ப்ளேனோ தமிழ்ப்பள்ளி 16வது ஆண்டு விழா மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ச் சங்கம்: சித்திரைத் திருவிழா BATS: தமிழ்ப் புத்தாண்டு விழா டாலஸ்: கைவினைப் பொருள் காட்சி ஹூஸ்டன் பெருநகரத் தமிழ்ச்சங்கத் தொடக்க விழா TNF: மத்திய ஃப்ளோரிடா நிகழ்ச்சி டெக்சஸ்: பங்குனி உத்திரம் லட்சுமி தமிழ் பயிலும் மையம்: ஆண்டு விழா
|
|
நாடக விமர்சனம்: ஸ்ரீ இராமானுஜர் |
|
- |மே 2017| |
|
|
|
ஒரு சரித்திர நாடகத்தை மேடையேற்றுவது அவ்வளவு எளிதான காரியமல்ல. அதிலும், அமெரிக்க மண்ணில், ஆயிரம் வருடம் முன்னர் வாழ்ந்த ஒரு மகானின் வரலாற்றை நாடகமாகப் படைப்பது, மிகத்தேர்ந்த நாடகக் குழுக்களுக்கும் ஒரு சவாலே.
மார்ச் 4 அன்று, GoDivinity.org அமைப்புக்கு நிதி திரட்டும் முயற்சியாக, ஸ்ரீ இராமானுஜர் வாழ்க்கை வரலாற்றை மேடை நாடகமாகப் படைத்த, மீனாட்சி தியேட்டர்ஸ் குழுவினர் அந்தச் சவாலைக் களிப்புடன் ஏற்றுச் சாதனை படைத்தனர்.
எண்ணற்ற நூல்களை ஆராய்ந்து, ஸ்ரீ இராமானுஜரின் வரலாற்றை, இரண்டரை மணி நேரத்தில் உள்ளடக்கிய கதாசிரியர் சந்திரமௌளி பாராட்டுக்கு உரியவர். பக்திரசம் சொட்டும் வசனங்கள், ஆழ்ந்த கருத்துக்கள், கொஞ்சம் நகைச்சுவை என ஒரு நல்ல நாடகத்திற்கான அனைத்து அம்சங்களையும் சரியான விகிதத்தில் கலந்து, ஒரு கச்சிதமான மேடை நாடகத்தை அவர் உருவாக்கி இருந்தார்.
கதையை மெருகேற்றும் வகையில், நடித்த ஒவ்வொரு நடிகரும் அந்தக் காலத்துக்கேற்ற மொழியில் பேசி, தங்கள் கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்தனர். மேடையில் நடிப்பவர் மட்டுமல்லாது, நாடகத்துக்குப் பக்கபலமாக இருந்த பலரின் திறமை (ஒலி/ஒளி, காணொளி வடிவங்கள்) பார்வையாளரைப் பிரமிக்க வைத்தது. உழைப்பு, முயற்சி என்பதெல்லாம் தாண்டி நடிகர்களில் பலர் (குறிப்பாக மருத்துவர். சாரநாதன் அவர்கள்) இந்த நாடகத்திற்காக ஒரு தவம் போன்ற அர்ப்பணிப்பை அளித்திருப்பது கண்கூடு.
இது போன்ற நாடகத்தில் இசையின் பங்கு மிக முக்கியமானது. அதனை அறிந்திருந்த திருமதி. உமா ரங்கனாதன் மற்றும் திரு. GK, திருமதி. நளினியின் அழகான கவிதைகளுக்கு இசையும், நாடகத்துக்குப் பின்னணி இசையும் அருமையாக அமைத்திருந்தனர். |
|
இந்த நாடகத்திற்காக உருவாக்கி வழங்கப்பட்ட அந்தக் கையேடு சொல்லும் இவர்களின் உழைப்பை. ஒரு ஆராய்ச்சிக் கட்டுரையிலும் அதிகமான மேற்கோள்களுடன், ஸ்ரீ இராமானுஜர் பற்றிய அரிய தகவல்களைக் கொண்ட, பாதுக்காக்கப்பட வேண்டிய ஒரு பொக்கிஷம்.
கச்சிதமான திரைக்கதை, ஒரு திறமையான குழு (மேடையிலும், பின்னாலும்), அனைவரின் இமாலய உழைப்பு, தேர்ந்த இயக்கம், மற்றும் இராமானுஜரின் அருள், இவையனைத்தும் ஓன்றுசேர, நாடக அன்பர்களுக்குக் காணக் கிடைத்தது ஒரு மறக்கமுடியாத அனுபவம்.
இந்த நாடகத்தை நடத்தச் சிறந்த முறையில் ஆதரவு தந்து, நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த GoDivinity.org அமைப்பினருக்கு நன்றி. இந்த நாடகம் மேலும் பல ஊர்களில், பல மொழிகளில், பல மேடைகளைக் காண வாழ்த்துகிறோம். |
|
|
More
ப்ளேனோ தமிழ்ப்பள்ளி 16வது ஆண்டு விழா மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ச் சங்கம்: சித்திரைத் திருவிழா BATS: தமிழ்ப் புத்தாண்டு விழா டாலஸ்: கைவினைப் பொருள் காட்சி ஹூஸ்டன் பெருநகரத் தமிழ்ச்சங்கத் தொடக்க விழா TNF: மத்திய ஃப்ளோரிடா நிகழ்ச்சி டெக்சஸ்: பங்குனி உத்திரம் லட்சுமி தமிழ் பயிலும் மையம்: ஆண்டு விழா
|
|
|
|
|
|
|