந்த உணர்ச்சிகளை முழுவதுமாகப் புரிந்துகொள்ள வாய்ப்பில்லை. உங்கள் அச்சம் புரிந்தாலும், அவர் மனப்போக்கில் விடுவது நல்லது. சிலநாட்கள் கழித்து அவருக்கே தன்னம்பிக்கையும் மனோதைரியமும் வந்து, இந்த இடத்திலேயே தொடர்ந்து வேலை செய்ய உறுதி செய்தாலும் செய்வார். நீங்கள் அவருக்குக் கொஞ்சம் space கொடுத்தால் நன்றாக இருக்கும். ஒரு உண்மையான தோழியாக அவருக்கு moral support கொடுப்பது சிறந்தது. அப்படியே அவர் இந்த இடத்தைவிட்டுப் போக நேர்ந்தாலும் உங்கள் நட்பு தொடரத்தான் போகிறது. அடிக்கடி பார்த்துக்கொள்ள வாய்ப்புகள் குறைந்தாலும், பேசிக்கொள்ள நிறைய சந்தர்ப்பங்கள் கிடைக்கும். உங்களுக்கும் புது உறவுகள் ஏதாவது, உங்கள் மகிழ்ச்சிக்கும் நிம்மதிக்கும் ஏற்றதுபோல, உண்டாகும். மனம் தளர மாட்டீர்கள். நீங்களும் பொறுப்பான பதவியில் இருப்பவர். வாழ்க்கையில் ஏமாற்றங்களைச் சந்தித்தவர். உங்கள் மனநிம்மதிக்கு உங்கள் மனமுதிர்ச்சி உதவும்.

மீண்டும் சந்திப்போம்., வாழ்த்துக்கள்,
டாக்டர் சித்ரா வைத்தீஸ்வரன்
Personal Queries: drcv.listens2u@gmail.com
Share: 
© Copyright 2020 Tamilonline