தெரியுமா?: TNF: 45வது மாநாடு – அட்லாண்டா (மே 25-26, 2019) தெரியுமா?: TNF ஆஸ்டின் நிர்வாகிகள்
|
|
|
|
தேசங்கள் பல; பூமி ஒன்றே உயிர்கள் பல; மூச்சு ஒன்றே நட்சத்திரங்கள் பல; வானம் ஒன்றே சமுத்திரங்கள் பல; நீர் ஒன்றே மதங்கள் பல; கடவுள் ஒன்றே நகைகள் பல; தங்கம் ஒன்றே தோற்றங்கள் வேறு; உண்மை ஒன்றே - ஸ்ரீ சத்திய சாயிபாபா
பகவான் ஸ்ரீ சத்திய சாயிபாபா அனைத்து நாட்டு மக்களையும் தன் அருளாலும் அன்பாலும் ஈர்த்து அவர்களுக்கு ஆன்மீக வழி முறைகளைப் கடைபிடிக்கப் பற்பல அருளுரைகளை வழங்கினார். அமெரிக்காவிலிருந்தும் நெடுநாட்களாகப் புட்டபர்த்தி சென்று பாபாவின் ஆசிபெற்று வந்துள்ளனர். பகவான் பாபா அவர்கள் நாம் அனைவரும் கடவுள் என்ற உண்மையை உணர்த்த ஸ்ரீ சத்ய சாயி சேவா நிறுவனங்கள் என்ற அமைப்பின் கீழ் சமிதிகளை இந்தியா முழுவதும் உருவாக்கினார்.
பக்தர்களின் வேண்டுதலின்படித் தமது நிறுவனைத்தை உலக அளவில் விரிவாக்க சாயிபாபா ஆசி வழங்கினார். அமெரிக்காவிலும் சுமார் 1965 முதல் சத்திய சாயி மையங்கள் (Sathya Sai Centers) உருவாகத் தொடங்கின. ஹாலிவுட், நியூ யார்க், சான் ஃபிரான்சிஸ்கோ, நெவாடா என்று அவை விரிவடைந்தன. இவையனைத்தையும் நிர்வகிக்க, 1975ம் ஆண்டு சத்ய சாயி சென்ட்ரல் கவுன்சில் உருவானது. இந்த மையங்கள்பல மண்டலங்களாக வகுக்கப்பட்டு உள்ளன.
பகவானின் பேரருளால், குறிப்பாக 1973-74ம் ஆண்டு சான் ஃபிரான்சிஸ்கோவில் வட கலிஃபோர்னியாவின் முதல் மையம் தொடங்கியது. பிறகு படிப்படியாக வளர்ந்து, தற்பொழுது சான் ஃபிரான்சிஸ்கோ மற்றும் அதைச் சுற்றியுள்ள நகரங்கள் சுமார் 20 மையங்களுடன் அமெரிக்காவின் மண்டலம்-7 ஆக அமைந்துள்ளது. சாயி மையங்கள் ஆன்மீகம், சேவை மற்றும் கல்வி ஆகிய மூன்று பிரிவுகளிலும் தொண்டுகளைச் செய்து வருகின்றன. முக்கியமான சிலவற்றை இங்கே பார்க்கலாம்:
சேவைப் பிரிவின் செயல்பாடுகள்: வாரந்தோறும் நாராயண சேவை எனப்படும் அன்னதானம் (காலை, மதியம் மற்றும் இரவு); ஆஷிலாண்ட் இலவச மருத்துவ மனை சேவை; வாரந்தோறும் முதியோர் இல்லங்களில் துதிப்பாடல் பாடுதல்; சான்ட க்ரூஸ் டே ஆன் தி பீச் சேவை; சான்ட ரோசா பயெர் ரிலீஃப்; டியூஷன் சேவை |
|
ஆன்மீகப் பிரிவின் செயல்பாடுகள்: வாரந்தோறும் கூட்டு வழிபாடு: பகவான் பாபாவின் புத்தகங்களைப் படித்துக் கலந்துரையாடல்; தியானம்; ஆன்மீக நாடகம், இசை நிகழ்ச்சிகள்
கல்விப் பிரிவு (Sai Spiritual Education) செயல்பாடுகள்: வயதுவாரிக் குழுக்களாகப் பிரித்து, ஆன்மீகம், நல்லொழுக்கம், நற்பண்புகள் ஆகியவை சத்ய சாய் ஆன்மீகக் கல்வியாகக் கற்பிக்கப்படுகின்றன.
இளைஞர் பிரிவில் (Young Adults) 18 வயது முதல் 40 வயது வரையிலானோர் பலவகைச் சேவைகளைச் செய்து வருகின்றனர். விவரங்களுக்குக் கீழே தரப்பட்டுள்ள இணையதளத்தைப் பார்க்கவும்.
இரு முக்கியமான நிகழ்வுகளுக்கு உங்களை அன்புடன் அழைக்கின்றோம்:
உலகளாவிய அகண்ட பஜனை நவம்பர் 10, சனிக்கிழமை மாலை 5:15 மணிமுதல் நவம்பர் 11 மாலை 6:00 மணிவரை இடம்: Walden West Center, 15555 Sanborn Road, Saratoga, CA (இரவு, காலை மற்றும் மதிய உணவு அன்புடன் இலவசமாக வழங்கப்படும்)
பகவான் ஸ்ரீ சத்திய சாயிபாபாவின் 93வது பிறந்தநாள் விழா இடம்: சிவா-விஷ்ணு கோவில், லிவர்மோர் கம்யூனிடி சென்டர் - லாகிரெட்டி ஆடிட்டோரியம் முகவரி: 1232 Arrowhead Ave, Livermore, CA சிறப்பு நிகழ்ச்சிகள்: சிறப்புரை, பஜன், இசைநிகழ்ச்சி (மதிய உணவு அன்புடன் இலவசமாக வழங்கப்படும்)
விவரங்களுக்கு மின்னஞ்சல்: devotion@region7saicenters.org வலைமனை: www.region7saicenters.org
பக்தர்கள் இரு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுப் பகவானின் அருள் பெறுமாறு கேட்டுக் கொள்கின்றோம்
செய்திக்குறிப்பிலிருந்து |
|
|
More
தெரியுமா?: TNF: 45வது மாநாடு – அட்லாண்டா (மே 25-26, 2019) தெரியுமா?: TNF ஆஸ்டின் நிர்வாகிகள்
|
|
|
|
|
|
|