Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
October 2017 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | சாதனையாளர் | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | மேலோர் வாழ்வில் | சிறப்புப் பார்வை
கதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | Events Calendar | கவிதைப்பந்தல் | நூல் அறிமுகம் | சமயம் | பொது | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
சாதனையாளர்
தேனு செந்தில்: Code One Programming
- செய்திக்குறிப்பிலிருந்து|அக்டோபர் 2017|
Share:
சான் ஹோசே (கலிஃபோர்னியா) லேலண்டு பள்ளி மாணவியர் சேர்ந்து அறிவியல் மற்றும் புரோகிராமிங் கற்பிக்க கோடு ஒன் புரோகிராமிங் என்ற லாபநோக்கற்ற அமைப்பைத் தொடங்கியுள்ளனர். தேனு செந்தில் என்ற தமிழ்ப்பெண், சாங் ஜி கிம் என்பவரோடு இணைந்து இதைத் தொடங்கியுள்ளார். இருவரும் பள்ளியின் சீனியர் வகுப்பில் படிக்கிறார்கள். 7 பேருடன் தொடங்கிய இந்த வகுப்புகளில் இப்போது 400 பேர் சேர்ந்து கற்கின்றனர்.

Quixilver 604 மற்றும் Leland Women in STEM என்ற இரண்டு அமைப்புகளிலும் உறுப்பினரான செந்தில், இவற்றின் உதவியையும் பெற்றுள்ளார். "தொழில்நுட்பத்தின் பல்வேறு முகங்களையும் இளையோருக்கு அறிமுகப் படுத்தினால் அது எப்படி அவர்களுக்குப் புதிய வாசல்களைத் திறக்கிறது என்பதை என்னால் கண்கூடாக இங்கே பார்க்க முடிகிறது" என்கிறார் தனது அமைப்பின் நோக்கத்தைப் பற்றிக் கூறவந்த செந்தில்.Visual Programming, Java for Kids, Artificial Intelligence, AP Computer Science Summer Preparatory and Natural Language Processing போன்ற, நூற்றுக்கணக்கான டாலர் கொடுத்துப் படிக்கவேண்டிய பலவும் இதன்மூலம் இலவசமாகப் பல இடங்களில் கற்பிக்கப்படுகிறது. மேலும் பலவற்றைக் கற்பிக்கவும் பாடத்திட்டங்கள் வகுக்கப்படுகின்றன.

கோடு ஒன்னின் நிர்வாக இயக்குனர் என்ற முறையில் செந்தில் தம் குழுவினரின் செயல்பாடுகளுக்குப் பொறுப்பேற்கிறார். செயல்திட்ட இயக்குனரான கிம், வகுப்புகள் தரமான முறையில் நடப்பதை உறுதிசெய்கிறார். பொதுமக்கள் தொடர்பை ஆருஷி கரண்டிகார் பார்த்துக்கொள்கிறார். மேற்கொண்டு செல்லவேண்டிய பாதையை இவர்களின் குழு தீர்மானிக்கிறது.

கிம் முதலில் புரோகிராமிங் கற்பித்து வந்த நிறுவனத்திலிருந்து விலகி இதைத் தொடங்கினார். "தொலைவு அல்லது கட்டணம் பலரை அங்கே படிப்பதிலிருந்து தடுத்தது. கற்பதற்கு ஒருக்காலும் பணம் தடையாக இருக்கக்கூடாது. எனவேதான் செந்திலும் நானும் இணைந்து இதைத் தொடங்கினோம்" என்று அவர் விளக்குகிறார். வயது பொருளாதாரப் பின்னணிகளைத் தாண்டி இந்தக் கோடிங் அனுபவத்தை எங்களால் தரமுடிகிறது என்று பெருமைப்படுகிறார் அவர்."ஆரம்பத்தில் அதிகப் பேர் சேரவில்லை. ஆனால் வந்தவர்கள் அதை நேசித்தனர். அவர்களுடைய புன்னகை எங்களுக்கு உற்சாகமூட்டியது. வகுப்புகளை விரிவாக்கத் திட்டமிட்டோம்" என்கிறார் செந்தில். "நாங்கள் ஒரு வகுப்பைத் தொடங்க ஆன்லைனில் அறிவித்தால் இரண்டு நாளுக்குள் 50 பேர் சேர்ந்துவிடுகிறார்கள். எங்கள் முகநூல் பக்கத்தின் வழியே இன்றைக்கு 3000 பேர் எங்களை அறிந்திருக்கிறார்கள். இந்த வளர்ச்சியின் காரணமாக எங்களையொத்த பலரையும் உடன் சேர்ந்து பணியாற்ற அழைக்கிறோம்" என்று மேலே கூறுகிறார்.

ஆகஸ்ட் மாதத்தில் இவ்வமைப்பு 8 முதல் 13 வயது வரையிலான பெண் குழந்தைகளுக்கான ரோபோடிக்ஸ் செயல்பட்டறையை நடத்தியது. STEM துறைகளில் மகளிருக்குச் சரியான முன்மாதிரிகள் இல்லை, அதே நேரத்தில் பெண்களால் இதுதான் முடியும் என்பது போன்ற முன்தீர்மானங்கள் உள்ளன. இந்த பிம்பங்களை உடைத்து, தொழில்நுட்பம் மகளிருக்கும் ஏற்றதுதான் என்ற மனநிலையை ஏற்படுத்துவது எங்கள் குழுவினரின் நோக்கம் என்று தெளிவுபடுத்துகிறார் செந்தில்.தற்போது வகுப்புகள் நூலகங்களில் நடத்தப்படுகின்றன. இதன் காரணமாக அதிக மாணவர்களைச் சேர்க்க முடியவில்லை. "சிலிக்கான் வேலியிலுள்ள கம்பெனிகள் இடம் கொடுத்தால் எங்களுக்கு வசதியாக இருக்கும்" என்கிறார் செந்தில். 'எந்தக் காரணமும் கற்பதைத் தடுக்கக்கூடாது' என்பது இவர்களின் குறிக்கோள். அப்படி இருக்க, எதுவும் இவர்களின் வளர்ச்சியைத் தடுக்க முடியாது என்பது நிச்சயம்.

அதிகத் தகவலுக்கு:
வலைமனை: www.codeoneprogramming.com
முகநூல்: fb/codeoneprogramming
பங்கேற்க (மின்னஞ்சல்): thenusenthil23@gmail.com
செய்திக்குறிப்பிலிருந்து
Share: 
© Copyright 2020 Tamilonline