Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
December 2015 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | முன்னோடி | சமயம் | வாசகர் கடிதம்
அஞ்சலி | சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | பொது | சாதனையாளர் | நலம்வாழ | எனக்குப் பிடித்தது
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கவிதைப்பந்தல் | அமெரிக்க அனுபவம்
Tamil Unicode / English Search
எனக்குப் பிடிச்சது
பேலியோ டயட் பயணம்
- மைதிலி தியாகு|டிசம்பர் 2015|
Share:
Click Here Enlargeகல்லூரிக்காலத்தில் எங்கே, எப்போது எடை பார்த்தாலும் 42 கிலோதான் இருக்கும். நியாயமான எடைதான். எந்தக் கடவுளிடமும் எனது முதல் வேண்டுதலே உடலின் எடை அதிகரிக்க வேண்டும் என்றுதான் இருக்கும். மென்பொருள் நிறுவனத்தில் வேலை கிடைத்து, உட்கார்ந்தபடியே வேலை பார்த்ததாலோ என்னவோ எடை ஏறிக்கொண்டே போனது. வேலைப்பளுவில் உடல் பளு கவனிக்கப்படவில்லை. பிறகு திருமணம், அமெரிக்காவில் குடியேற்றம் என்று காலம் உருண்டோடியது. அமெரிக்காவில் குடியேறியது நியூஜெர்சி மாநிலத்தில். வருடத்தில் 4-5 மாதங்கள் பனி பெய்யும் இடம் என்பதால், வாசல்படியில் கார் ஏறி, இறங்குவதும் வாசல்படியில் என்றாகிவிட்டது. பிறகு வீட்டினுள்ளேயே சாப்பிடுவதும், தூங்குவதுமாக இருந்தால் என்ன நடக்கும்? மேலும் எடை கூடியது, பாதத்தில் வலி வந்தது. மருத்துவரிடம் போனால் விட்டமின் டி குறைவு என்றார். மனம் சோர்வடைந்தது.

சுறுசுறுப்பாக டேபிள் டென்னிஸ் விளையாடி, மாநில அளவில் வெற்றி பெற்றவள், ஏதாவது புது விஷயங்களில் ஈடுபட்டுச் சாதித்துக் கொண்டிருந்த எனக்கு என்னையே எனக்குப் பிடிக்காமல் போனது. பிறகு வெயில்காலத்தில் நடை, ஓட்டம், உடற்பயிற்சி, நீச்சல் என்று ஆரம்பித்து 1-2 கிலோவரை மட்டுமே குறைக்க முடிந்தது. நான்கு வருடங்கள் ஆகியும் எடை அதிகரித்ததே தவிர குறையவே இல்லை.

நான்கு வருடங்கள் கழித்துக் கருவுற்றதில், சுகப்பிரசவத்திற்காக 26 மணி நேரம் முயற்சித்து, முடியாமல், அவசர அறுவைசிகிச்சை மூலம் அழகான பெண்குழந்தை பிறந்ததது. பிரசவிக்க அதிகநேரம் எடுத்ததால், அதிக ரத்த இழப்பு! இதற்கான சிகிச்சைகள் மேற்கொண்டதாலும், குழந்தைக்குத் தாய்ப்பால் மட்டுமே கொடுக்க நான் நிறைய உணவு எடுத்ததாலும் எடை கிட்டத்தட்ட நூறு கிலோவைத் தொட்டது. திரும்ப எடையைக் குறைக்க உருண்டு புரண்டும் ஒன்றும் பலனில்லை. அழகுக்காக அல்ல. என்னை பயமுறுத்தியவை கால்வலியும், சில உடல் உபாதைகளும்தான்.

அப்படித்தான் ஆரோக்கியத்துக்கான தேடல் துவங்கியது. முகநூலில் திருநாவுக்கரசு இரத்தினம் என்பவரின் எடையிழப்பு ஃபோட்டோக்களைப் பார்த்து, இது சாத்தியமா என்று கேட்டேன். அவர் "ஆரோக்கியம் & நல்வாழ்வு" என்ற முகநூல் பக்கத்தைக் காண்பித்தார். அங்கு புதிதாக இணைபவர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் "முன்னோர் உணவு" என்னும் நூலையும் படிக்கச் கூறினார். அதை எழுதியவர் 'நியாண்டர் செல்வன்'.

