அமெரிக்காவில் ஜல்லிக்கட்டு ஆதரவுப் பேரணிகள் நாம் தமிழ்ச் சங்கம்: பொங்கல் விழா மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ச் சங்கம்: பொங்கல் விழா BATM: பசுமைப்போராளி ரேவதி உரை சான் டியகோ: பாரதி கலைவிழா லலிதா சஹஸ்ரநாம கோடியர்ச்சனை
|
|
அரோரா: வறியோர்க்கு உணவு |
|
- வ. ச. பாபு|பிப்ரவரி 2017| |
|
|
|
|
ஜனவரி 15, 2017 அன்று நண்பகல் அமெரிக்கத் தமிழ்ப்பள்ளிகள், உலகத்தமிழ்மொழி அறக்கட்டளை, இடைமேற்கு மாநிலத் தமிழ்ச்சங்கம் ஆகிய மூன்று அமைப்புக்களும் இணைந்து இவ்வாண்டின் முதலாவது 'வறியோர்க்கு உணவு' நிகழ்வை
Hesed House (659 S. River Road, Aurora, IL:60506) இல்ல வாசிகளுக்கென நிகழ்த்தின. சிகாகோ தமிழ்ச் சிறார் தம் பெற்றோர்களுடன் இதில் பங்கேற்றனர். திருக்குறளின் 4 அதிகாரங்களின் விளக்கமும், மானுடர் வாழ்வாதாரமான ஆதவனுக்கும், மண்ணுக்கும், உழவர்க்கும், காளை மற்றும் ஆவினத்துக்கும், உற்றார்க்கும், சுற்றத்தினருக்கும் நன்றிகூறும் நான்கு நாட்களின் பெருமைகூறும் விவரமும், தமிழ் மண்ணின் பெருமை கூறிச்சென்ற பழம்பெரும் வெளிநாட்டறிஞர் சிறப்புரைகள் அடங்கிய சிறு தொகுப்பும் அளிக்கப்பட்டன. |
|
பங்கேற்ற தமிழ்ப்பள்ளி மாணக்கர்கள் அரிணி, உரோகித்து, ஏரகன், சாசுலின், சுபாசு, சுருதி, மிதா, முகில் மற்றும் விசால் அவர்தம் பெற்றோர் சங்கீதா, செளந்தர், பிரியா, பாலசந்தர், சிகந்தா, செல்வம், டேவிடு மற்றும் பாபு ஆகியோருக்கு இல்லவாசிகள் நன்றி கூறினர்.
வ.ச. பாபு, இல்லினாய்ஸ், சிகாகோ |
|
|
More
அமெரிக்காவில் ஜல்லிக்கட்டு ஆதரவுப் பேரணிகள் நாம் தமிழ்ச் சங்கம்: பொங்கல் விழா மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ச் சங்கம்: பொங்கல் விழா BATM: பசுமைப்போராளி ரேவதி உரை சான் டியகோ: பாரதி கலைவிழா லலிதா சஹஸ்ரநாம கோடியர்ச்சனை
|
|
|
|
|
|
|