Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்
September 2018 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | பொது | வாசகர் கடிதம் | முன்னோடி | சமயம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | Events Calendar | மேலோர் வாழ்வில் | அன்புள்ள சிநேகிதியே | அஞ்சலி
பொது
தெரியுமா?: கேரளத்தில் வெள்ள நிவாரணத்துக்கு உதவ
தெரியுமா?: இறகுப்பந்து சேம்பியன்ஷிப்கள்
சான் ஃபிரான்சிஸ்கோவில் சத்குருவின் அகப் பொறியியல்
தமிழ்நாடு அறக்கட்டளை செய்திகள்
- மணி பெரியகருப்பன்|செப்டம்பர் 2018|
Share: 
Click Here EnlargeTNF-ABC திட்டம் ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடக்கம்
தமிழ்நாடு அறக்கட்டளை மெம்ஃபிஸ் கிளையின் ஆதரவோடு TNF-ABC திட்டம் ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடங்கப்பட்டு உள்ளது. இது இந்தத் திட்டத்தால் பயன்பெறும் பதினோறாவது மாவட்டம். இத்திட்டத்தின் மூலம் உப்பூர் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் பயின்றுவரும் மீனவக் குடும்பங்களை சேர்ந்த 400 மாணாக்கர்கள் பயன்பெறுவர்.

கோடைக்கால உள்ளகப் பயிற்சித் திட்டம் (Summer Internship Program)
ஆண்டுதோறும் நடந்தேறி வரும் இந்தப் பயிற்சித் திட்டத்தில், இந்த ஆண்டு அமெரிக்காவின் 12 மாநிலங்களைச் சார்ந்த 22 உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் பங்கேற்று TNF-ABC திட்டம் நடந்துவரும் பல்வேறு பள்ளிகளில் பயின்றும், பயிற்றுவித்தும் பயன்பெற்றனர்.

வேதாரண்யம் மாணவியர் விடுதி
நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் அமைந்துள்ள கஸ்தூர்பா காந்தி கன்யா குருகுலம் 1946லிருந்து ஆதரவற்ற, எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவியருக்குப் பெருந்தொண்டாற்றி வருகிறது. இந்த குருகுலத்தில் நியூ ஜெர்சி தமிழ்ச் சங்க வெள்ளிவிழா நினைவாக, 35 லட்ச ரூபாய் செலவில் கட்டப்பட்ட மாணவியர் விடுதி ஜூலை மாதம் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு நியூ ஜெர்சி தமிழ்ச் சங்க நிறுவனர் மருத்துவர் சுந்தரம் தலைமை வகித்தார். இந்தப் பெருந்திட்டத்தை பொறுப்பெடுத்து நடத்திக் கொடுத்த தமிழ்ச் சங்கம் நம் பாராட்டுக்குரியது.

மேலும் விவரங்களுக்கு: tnfusa.org
நீங்கள் விரும்பும் மாவட்டத்திற்கு உதவி செய்ய: tnfusa.org/donate
Click Here EnlargeClick Here Enlarge


தொகுப்பு: மணி பெரியகருப்பன்,
கொலம்பஸ், ஒஹையோ
More

தெரியுமா?: கேரளத்தில் வெள்ள நிவாரணத்துக்கு உதவ
தெரியுமா?: இறகுப்பந்து சேம்பியன்ஷிப்கள்
சான் ஃபிரான்சிஸ்கோவில் சத்குருவின் அகப் பொறியியல்
Share: