BATM: தமிழ்ப் புத்தாண்டு விழா SEED: நிதி திரட்டல் இசைநிகழ்ச்சி ப்ளேனோ தமிழ்ப்பள்ளி ஆண்டுவிழா லாஸ் ஏஞ்சலஸ்: ஈஸ்டர் 2018 பெருவிழா லட்சுமி தமிழ்பயிலும் மையம் ஆண்டுவிழா பாஸடீனா: ஸ்ரீநிதி நவநீதன் கச்சேரி ஸ்ரீ ராஜராஜேஸ்வரி ஆலயம்: ஸ்ரீ ராமநவமி உற்சவம்
|
|
|
|
ஏப்ரல் 22, 2018 அன்று தமிழ்க்கல்வியின் ஆண்டு விழாக் கொண்டாட்டம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக 3 மாணவிகளுக்குப் பட்டமளிப்பு விழாவும் நடைபெற்றது.
சற்றொப்ப 700 பேர் கலந்துகொண்ட ஆண்டு விழா, 80க்கும் மேற்பட்ட தன்னார்வலர்களாலும், 200க்கும் மேற்பட்ட பெற்றோர்களாலும், 70க்கும் மேற்பட்ட ஆசிரியர்களாலும் சிறப்பாகத் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டது. இதனை இவ்வருடம் பட்டம்பெற்ற மூன்று மாணவியர் சுவைபடத் தொகுத்து வழங்கினர். சாஷாலெட் ஃபோர்ட் என்ற வெள்ளைக்காரச் சிறுமி தூயதமிழில் அனைவரையும் வரவேற்றது வெகு அழகு.
தமிழ் மொழி, பண்பாடு, கலாச்சாரம் ஆகியவற்றை இவ்வாண்டு நிகழ்ச்சிகள் கண்முன்னே கொண்டுவந்தன. குழந்தைகள் இயல், இசை, நாட்டியம் மற்றும் நாடகம் மூலம் மகிழ்விக்கவும், சமூகப் பிரச்சனைகளைச் சுட்டிக்காட்டவும் செய்தார்கள். 'பாகுபலி' படத்தின் சண்டைக் காட்சிகளைக் குழந்தைகளும், பெற்றோர்களும் சேர்ந்து மேடையில் நடத்திகாட்டினர். அடுத்த நிகழ்ச்சியில் குழந்தைகள் நீரை விரயம் செய்வது பெரிய ஆபத்து என்பதைச் சில நிமிடங்களில் வாய் பேசாமலே நமக்குக் கடத்தினர். மழலைகளின் உயிரெழுத்துப் பாட்டு, மழலை மார்க்கெட், பாரம்பரிய விளையாட்டு, நடனம் மற்றும் நாடகம், உழவும் உணவும், கரகாட்டம், தெம்மாங்கு, வில்லுப்பாட்டு, நடனங்கள், நாடகம், தொடர்நடனங்களின் தொகுப்பு ஆகியவை அதிசயிக்க வைத்தன. இந்திய கலாசாரத்தின் சிறப்பு கிராமியக் கலைகளான 'நூல்பொம்மலாட்டம்' மற்றும் 'நிழல்பொம்மலாட்டம்' அற்புதம். |
|
கட்டுரை மற்றும் ஓவியப் போட்டிகளுடன், குறுக்கெழுத்துப் போட்டி, மாறுவேடப் போட்டி, கோலப்போட்டி பேச்சுப் போட்டி மற்றும் திருக்குறள் போட்டிகள் நடத்தப்பட்டன. கௌதம் அருண்குமார், அவந்திகா சந்திரன் ஆகியோர் நூற்றுக்கும் மேற்பட்ட குறட்பாக்களைக் கூறிப் பரிசுகளை வென்றனர். மூன்றே வயதான ஆன்யா சங்கர் 11 குறட்பாக்களைத் தெளிவாகக் கூறினார். மொத்தத்தில், தென்கலிஃபோர்னியா அளவிலான போட்டிகளில் 45 கோப்பைகளையும், பள்ளி அளவிலான போட்டிகளில் 137 பதக்கங்களையும் வென்று, அடுத்த தலைமுறை நம்பிக்கையைத் தந்துள்ளது. இந்திய தேசியகீதம் தமிழில் ஒலிக்க நிகழ்ச்சி நிறைவடைந்தது.
10 வருடங்களுக்கு முன், தென்கலிஃபோர்னியா தமிழ்ச் சங்கத்தால் 10 குழந்தைகளுடன் தொடங்கப்பட்ட தமிழ்க்கல்வி, தற்பொழுது 3 ஊர்களில் (Irvine, Brea &Eastvale) நடத்தப்பட்டு வருகிறது. 2017-18 கல்வியாண்டில் மட்டும் மொத்தம் 254 குழந்தைகளுக்குத் தமிழ் தந்துள்ளது.
ஸ்ரீராம் காமேஸ்வரன், தென்கலிஃபோர்னியா |
|
|
More
BATM: தமிழ்ப் புத்தாண்டு விழா SEED: நிதி திரட்டல் இசைநிகழ்ச்சி ப்ளேனோ தமிழ்ப்பள்ளி ஆண்டுவிழா லாஸ் ஏஞ்சலஸ்: ஈஸ்டர் 2018 பெருவிழா லட்சுமி தமிழ்பயிலும் மையம் ஆண்டுவிழா பாஸடீனா: ஸ்ரீநிதி நவநீதன் கச்சேரி ஸ்ரீ ராஜராஜேஸ்வரி ஆலயம்: ஸ்ரீ ராமநவமி உற்சவம்
|
|
|
|
|
|
|