ஸ்ருதி ஸ்வர லயா: 22ஆம் ஆண்டுவிழா அரங்கேற்றம்: நிகித்தா அரங்கேற்றம்: ஷ்ரேயா கண்ணா & சமிக்ஷா ஸ்ரீராம் நிருத்யநிவேதன்: நிருத்ய சமர்ப்பணம் நாதநிதி: 30வது ஆண்டு விழா அரோரா: வறியோர்க்கு உணவு நிருத்யோல்லாசா: நூறாவது அரங்கேற்றம்
|
|
|
|
2019 ஆகஸ்ட் மாதத்தில் சான் ஃபிரான்சிஸ்கோ விரிகுடாப் பகுதி லிவர்மோர் சிவா விஷ்ணு கோவில் அரங்கில், அர்ஜுன் சந்திரா மற்றும் அஷ்வின் சந்திராவின் வயலின் மற்றும் மிருதங்க அரங்கேற்றங்கள் வெவ்வேறு நாட்களில் நடைபெற்றன.
அர்ஜுன் (வயலின்) ஆகஸ்ட் 4 அன்று, சங்கீத கலாநிதி டாக்டர் எம். சந்திரசேகரன் அவர்களின் மகள் திருமதி G. பாரதியின் மாணவனான அர்ஜுன் வயலின் அரங்கேற்றம் நடைபெற்றது. திரு ரமேஷ் ஸ்ரீநிவாசன் மிருதங்கமும், திரு. S.V. ரமணியின் கடமும் நிகழ்ச்சிக்கு மெருகூட்டின. அர்ஜுன் சந்திராவின் அபாரமான வயலின் வாசிப்பிற்கு குரு பாரதி அவர்களின் பங்கு மிக முக்கியமானது. ஸ்கைப் மூலமாகவே கற்றுத் தந்து மாணவனை ஏழே மாதத்தில் அரங்கேற்றம்வரை கொண்டு வந்த பாரதி அவர்களுக்கு ஒரு சபாஷ். வயதில் சிறியவனாக இருந்தாலும் உழைத்துக் கற்ற அர்ஜுன் சந்திராவுக்குப் பாராட்டுக்கள். லிவர்மோர் கோவிலின் மேனாள் தலைவர் திரு சாய்நாத் மற்றும் SIFA தலைவர் திருமதி வசந்தி வெங்கட்ராமன் ஆகியோர் தலைமையில் அர்ஜுனின் அரங்கேற்றம் நடைபெற்றது. |
|
|
அஷ்வின் (மிருதங்கம்) ஆகஸ்ட் 10 அன்று, சான் ரமோனில் பத்தாம் வகுப்பு படிக்க ஆரம்பித்திருக்கும் அஷ்வின் சந்திரா, 70 வருடமாக இசைக்குப் பணிபுரியும் 'சங்கீத கலாநிதி' டாக்டர் எம் சந்திரசேகரன் மற்றும் திருமதி G. பாரதி அவர்களின் அற்புதமான வயலின் கச்சேரிக்கு மிருதங்கம் வாசிக்கக் கிடைத்ததே மிகப்பெரிய பாக்கியம். கடம் வித்வான் திரு எஸ்.வி. ராமன் அவர்கள் உப-பக்க வாத்தியத்துடன் அஷ்வினின் மிருதங்க வாசிப்பு சிறப்பாக இருந்தது. குரு திரு ரமேஷ் ஸ்ரீனிவாசனின் கடுமையான உழைப்பை அஷ்வினின் வாசிப்பில் பார்க்க முடிந்தது. மிகப்பெரிய மேதையான டாக்டர் எம்.சந்திரசேகரனுக்கு அஷ்வின் வாசித்து அரங்கேறியது அருமையான ஆரம்பம். ஸ்ரீ சத்ய சாயிபாபா இன்டர்நேஷனல் அமைப்பின் மண்டலத் தலைவர் திருமதி லக்ஷ்மி வியாகரன், தபலா வித்வான் பண்டிட் ஹபீப்கான், 'ப்ரக்ஞா' நிறுவனர்கள் திருமதி கவிதா, திரு கிஷன் ஆகியோர் தலைமையில் அஷ்வினின் அரங்கேற்றம் சிறப்பாக நடைபெற்றது.
அர்ஜுன் சந்திரா சாய் ஆஷ்ரயாவுக்கும் , அஷ்வின் சந்திரா ப்ரக்ஞாவுக்கும் தமது அரங்கேற்ற அன்பளிப்புகளைச் சமர்ப்பித்தனர். இவை லாபநோக்கற்ற சமூகசேவை அமைப்புக்களாகும்.
அர்ஜுன் அஷ்வின் இரட்டையரின் வெற்றிக்குப் பின்பலமாக அவர்களது பெற்றோர் சந்திரா மற்றும் அருணா உள்ளனர்.
ஹேமலதா சிவசுப்பிரமணியன் சான் ரமான், கலிஃபோர்னியா |
|
|
More
ஸ்ருதி ஸ்வர லயா: 22ஆம் ஆண்டுவிழா அரங்கேற்றம்: நிகித்தா அரங்கேற்றம்: ஷ்ரேயா கண்ணா & சமிக்ஷா ஸ்ரீராம் நிருத்யநிவேதன்: நிருத்ய சமர்ப்பணம் நாதநிதி: 30வது ஆண்டு விழா அரோரா: வறியோர்க்கு உணவு நிருத்யோல்லாசா: நூறாவது அரங்கேற்றம்
|
|
|
|
|
|
|