Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
November 2006 Issue
பதிப்புரை | நேர்காணல் | மாயாபஜார் | நிதி அறிவோம் | முன்னோடி | தமிழக அரசியல் | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | புதிரா? புரியுமா? | சிறுகதை
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | விளையாட்டு விசயம் | சினிமா சினிமா | Events Calendar
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள் - நடந்தவை
விக்ரம் பிரகாஷின் கர்நாடக இசை அரங்கேற்றம்
வளைகுடா பகுதி தமிழ் விளையாட்டு மையம் நடத்திய போட்டிகள்
ஆஷா நிகேதனின் நிதி திரட்டு நிகழ்ச்சி
யுவபாரதி - நந்திதா ஸ்ரீராம் பரதநாட்டியம்
விபா சுப்ரமணியம் நாட்டிய அரங்கேற்றம்
இலங்கைத் தமிழ் சங்கம் 29 ஆவது ஆண்டு விழா
தமிழ்நாடு அறக்கட்டளையின் நிதி பெருக்கும் விழா !
- |நவம்பர் 2006|
Share:
Click Here Enlargeஅக்டோ பர் 14, சனிக்கிழமையன்று தமிழ்நாடு அறக்கட்டளையின் (TNF) சார்பில் Ohio Tri C Metro வளாகத்தில் நடன நிகழ்ச்சி நடத்தப்பட்டது. மக்களின் தாராளமான நன்கொடையும், ஆதரவும் இந்த நிகழ்ச்சிக்கு மிகவும் உதவியாக இருந்தது.

பாரம்பரிய நடனக்கலைகளான பரத நாட்டியம் மற்றும் ஒடிசி நடனங்களை இரு நடனக்கலைஞர்கள் கண்களுக்கு விருந்தாக்கினர். பரதநாட்டியம் மூலம் நம்மை மெய்மறக்க வைத்தார் 17 வயதான செல்வி. பூஜா குமார் அவர்கள். இவரின் நடனத் திறமையைப் பார்த்து வியந்துபோன மக்களுக்கு, இவரின் வயதைக் கேட்டதும் இன்னும் மலைப்பானது ஆச்சரியமில்லை! ஒருவருக்கொருவர் சலைத்தவர்களா நாங்கள் என்று கேட்பது போல், மக்களை அதிசயக்க வைத்தார் 16 வயதேயான செல்வி. தீபாஞ்சனா தாஸ். ஒடிசி நடனத்தின் ஒவ்வொரு பகுதியையும் முத்திரையிட்டுக்காட்டி, அரங்கம் முழுவதையும் அசரவைத்தார் தீபாஞ்சனா. வயது எங்களுக்கு வரம்பல்ல என்று சொல்லாமல் சொல்லி... இல்லையில்லை, நடனமாடிச் சென்றனர் பூஜாவும், தீபாஞ்சனாவும்.

இரண்டு மணி நேரம் நடைபெற்ற இந்த விழாவிற்கு, ஒஹையோவின் Attorney General பதவிக்கு போட்டியிட்ட திரு. சுபோத் சந்ரா தலைமை தாங்கினார். தன் தலைமை உரையில், இந்தியப் பழங்கலைகளின் பாரம்பரியத்தையும், கலை, கலாச்சாரத்தைப் பேணிக் காப்பதைப் பற்றியும் மற்றும் ஏழைக்குழந்தைகளுக்கு பள்ளிக்கல்வியின் அவசியத்தையும் அறிவுறுத்தினார்! தமிழ்நாடு அறக்கட்டளையின் சார்பாக பேசிய டாக்டர். ராம் மோகன், மாணவர்களுக்கு கல்வி மேம்பாடும், ஆதரவும் அளிக்க அமைக்கப் பட்டுள்ள திட்டவழிவகைகளைப் விளக்கிக் கூறினார். தமிழ்நாடு அறக் கட்டளையின் மற்ற தொண்டுப் பணிகளைப் பற்றிக் கூறியதுடன், விழா இனிதே நிறைவு பெற்றது.

காட்டுவழி நடப்போம்... கல்விநிலை பெறுக்க கடும்துணை புரிவோம் ! 5th Annual Indo-American Trek-A-Thon

