அரங்கேற்றம்: சினேகா நாராயணன் மதுரகவீஸ்: 'கண்ணன் கழலிணை' நாமக்கல் செ. முத்துசாமிக்கு அமெரிக்காவில் விருது! சிகாகோ: இசைத் திருவிழா ஐ.நா. அமைதி தின விழாவில் அமெரிக்கத் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் தமிழ் அறக்கட்டளை: 'ஐந்திணை' ATMA: 12வது தேசிய மாநாடு அரங்கேற்றம்: அஞ்சனா ராஜாமணி
|
|
|
|
செப்டம்பர் 25, 2016 அன்று நந்தலாலா சிறுவர் சங்கத்தைச் சேர்ந்த 30 குழந்தைகள் Kids against Hunger நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இதற்காக இவர்கள் 5184 உணவுப்பொருள் பொட்டலங்களைத் தயாரித்து அளித்தனர். கடந்த வருடத்தில் 61,344 பொட்டலங்களை இவர்கள் தயாரித்து அளித்தனர்.
சங்கம் ஒவ்வொரு மாதமும் விரிகுடாப் பகுதியில், உலகெங்கிலும் பசியினால் வாடும் குழந்தைகளுக்காக உணவுப்பொருள் பொட்டலங்களைத் தயாரிக்கும் பணியில் ஈடுபடுகிறார்கள். Kids against Hunger ஒரு தேசிய அமைப்பாகும். அது 16 அமெரிக்க மாநிலங்கள் மற்றும் கனடாவில் இயங்கி வருகிறது. விரிகுடாப் பகுதி அலுவலகத்தில் தயாரிக்கப்படும் உணவுகள் ஹைதி, ஃபிலிப்பைன்ஸ் நாடுகளுக்கு அனுப்பப்படுகிறது. இந்தப் பொட்டலத்தில் சோயா, உலர்ந்த காய்கறிகள், வைட்டமின் பவுடர் மற்றும் அரிசி ஆகியவை இருக்கும். இவை சுலபமாகச் சமைக்கும் வகையில், ஊட்டக்குறைபாடு கொண்ட வயிறு சீரணிக்க ஏற்றதாக இருக்கும். |
|
நந்தலாலா சிறுவர் சங்கம் 2013 அக்டோபரில் சான் ரமோனில் துவங்கப்பட்டது. இங்குள்ள சிறுவர்களிடம் இந்தியக் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் பற்றிய புரிதலும், செயல்பாடும் இருக்கவேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்டது. மாதமிருமுறை சிறுவர்கள், சிறுமியர் ஒன்றுகூடி சுலோகங்கள், யோகமுறைகள், இந்தியப் புராணக்கதை கேட்டல், வரலாறு, கலை மற்றும் கைவினைப் பொருட்கள் செய்தல் போன்றவற்றில் ஈடுபடுவார்கள்.
மேலும் அறிய: nandalala.com/nandalala-childrens-club-2
செய்திக் குறிப்பிலிருந்து |
|
|
More
அரங்கேற்றம்: சினேகா நாராயணன் மதுரகவீஸ்: 'கண்ணன் கழலிணை' நாமக்கல் செ. முத்துசாமிக்கு அமெரிக்காவில் விருது! சிகாகோ: இசைத் திருவிழா ஐ.நா. அமைதி தின விழாவில் அமெரிக்கத் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் தமிழ் அறக்கட்டளை: 'ஐந்திணை' ATMA: 12வது தேசிய மாநாடு அரங்கேற்றம்: அஞ்சனா ராஜாமணி
|
|
|
|
|
|
|