ப்ளேனோ தமிழ்ப்பள்ளி 16வது ஆண்டு விழா மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ச் சங்கம்: சித்திரைத் திருவிழா BATS: தமிழ்ப் புத்தாண்டு விழா ஹூஸ்டன் பெருநகரத் தமிழ்ச்சங்கத் தொடக்க விழா TNF: மத்திய ஃப்ளோரிடா நிகழ்ச்சி டெக்சஸ்: பங்குனி உத்திரம் லட்சுமி தமிழ் பயிலும் மையம்: ஆண்டு விழா நாடக விமர்சனம்: ஸ்ரீ இராமானுஜர்
|
|
|
|
ஏப்ரல் 15, 2017 அன்று டாலஸ் ஸ்ரீ ராதா கலாசந்த்ஜி கோவில் நிர்வாகம் 'Jay's Craft Bazaar' என்ற கைவினைப் பொருள் கண்காட்சி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. இந்த விற்பனையில் திரட்டப்பட்ட நிதி TKG அகாடமி பள்ளியின் வளர்ச்சித் திட்டத்துக்கு வழங்கப்பட்டது. இர்விங் டெக்சஸில் வாழும் கைவினைக் கலைஞரான திருமதி. ஜெயஸ்ரீ கிருஷ்ணன் தமது படைப்புகளை இதில் காட்சிக்கும் விற்பனைக்கும் வைத்திருந்தார். அக்ரிலிக் ஓவியங்கள், வாழ்த்து அட்டைகள், பாலிமர் நகைகள், சுடுமண் விளக்குகள், ஜப்பானிய ஓஷி கைவினைப் பொருட்கள் ஆகியவற்றை இதற்கெனத் தயாரித்திருந்தார்.
ISKCON அமைப்பை நிறுவிய பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் அவர்களின் ஆசிகளோடு மேற்கத்திய உலகில் நிறுவப்பட்ட முதல் குருகுல முறையில் அமைந்த பள்ளியாகும் இந்த TKG அகாடமி. இத்தகைய குருகுலப் பள்ளிகளை உலகெங்கிலும் நிறுவியது அவரது மிக முக்கியப் பணிகளில் ஒன்றாகும். |
|
செய்திக்குறிப்பிலிருந்து |
|
|
More