நூலைப் படித்து முடிப்பதற்குள் வேர்த்துவிட்டது. "குப்பை உணவுகளைத் தவிருங்கள்" போன்றவை சரிதான். குறைந்த காரம் மற்றும் அதிகக் கொழுப்பு உணவுமுறைக்கு ஏனோ மனம் ஒப்பவில்லை. நாம் இத்தனை நாளாக நல்லதென்று சாப்பிட்டதை நிறுத்திவிட்டு, கெட்டதென்று ஒதுக்கியவற்றை உண்ணச் சொன்னால் மனம் பீதியடையத்தானே செய்யும்? நூலகத்துக்குப் போய் பேலியோ பற்றிய புத்தகங்களைத் தேடியெடுத்து வாசித்தேன். நம்பிக்கை கூடியது. முகநூல் குழுவின் திருநாவுக்கரசு நடத்தும் மாதாந்திர டயட் ஈவென்ட்டில் கலந்துகொண்டு, நியாண்டர் செல்வன், கோகுல் குமரன் ஆகியோரின் டயட் பரிந்துரைகளை கறாராகக் கடைப்பிடித்து சில மாதங்கள் முதல் பரிசுகளைப் பெற்றேன். இரண்டே மாதத்தில் எடை 7 கிலோ குறைந்தது. இப்பொழுது 30 கிலோ குறைந்துள்ளது! புகைப்படங்களைப் பாருங்கள், அவை உண்மை சொல்லும். அதுமட்டுமல்ல, ரத்தப்பரிசோதனையும் நான் ஆரோக்கியப் பாதையில் போவதைக் காட்டுகிறது.
இந்த முகநூல் குழுவில் 31,000 பேர் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். பேலியோ டயட் கடைப்பிடிப்போர் முன், பின் எடுக்கப்பட்ட ரத்தப் பரிசோதனை முடிவுகளும் படங்களும் இங்கே காணக் கிடைக்கின்றன. இனிப்பு, கோக், துரித உணவு, சில வகைக் காய்கள், பழங்கள், தானியங்கள் போன்றவற்றைத் தவிர்ப்பதால் இன்சுலின் கட்டுப்பட்டு, சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டுக்குள் வருகிறது. இன்சுலின் ரெஸிஸ்டன்ஸ் பிரச்சினை ரிவர்ஸ் ஆகிறது. இதுமட்டுமல்லாமல் ஃபேட்டி லிவர், PCOS, மாதவிலக்கில் மாற்றங்கள், ரத்த அழுத்தம், பற்களின் பிரச்சனைகள், மூட்டுவலி, கால்வலி, மைக்ரேன் தலைவலி, கண்பார்வைக் கோளாறு, கொழுப்புக் கட்டிகள், தூக்கமின்மை, குறட்டை, சளிப் பிரச்சனை, தோல் பிரச்சனைகள், நெஞ்செரிச்சல், மாரடைப்பிற்கு முக்கியக் காரணமான ரத்தக்குழாயில் வீக்கம் போன்ற நோய்களும் குணமடைந்திருப்பதாக இக்குழுவில் பதிவு செய்துள்ளனர். பேலியோ டயட் எடுப்பதன் மூலம் ட்ரைகிளிசரைட்ஸ் குறைந்து, HDL என்னும் நல்ல கொழுப்பின் அளவும், ஹீமோகுளோபின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது.

இட்லி, தோசை சாப்பிட்டால் ஏற்படும் மந்தநிலை இந்த டயட்டில் சிறிதும் இல்லை. எவ்வளவு காலம் இந்த டயட் தொடர்ந்தாலும் சலிப்பு என்பதே இல்லை. உடல் மிகலேசாக உணரப்படுகிறது. நல்ல சுறுசுறுப்பு, நல்ல தூக்கம், காலை சீக்கிரம் எழுந்திருப்பது, கவலைகளின்மை மற்றும் நடப்பதற்கு நிற்பதற்கு இருந்த சிரமங்கள் போயே போய்விட்டன. வீட்டு வேலை, தோட்ட வேலை எல்லாவற்றையும் சுலபமாகச் செய்ய முடிகிறது. இதுபோக தினமும் 4-5 மைல் நடக்கமுடிகிறது.

இக்குழு, 4 விதமான டயட்களை நம் இந்திய உணவு முறைகளுடன் வழங்குகிறது. அவை, 1. முட்டைகூடச் சாப்பிடாத சைவ டயட்; 2. முட்டை & சைவம் டயட்; 3. அசைவ டயட் 4. மெயின்டனன்ஸ் டயட். இதில் உணவாக 100 பாதாம், பேலியோ காய்கள், கீரைகள், முட்டைகள், பன்னீர், பால், சீஸ், மாமிசங்கள் என்று அவரவர் உணவுமுறைகள், ரத்தப் பரிசோதனைக்கு ஏற்ப வழங்கப்படுகிறது. இதில் முக்கியமாக சமைக்க வெண்ணெய், நெய், செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெய் போன்றவையே பரிந்துரைக்கப்படுகின்றன. பேலியோ டயட் சமையல் குறிப்புகளும் வழங்கப்படுகின்றன. இத்துடன் மிதவேக நடைப்பயிற்சியும் வலியுறுத்தப்படுகிறது. இயற்கை முறையில் விட்டமின் டி கிடைக்க, நேரடி சூரிய ஒளியில் தினமும் குறைந்தபட்சம் 20 நிமிடங்கள் இருக்கவும் சொல்லப்படுகிறது. இவற்றைச் சரியாகச் செய்ததால் நான் இளைத்துச் சுறுசுறுப்பானேன். நீங்கள்.....?

மைதிலி தியாகு,
ஹூஸ்டன், டெக்சஸ்
Share: 
© Copyright 2020 Tamilonline