தமிழ்க்கல்வி: ஆண்டுவிழா SEED: நிதி திரட்டல் இசைநிகழ்ச்சி ப்ளேனோ தமிழ்ப்பள்ளி ஆண்டுவிழா லாஸ் ஏஞ்சலஸ்: ஈஸ்டர் 2018 பெருவிழா லட்சுமி தமிழ்பயிலும் மையம் ஆண்டுவிழா பாஸடீனா: ஸ்ரீநிதி நவநீதன் கச்சேரி ஸ்ரீ ராஜராஜேஸ்வரி ஆலயம்: ஸ்ரீ ராமநவமி உற்சவம்
|
|
|
|
ஏப்ரல் 21, 2018 சனிக்கிழமை அன்று கேல் ரான்ச் நடுநிலைப் பள்ளியில் தமிழ்ப் புத்தாண்டு விழாவை, சான் ஃப்ரான்சிஸ்கோ வளைகுடாப்பகுதி தமிழ்மன்றம் விமரிசையாகக் கொண்டாடியது.
தமிழ் வாழ்த்துடன் விழா துவங்கியது. முதல் நிகழ்ச்சியாக வந்த மழலையரின் இசை நிகழ்ச்சி அரங்கத்தை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. 8 அடி உயர ஆலமரம், கரகம் ஆடும் பெண்மணி, தவில் வாசிப்பவர் எனப் பல வண்ணத் துணிகளில் அமைக்கப்பட்ட மேடையலங்காரம் ஆச்சரியப்படுத்தியது. மகளிர் குழுவினர் முளைப்பாரியுடன் அணிவகுத்து நின்று விவசாயிகளுக்கு நன்றி கூறினர். குழந்தைகள் பங்கேற்ற மாறுவேட அணிவகுப்புப் போட்டி காண்போர் உள்ளங்களைக் கொள்ளை கொண்டது.
முக்கிய நிகழ்வாக, சான் ரமோன் நகர மேயர் திரு. பில் கிளார்க்ஸன் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்கள். மற்றுமொரு சிறப்பு விருந்தினரான டப்ளின் நகரசபை உறுப்பினர் திரு. அருண் கோயல் கலைநிகழ்ச்சிகளைப் பாராட்டிப் பேசினார். பிறகு, தமிழ் மன்றத்தின் புதிய சின்னத்தை அறிமுகப்படுத்தினார்கள். மன்றத் தலைவர் திரு. தயானந்தன் முன்னிலையில், மன்றத்தின் புதிய இணையதளம் அறிமுகப்படுத்தப்பட்டது. |
|
முத்தாய்ப்பாக, பழம்பெரும் தமிழ் இசைக்கருவிகளைக் காண்பித்து, சில குறிப்புகளையும் கூறி, மேடையிலேயே இசைத்தது அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது. குழந்தைகள் பங்கேற்ற நேர்த்தியான கிராமிய நடனங்களும், பின்னல் கோலாட்ட நடனங்களும், தம்பதிகள் பங்கேற்ற விளையாட்டுப் போட்டிகளும், பெரியவர்களின் நடன நிகழ்ச்சிகளும், பார்வையாளர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தின. குழந்தைகள் நடத்திய 'கொடிகாத்த திருப்பூர் குமரன்' நாடகம் பாராட்டுக்களைப் பெற்றது. தொடர்ந்து நடந்த ஓவியக் கண்காட்சி அனைவரையும் ஈர்த்தது.
விழாவின் கடைசி நிகழ்ச்சியாக சிறார் மற்றும் பெரியவர்கள் பங்கேற்றுப் பேசிய "நீயா நானா" நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் நன்றி நவிலப்பட்டது
ரமேஷ் குப்புசாமி, செயலாளர், வளைகுடாப் பகுதி தமிழ் மன்றம் |
|
|
More
தமிழ்க்கல்வி: ஆண்டுவிழா SEED: நிதி திரட்டல் இசைநிகழ்ச்சி ப்ளேனோ தமிழ்ப்பள்ளி ஆண்டுவிழா லாஸ் ஏஞ்சலஸ்: ஈஸ்டர் 2018 பெருவிழா லட்சுமி தமிழ்பயிலும் மையம் ஆண்டுவிழா பாஸடீனா: ஸ்ரீநிதி நவநீதன் கச்சேரி ஸ்ரீ ராஜராஜேஸ்வரி ஆலயம்: ஸ்ரீ ராமநவமி உற்சவம்
|
|
|
|
|
|
|