இந்தியாவின் கிராமப்பகுதியில் வாழும் இளம் சிறுமியர்களின் கல்விநிலையை மேம்படுத்தும் திட்டத்திற்கு நிதி பெருக்க, நூற்றுக்கும் மேற்பட்ட இந்திய-அமெரிக்க சமூகத்தினர், பூங்காவழி நடக்கும் நிகழ்ச்சியில் (Trek-A-Thon) பங்கேற்றனர். தமிழ்நாடு அறக்கட்டளையின் (TNF) பிலடெல்பியா கிளையும், Gertrude Lane அறக்கட்டளையும் சேர்ந்து அமைத்த இந்த நிகழ்ச்சி, Lane அறக்கட்டளையின் குறிக் கோளான "ஒவ்வொரு நாட்டின் ஒவ்வொரு குழந்தைக்கும் கல்வி" என்ற கருத்தை மையமாக வைத்தே நடத்தப்பட்டது.
Click Here Enlargeநிகழ்ச்சியில் பங்கேற்க வந்தவர்களையும், பார்வையாளர்களையும் வரவேற்றுப்பேசிய Lane அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் பொறுப்பாளரான Renee Love, ஆண்டுதோறும் நடக்கும் இந்த "வழி நடை" நிகழ்ச்சியையும், அதில் தமிழ்நாடு அறக்கட்டளையின் பங்கைப் பற்றியும் புகழ்ந்து பேசினார். ஒவ்வொரு ஆண்டும், இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போவதைப்பற்றி பெருமையுடன் பேசினார். மேலும் தன்னோடு சேர்ந்து, 13 குழந்தைகளைப் பெற்றெடுத்த தன்னுடைய தாயார் Gertrude மனதிலே விதைத்த நல்லெண்ணங்களை நினைவு கூர்ந்த Renee Love, உலகத்தில் கல்வி நிலையை மேம்படுத்தும் திட்டங்களைப் பெருக்குவதே தன் தாயின் கனவு என்றும் கூறினார்.

Lane அறக்கட்டளையின் அறிவுரையாளர் Florence Bazhaw, பேசுகையில் "சிறுமியருக்கு விசுப்பலகை" திட்டத்தைப்பற்றியும், அதனால் தமிழ்நாட்டில் உள்ள 'பொம்முடி' என்ற கிராமம் எப்படிப் பயன்பெறுகிறது என்பதை விளக்கிக் கூறினார். வரும் வசந்தகாலத்தில் இந்தியாவிற்கு பயணம் செய்யப்போவதாகவும், அந்தப் பயணத்தின்போது மற்றும் பல நல்ல திட்டங்களைப்பற்றி ஆராய இருப்பதாகவும் கூறினார். தமிழ்நாடு அறக்கட்டளையின் (TNF) பிலடெல்பியா கிளையின் உதவித் தலைவர் சுந்தரி விஸ்வநாதன் உரையாற்றிய போது, மிகவும் நலிந்த பொருளாதார நிலை, அதிகரித்துக் கொண்டிருக்கும் பெண்சிசு நிராகரிப்பு ஆகியவையே பொம்முடி கிராமத்தைத் தேர்ந்தெடுக்க பலத்த காரணங்களாகும். எழுது மேசை, உட்காரும் பலகைகள் மற்றும் புத்தகங்கள் சிறுமியர்களின் கல்விநிலையை உயர்த்துவதோடு அவர் களுக்குள் 'தனித்துவத்தையும்' கொண்டுவரும் என்று நம்பிக்கையோடு பேசினார்.

தமிழ்நாடு அறக்கட்டளையின் (TNF) பிலடெல்பியா கிளையின் தலைவர், சோமலை சோமசுந்தரம் அவர்கள் பேசுகையில், கல்விநிலை வளர்ச்சியில் Lane அறக் கட்டளையின் பங்கையும், இந்த 'பூங்காவழி நடத்தல்' நிகழ்ச்சிமூலம் ஒருங்கிணைப்பைக் காண்பதில் பெருமைப்படுவதாகவும் கூறினார். ஆண்டுதோறும் இந்த நிகழ்ச்சி தொடரு மென்றும் தெரிவித்த சோமசுந்தரம் இந்த இரு அறக்கட்டளைகளின் கூட்டமைப்பும், அயராத ஈடுபாடும், பல கிராமங்களின் கல்விநிலையை உயர்த்தும் என்பதில் எந்தவித சந்தேகமு மில்லை என்று ஆணித்தரமாகக் கூறினார்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற மக்கள் Ridley Creek State Park-ன் (Media, PA) வழி நடந்து, இயற்கையை ரசித்ததோடு, திட்டத்திற்கு தாராளமாய் நிதியுதவியும் வழங்கினார்கள். தான் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும், அடிமட்டத்தில் இருக்கும் ஒரு சிறுமியின், இளம் பெண்ணின் கல்வி நிலையும், தன்மானமும் உயரப்போகிறது என்ற பெருமிதம் அவர்கள் முகத்தில் மட்டுமல்ல, அகத்திலும் தெரிந்ததை உணர முடிந்தது.

அறக்கட்டளைகளைப் பற்றி மேலும் அறிய: som48346@yahoo.com

தமிழ்வடிவம்: கோபால் குமார்
More

விக்ரம் பிரகாஷின் கர்நாடக இசை அரங்கேற்றம்
வளைகுடா பகுதி தமிழ் விளையாட்டு மையம் நடத்திய போட்டிகள்
ஆஷா நிகேதனின் நிதி திரட்டு நிகழ்ச்சி
யுவபாரதி - நந்திதா ஸ்ரீராம் பரதநாட்டியம்
விபா சுப்ரமணியம் நாட்டிய அரங்கேற்றம்
இலங்கைத் தமிழ் சங்கம் 29 ஆவது ஆண்டு விழா
Share: 




© Copyright 2020 Tamilonline