TNF: கோடைக்கால சேவைப் பயிற்சி மறந்த நினைவுகள்
|
|
வையக்கவி பாரதியின் வைரக்கவி |
|
- |டிசம்பர் 2015| |
|
|
|
|
|
சென்றதினி மீளாது மூடரே நீர் எப்போதும் சென்றதையே சிந்தைசெய்து கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து குமையாதீர் சென்றதனைக் குறித்தல் வேண்டா
- மகாகவி பாரதி
என்மதத்தைக் கைக்கொண்மின்; பாடுபடல் வேண்டா; ஊனுடலை வருத்தாதீர்; உணவியற்கை கொடுக்கும்; உங்களுக்குத் தொழிலிங்கே அன்புசெய்தல் கண்டீர்!
- மகாகவி பாரதி
பொய்சொல்லக் கூடாது பாப்பா! - என்றும் புறஞ்சொல்லல் ஆகாது பாப்பா! தெய்வம் நமக்குத்துணை பாப்பா! - ஒரு தீங்குவர மாட்டாது பாப்பா!
- மகாகவி பாரதி
தமிழ்த்திரு நாடுதன்னைப் பெற்ற - எங்கள் தாயென்று கும்பிடடி பாப்பா! அமிழ்தில் இனியதடி பாப்பா! - நம் ஆன்றோர்கள் தேசமடி பாப்பா!
- மகாகவி பாரதி
சாதிகள் இல்லையடி பாப்பா! - குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்! நீதி உயர்ந்தமதி கல்வி - அன்பு நிறைய உடையவர்கள் மேலோர்.
- மகாகவி பாரதி |
|
தாய்க்குமேல் இங்கேயோர் தெய்வ முண்டோ? தாய்பெண்ணே யல்லளோ? தமக்கை,தங்கை வாய்க்கும்பெண் மகவெல்லாம் பெண்ணே யன்றோ?
- மகாகவி பாரதி
ஆணெல்லாம் கற்பைவிட்டுத் தவறு செய்தால், அப்போது பெண்மையுங்கற்(பு) அழிந்தி டாதோ? நாணற்ற வார்த்தையன்றோ? வீட்டைச் சுட்டால், நலமான கூரையுந்தான் எரிந்தி டாதோ?
- மகாகவி பாரதி
சினங்கொள்வார் தமைத்தாமே தீயாற் சுட்டுச் செத்திடுவா ரொப்பாவார்; சினங்கொள் வார்தாம் மனங்கொண்டு தங்கழுத்தைத் தாமே வெய்ய வாள்கொண்டு கிழித்திடுவார் மானு வாராம்.
- மகாகவி பாரதி
சாதிக் கொடுமைகள் வேண்டாம் - அன்பு தன்னில் செழித்திடும் வையம்; ஆதர வுற்றிங்கு வாழ்வோம் - தொழில் ஆயிரம் மாண்புறச் செய்வோம்
- மகாகவி பாரதி |
|
|
More
TNF: கோடைக்கால சேவைப் பயிற்சி மறந்த நினைவுகள்
|
|
|
|
|
|
|