காசி அல்வா
|
|
|
|
தேவையான பொருட்கள் கேப்பை மாவு - 1 கிண்ணம் வெல்லம் -1 1/2 கிண்னம் தேங்காய்த்துருவல் - 1/2 கிண்ணம் பாதாம் சீவியது - தேவைக்கேற்ப முந்திரி - தேவைக்கேற்ப கிஸ்மிஸ்/உலர்திராட்சை - தேவைக்கேற்ப நெய் - 4 அல்லது 5 மேசைக்கரண்டி
செய்முறை ஒரு தேக்கரண்டி நெய்யில் கேப்பையை வாசனை வரும்வரை வறுக்கவும். வெல்லத்தை நீர்விட்டுக் கரையவைத்து வடிகட்டிக் கொள்ளவும். மீண்டும் இதைச் சூடுசெய்து கேப்பை மாவைக் கொட்டி, சுருள வரும்வரை நெய் சேர்த்துக் கிளறவும். தேங்காய்த்துருவல் சேர்த்துக் கிளறி இறக்கவும். இதனுடன், நெய்யில் வறுத்த முந்திரி, கிஸ்மிஸ், பாதாம் இவற்றைச் சேர்க்கவும். சுவையான சத்தான கேப்பை அல்வா இதோ உங்களுக்காக!
குறிப்பு கேப்பை மாவு நார்ப்பொருள், கால்சியம், பாஸ்ஃபரஸ் போன்ற தாதுப்பொருட்கள், புரதச்சத்து ஆகியன அடங்கியது. வெல்லம், இரும்புச்சத்து, பொட்டாசியம், கால்சியம் போன்றவற்றைக் கொண்டது. |
|
கோமதி ஜானகிராமன், சான் ஹோசே, கலிஃபோர்னியா |
|
|
More
காசி அல்வா
|
|
|
|
|
|
|