Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
December 2015 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | முன்னோடி | சமயம் | வாசகர் கடிதம்
அஞ்சலி | சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | பொது | சாதனையாளர் | நலம்வாழ | எனக்குப் பிடித்தது
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கவிதைப்பந்தல் | அமெரிக்க அனுபவம்
Tamil Unicode / English Search
சாதனையாளர்
கோகுல் & சிரில்
தீபிகா போடபட்டி & தனய் டாண்டன்
- தென்றல்|டிசம்பர் 2015|
Share:
தென் கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தின் சிறந்த மாணவர்கள் பங்குபெறும் USC Stevens Student Innovator Showcase என்னும் வருடாந்திரப் போட்டியில் அக்டோபர் 22-25 நாட்களில் நாட்களில் தீபிகா போடபட்டி மற்றும் தனய் டாண்டன் Athelas அணியாகப் பங்கேற்றனர். பங்கேற்றனர். மருத்துவத் துறையின் உலகளாவிய பிரச்சனைகளுக்கு நடைமுறைத் தீர்வுகளைக் கண்டுபிடிக்கவேண்டுமென்பது அவர்கள் முன்வைக்கப்பட்ட சவால்.

இதில் பங்கேற்ற 24 குழுவினரில் Athelas அணி முதலாவது இடத்தைப் பிடித்து, ஏழாயிரம் டாலர் பரிசுத் தொகையையும், ஸ்டீவன்ஸ் சிறந்த புத்தாக்க விருதையும் தட்டிச்சென்றது. இவர்கள் வடிவமைத்த ‘கையடக்க ரத்தப் பரிசோதனை கருவி’ சில நிமிடங்களுக்குள் முழு ரத்தப் பரிசோதனை முடிவுகளை (Complete Blood Count) விரைந்து தந்துவிடுகிறது.

அதிலாஸ் துணைநிறுவனர் தீபிகா போடபட்டி ஆவார். தென்றல் இதழின் ஆலோசகர்களில் ஒருவரான சந்திரா போடபட்டியின் மகள் இவர். இந்தப் பரிசுத் தொகையைப் பயன்படுத்தி, வணிக அளவில் இந்தக் கருவியைத் தயாரித்து அதை FDA அங்கீகாரத்துக்குப் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளதாகக் கூறுகிறார் தீபிகா. அதிலாஸை இவரோடு இணைந்து நிறுவியவர் தனய் டாண்டன்.

அக்டோபர் 7 அன்று நடந்த 4th Annual Silicon Beach Awards Venture போட்டியிலும் அதிலாஸ் அணி முதல் பரிசான 25,000 டாலரை வென்றது குறிப்பிடத்தக்கது.
ஏதேனும் நோய் என்று மருத்துவரிடம் போனால் அவர் ரத்தப்பரிசோதனை செய்யச் சொல்லலாம். அவர் சீட்டு எழுதிக் கொடுத்து, ஒரு பரிசோதனைக் கூடத்துக்குப் போய், அவர்கள் ரத்தம் எடுத்துப் பரிசோதனை செய்வதென்பது சற்றே நீண்ட செயல்முறை. ஆனால் தீபிகாவும் தனய்யும் கண்டுபிடித்துள்ள கருவி ரத்தத்தை உடனடியாக ஆராய்ந்து, முடிவுகளை செல்பேசிக்கே அனுப்பிவிடும். மூலக்கூறு உயிரியல் (molecular biology) துறையில் பள்ளிநாட்களில் இருந்தே பல ப்ராஜெக்டுகளைச் செய்து பரிசுகள் பெற்றுள்ளவர் தீபிகா. ரத்தத்தை விரைந்து அதன் பகுதிகளாகப் பகுத்தெடுப்பதில் அவர் கவனம் செலுத்தினார். இப்போது அவர் USC, Viterbi School of Engg கல்லூரியில் பயோமெடிகல் எஞ்சினியரிங் கற்றுவருகிறார்.

ஸ்டான்ஃபோர்டு பல்கலையின் கணிதக் கல்லூரி மாணவரான தனய் Image Processing, machine learning ஆகியவற்றில் மிகுந்த தேர்ச்சி கொண்டவர். அத்துறைகளில் பல அறிவியல் போட்டிகளில் பங்கேற்றவர். 2015 Intel Science Talent Search போட்டிகளின் இறுதிச்சுற்றுக்குத் தேர்வுபெற்று அதிபர் ஒபாமாவைச் சந்தித்த 40 பேர்களில் ஒருவர்.

தென்றல்
More

கோகுல் & சிரில்
Share: 




© Copyright 2020 Tamilonline