|
|
|
அமெரிக்காவில் சுமார் 1965ம் ஆண்டு வாக்கில் சத்ய சாய் மையம் (சத்ய சாய் சென்டர்) தொடங்கப்பட்டது. ஹாலிவுட், நியூ யார்க், சான் ஃபிரான்சிஸ்கோ, நெவாடா என்று தொடங்கி, 1973-74ம் ஆண்டுகளில் சான் ஃபிரான்சிஸ்கோவில் வட கலிஃபோர்னியாவின் முதல் மையம் தொடங்கப்பட்டது. தற்பொழுது சுமார் 20 மையங்கள் சான் ஃபிரான்சிஸ்கோ மற்றும் அதைச் சுற்றியுள்ள நகரங்களில் செயல்பட்டு வருகின்றன. இது அமெரிக்காவின் 7வது பிராந்தியமாக அமைந்துள்ளது.
பக்தர்கள் அனைவரையும் கீழே குறிப்பிட்டுள்ள இரு முக்கியமான நிகழ்வுகளுக்கு அன்புடன் அழைக்கின்றோம்
உலகளாவிய அகண்ட பஜனை (Global Akanda Bhajan) உலக அமைதிக்காகத் தொடர்ந்து 24 மணி நேரம் இறைவனைத் துதித்துப் பாடும் இந்த நிகழ்ச்சி விவரங்கள் பின்வருமாறு: இடம்: University of Silicon Andhra 1521 California Circle, Milpitas, CA94035 நாள்: நவம்பர் 9, சனிக்கிழமை மாலை 5:00 மணிமுதல் நவம்பர் 10, ஞாயிறு மாலை 6:00 வரை நடைபெறும்.
இரவு, காலை மற்றும் மதிய உணவு அன்புடன் வழங்கப்படும்.
மேலும் அறிய: இணையதளம்: www.region7saicenters.org/gab/index.html மின்னஞ்சல்: devotion@region7saicenters.org
பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் 94வது பிறந்த நாள் கொண்டாட்டம் கருப்பொருள்: அன்புடன் எதையும் செய் - தெய்வீக அனுபவம் இடம்: Jain center of Northern california , Milpitas CA, 722, South Main street, Milptias, CA 95035 நாள்: நவம்பர் 23, 2019, சனிக்கிழமை காலை 10 மணிமுதல் மதியம் 1:30 மணிவரை
சிறப்பு நிகழ்ச்சி: சொற்பொழிவு, பஜனை, இன்னிசை மதிய உணவு அன்புடன் வழங்கப்படும்
மேலும் அறிய: இணையதளம்: www.region7saicenters.org
சத்ய சாய் நிறுவனத்தைப் பற்றி மேலும் அறிய இணையதளம்: www.region7saicenters.org |
|
சாய் நிறுவனங்களின் செயல்பாடுகள் அனைத்து சாய் மையங்களிலும் ஆன்மீகம், சேவை மற்றும் கல்வி ஆகிய மூன்று பிரிவுகளிலும் தொண்டுகள் நிகழ்ந்து வருகின்றன. விவரம் பின்வருமாறு:
சேவைப் பிரிவு (Service): - வாரந்தோறும் அன்னதானம் ( காலை, மதியம் மற்றும் இரவு) - ஆஷிலாண்ட் இலவச மருத்துவ கிளினிக் சேவை - வாரந்தோறும் முதியோர் இல்லங்களில் பாடி மகிழ்வூட்டும் சேவை - சாண்டா க்ரூஸ் 'Day on the Beach' சேவை - டியூஷன் சேவை
ஆன்மீகப் பிரிவு (Devotion): - வாரந்தோறும் கூட்டு வழிபாடு - வாரந்தோறும் பகவான் அருளுரைகளின் அடிப்படையில் அமைந்த ஆன்மீகக் கலந்துரையாடல் - தியானப் பயிற்சி - ஆன்மீகக் கலை நிகழ்ச்சிகள்
கல்விச் சேவை பிரிவு (Sai Spiritual Education ): SSE group 1- Grades 1 through 3 SSE group 2- Grades 4 through 6 SSE group 3- Grades 7 through 9 SSE group 4- Grades 10 through 12 -சத்ய சாய் ஆன்மீகக் கல்வி (ஆன்மீகம், நல்லொழுக்கம், நற்பண்புகள் கற்று கொடுத்தல்]
இளைஞர் பிரிவு (Young Adults) 18 வயது முதல் 40 வயது வரையுள்ள இளைஞர்கள் பங்கேற்கலாம். இந்த இளைஞர்கள் பல சேவைகளைச் செய்து வருகின்றனர். அவைகளில் சில, சமூக சேவை, பள்ளி மாணவர்களுக்குப் பாடம் கற்பித்தல், அன்னதானம், திறன் வளர்ப்பு, இசைக்கருவிகள் பயிற்சி, பக்தியிசை பாடுதல், இளைஞர் சாதனா முகாம்.
செய்திக்குறிப்பிலிருந்து |
|
|
|
|
|
|
|