மாயா ராமச்சந்திரன் நடன அரங்கேற்றம் தென் கலி·போர்னியாவில் இன்னிசைத் தமிழ் மாலை சுவாமி சுகபோதானந்தாவின் கீதை காட்டும் வழி வளைகுடாப் பகுதித் தமிழ்மன்றம் சுதந்திரதினக் கொண்டாட்டம் தமிழர் புனர்வாழ்வுக் கழகம் வழங்கிய இன்னிசை மாலைகள் அம்லு நடேசன் பரத நாட்டிய அரங்கேற்றம்
|
|
|
இரு வாரங்களாகக் கடுமையாகச் சுட்டெரித்த சூரிய வெப்பத்தைத் தணிக்கும் வகையில் கோடை மழையெனக் கொட்டித் தீர்த்தனர் சிகாகோவின் இளஞ்சிட்டுக்கள். ஜூலை 9, 2005 அன்று லெமாண்ட் இந்து கோயில் வளாகத்தில் உள்ள ரதி அரங்கத் தில் நடந்த மெல்லிசை நிகழ்ச்சியைத்தான் சொல்கிறேன்.
தேவுடாவில் தொடங்கி மாசி மாதத்துக்குப் போய், பத்துக்குள்ளே வந்து, நறுமுகையைத் தொட்டு காதல் வளர்த்து சிங்களத்துச் சின்னக்குயிலாகத் தித்திக்குதே என்று சொல்ல வைத்தனர் பாடிய ரவிசங்கர், பரத், திவ்யா, ஸ்வேதா, கௌரவ், சாய்ராம், ஜெயஸ்ரீ, பரணி, சரண்யா, ரமா, அம்ருதா ஆகியோர்.
அடுத்ததுப் பாடிய ரவிச்சந்திரன், சங்கீதா, பவித்ரா மாங்குயிலைத் தொட்டுப் பூவில் புதுவிதமாக மலர்ந்தனர் (new mix). காலங்களில் அவள் வசந்தமாக வந்த நவீனை 'ஒன்ஸ் மோர்' என்று ஆர்ப்பரித்து வரவேற்றனர் ரசிகர்கள். முன் பாடிய சிலருடன் ஹம்மா என்று இச்சுத்தாவை ஒரு வார்த்தையில் கேட்டு பேட்டை ராப்பை அப்படிப் போடு என்று போட்டவர்கள் ரங்கா, பரத், மயூரி, பவித்ரா ஆகியோர்.
இடைவேளையின் போது சுவையான உணவு அளித்தது ஸ்வாகத். (தமிழ்ச் சங்க உறுப்பினர்கள் அடையாள அட்டையைக் காண்பித்து ஸ்வாகத்தில் எப்போதும் 10% சலுகை பெறலாம்.)
உண்ட மயக்கத்தில் வந்து அமர்ந்தவர் களைத் தன் புல்லாங்குழல் இசையினால் உயிரே உயிரே என்ற பாட்டினால் உயிர் கொடுத்து எழுப்பினார் கார்த்திக். சின்னஞ் சிறு வயதில் பாடிய திவ்யா, நவீனுக்கு இணையாகப் பாடி நிகழ்ச்சிக்குச் சிறப்பு சேர்த்தார். சந்தக் கோழியாக கூவி அசத்தினார் பவித்ரா. ஒஹோ எந்தன் பேபியைக் கொஞ்ச நேரம் கொஞ்சி, வெள்ளைக்கார முத்தமிட்டு, கோழி கொக்கரக்கோ என்றும் அனு, ஜெயராம், மயூரி, மைனாவே மைனாவே என்றும் வசீகரமாகப் பாடி நூதனமாக முஸ்தபாவுடன் ஆடிக்களித்தனர் வயது வித்தியாசமின்றி, வந்திருந்த பார்வையாளர்கள்.
நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்த் திரையுலகில் பின்னணிப் பாடகியாக முன்னணியில் நின்ற பி. சுசீலாவையும் எல்.ஆர். ஈஸ்வரியையும் பார்த்த ஞாபகம் இல்லையோ, பளிங்கினால் ஒரு மாளிகை, இலந்தைப் பழம் ஆகிய பாடல்களைப் பாடி நினைவுக்குக் கொண்டு வந்தனர் ரமா ரகுராமும் பவித்ராவும். ரஜனி நடித்த பிரபலமான படங்களிலிருந்து சில பாடல் களைப் பாடி ரசிகர்களைக் கிறக்கினார் ரவி. |
|
மெல்லிசை நிகழ்ச்சியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தவர்கள் வாத்தியக் குழுவைச் சேர்ந்த ஷினூவும் அவரது குழுவினரும். இந்த நிகழ்ச்சியில் பாடியவர் களுக்கும், உதவி செய்தவர்களுக்கும், சிறப்பு விருந்தினராக வந்திருந்த நடிகை ராஜ சுலோசனா சான்றிதழ் வழங்கினார்.
சிகாகோ தமிழ்ச் சங்கத்தின் இந்த நிகழ்ச்சியை மிக நேர்த்தியாக நடத்தித் தந்த ரகுராமனும் அவருக்கு உதவி புரிந்த வீரா, க்ருஷ் மற்றும் சேஷ் மிகவும் பாராட்டுக் குரியவர்கள். தமிழ்ச் சங்க நிர்வாகிகள் எல்லோருக்குமேதாம்.
எஸ்டேட் சுபி |
|
|
More
மாயா ராமச்சந்திரன் நடன அரங்கேற்றம் தென் கலி·போர்னியாவில் இன்னிசைத் தமிழ் மாலை சுவாமி சுகபோதானந்தாவின் கீதை காட்டும் வழி வளைகுடாப் பகுதித் தமிழ்மன்றம் சுதந்திரதினக் கொண்டாட்டம் தமிழர் புனர்வாழ்வுக் கழகம் வழங்கிய இன்னிசை மாலைகள் அம்லு நடேசன் பரத நாட்டிய அரங்கேற்றம்
|
|
|
|
|
|
|