ரவை வடை
|
|
|
|
தேவையான பொருட்கள் உருளைக் கிழங்கு - 6 கடலைமாவு - 2 தேயிலைக்கரண்டி அரிசிமாவு - 2 தேயிலைக்கரண்டி வெங்காயம் (பொடியாய் நறுக்கியது) - 1/2 கிண்ணம் பச்சை மிளகாய் - 6 சிகப்பு மிளகாய் - 2 காரப்பொடி - 1 தேக்கரண்டி தேங்காய்த் துருவல் - 1/2 கிண்ணம் பெருங்காயம் - சிறிதளவு உப்பு - தேவைக்கேற்ப எண்ணெய் - பொரிப்பதற்கு ஓமப்பொடி அல்லது காராபூந்தி - சிறிதளவு கொத்துமல்லி (பொடியாய் நறுக்கியது) - சிறிதளவு
செய்முறை உருளைக்கிழங்கை குழையாமல் வேகவைத்துப் பொடியாக நறுக்கவும். அத்துடன் கடலைமாவு, அரிசிமாவு, உப்பு, பெருங்காயம், வெங்காயம், நறுக்கிய இரண்டு பச்சைமிளகாய், உப்பு, காரப்பொடி போட்டு சேர்த்துப் பிசைந்து உருட்டி எண்ணெயில் பொரித்து, பொன்னிறமாக எடுத்து வைக்கவும்.
தயிரைக் கடைந்து உப்புப் போட்டு, தேங்காய், மீதியுள்ள மிளகாய்கள், மிக்சியில் நைசாக அரைத்துத் தயிரில் கலந்து வைத்து அதில் பொரித்து வைத்துள்ள உருளை போண்டாவைப் போட்டு தாம்பாளத்தில் பரவலாக வைத்து மேலாக பூந்தி, ஓமப்பொடி, கொத்துமல்லி போட்டு அலங்கரித்துச் சாப்பிடலாம். பச்சை வெங்காயம், தக்காளி, நறுக்கிப் போட்டாலும் சுவை கூடுதலாக இருக்கும். |
|
தங்கம் ராமசாமி, ப்ரிட்ஜ் வாட்டர், நியூ ஜெர்சி |
|
|
More
ரவை வடை
|
|
|
|
|
|
|