கனடா தமிழ் இலக்கியத் தோட்டம்: இயல் விருது விழா அமரர் எஸ்.பொ. நினைவு அனைத்துலக குறுநாவல் போட்டி அருண் சிதம்பரத்திற்கு ரெமி விருது மினசோட்டா தமிழ்ப்பள்ளி: இருமொழிமுத்திரை மனதுக்கொரு ரிமோட் கண்ட்ரோல்
|
|
|
|
புதுச்சேரியைச் சேர்ந்த சசிபிரபா கார், பஸ், ஆட்டோ முதல் லாரி, டிப்பர் லாரி, ஜே.சி.பி., கிரேன், ட்ராக்டர், பொக்லைன் என கனரக வாகனங்கள்வரை இயக்கும் திறன்மிக்கவராக இருக்கிறார். கடலில் தனியாகப் படகு செலுத்திச் சாதனை செய்திருக்கிறார். புதுச்சேரி, தாவரவியல் பூங்காவில் சிறுவர்களுக்கான குட்டி ரயிலை ஓட்டியிருக்கிறார். "என் தந்தை, 'ஆண்பிள்ளைகள் மட்டும்தான் எல்லாவகை வண்டியும் ஓட்டமுடியுமா, பெண்களும் ஓட்டமுடியும்' என்று சொல்லி, எல்லா வாகனங்களையும் ஓட்ட கற்றுக்கொடுத்தார். 16 வயதிலேயே பொக்லைன் ஓட்டக் கற்றுக்கொண்டேன். கனரக வாகனங்களுக்கான லைசென்சை 2004ம் ஆண்டில் பெற்றேன்" என்கிறார் சசிபிரபா பெருமையோடு.
பரதநாட்டியம், வயலின், மிருதங்கம், கராத்தே, நீச்சல் என அனைத்திலும் தேர்ந்தவர் சசிபிரபா. ஹெலிகாப்டர், விமானம் ஓட்டவேண்டும் என்பதுதான் இவரது லட்சியமாம்! "பற, பற, மேலே பற" என்று நாமும் வாழ்த்துவோம். |
|
|
|
|
More