Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
July 2016 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | சிறப்புப்பார்வை | வாசகர் கடிதம் | சமயம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | அஞ்சலி | Events Calendar | பொது | நலம்வாழ | முன்னோடி
Tamil Unicode / English Search
பொது
கனடா தமிழ் இலக்கியத் தோட்டம்: இயல் விருது விழா
சசிபிரபா
அருண் சிதம்பரத்திற்கு ரெமி விருது
மினசோட்டா தமிழ்ப்பள்ளி: இருமொழிமுத்திரை
மனதுக்கொரு ரிமோட் கண்ட்ரோல்
அமரர் எஸ்.பொ. நினைவு அனைத்துலக குறுநாவல் போட்டி
- செய்திக்குறிப்பிலிருந்து|ஜூலை 2016|
Share:
ஆஸ்திரேலியாவில் இருந்து செயற்படும் அக்கினிக்குஞ்சு இணையதளம், மறைந்த மாபெரும் எழுத்தாளரும், அக்கினிக்குஞ்சு இணையதளத்தின் பிரதம இலக்கிய ஆலோசகராக இருந்தவருமான எஸ்.பொ. அவர்களின் இரண்டாவது நினைவினையொட்டி அனைத்துலகக் குறுநாவல் போட்டியை அறிவித்துள்ளது.

பொதுவிதிகள்
* உலகெங்கும் வாழும் தமிழ் பேசும், எழுதும் எவரும் போட்டியில் பங்குபெறலாம்.
* ஒருவர் ஒரேயொரு குறுநாவலை மட்டுமே அனுப்பிவைக்கலாம்.
* குறுநாவல் யூனிகோட் (Unicode) எழுத்துருவில், மின்னஞ்சல் இணைப்பாக Microsoft Word கோப்பாக அனுப்பப்பட வேண்டும்.
மின்னஞ்சலின் subject-ல் 'எஸ்.பொ நினைவுக் குறுநாவல் போட்டி- 2016' எனக் குறிப்பிட்டு, அஞ்சலின் உட்பகுதியில் குறுநாவலின் தலைப்பு, போட்டியாளரின் பெயர், முகவரி, தொலைபேசி இலக்கம் தரப்படல் வேண்டும். போட்டியாளரின் புகைப்படம், மற்றும் சிறுகுறிப்பு இணைத்தல் வேண்டும்.
* போட்டியாளரின் சொந்தப் படைப்பாக இருத்தல் வேண்டும். அனுப்பப்படும் குறுநாவல் ஏற்கனவே வேறு போட்டிகளுக்கு அனுப்பப்பட்டதாகவோ, பிரசுரிக்கப்பட்டதாகவோ அல்லது வெளியிடப்பட்டதாகவோ இருத்தல் கூடாது.
* போட்டிக் குறுநாவல்களை இணையத்தளங்களில் பிரசுரிக்கவும், நூலாக வெளியிடவும் அக்கினிக்குஞ்சு நிர்வாகத்தினருக்கு உரித்துண்டு.
* குறுநாவல் 4,000 வார்த்தைகளுக்குக் குறையாமலும் 8,000 வார்த்தைகளுக்குக் கூடாமலும் அமைதல் வேண்டும்.
* அக்கினிக்குஞ்சு நடுவர் குழுவின் தீர்ப்பே இறுதியானது.
பரிசு விபரங்கள்
முதலாம் பரிசு: 400 ஆஸ்திரேலிய வெள்ளி
இரண்டாம் பரிசு: 350 ஆஸ்திரேலிய வெள்ளி
மூன்றாம் பரிசு: 250 ஆஸ்திரேலிய வெள்ளி
சிறப்புப் பரிசுகள் (ஐந்து): 150 ஆஸ்திரேலிய வெள்ளி.

முடிவுத்தேதி: செப்டம்பர் 30, 2016 (இத்தேதிக்கு முன்னர் கிடைக்கும்படி அனுப்பிவைக்க வேண்டும்.)
போட்டி முடிவுகள் 2016 கார்த்திகை மாதம் அக்கினிக்குஞ்சு இணையதளத்தில் வெளியிடப்படும்.

அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி: real24news@hotmail.com
மேலதிக விபரங்களுக்கு: www.akkinikkunchu.com

செய்திக்குறிப்பிலிருந்து
More

கனடா தமிழ் இலக்கியத் தோட்டம்: இயல் விருது விழா
சசிபிரபா
அருண் சிதம்பரத்திற்கு ரெமி விருது
மினசோட்டா தமிழ்ப்பள்ளி: இருமொழிமுத்திரை
மனதுக்கொரு ரிமோட் கண்ட்ரோல்
Share: 




© Copyright 2020 Tamilonline