TNF-சிகாகோ: நிதி திரட்டும் விழா Vibha-சிகாகோ: 'வழங்கும் கலை' TNF: ஈகைவிழாவில் ஒய்.ஜி. மகேந்திரா நாடகம் அரங்கேற்றம்: பரத் நம்பூதிரி அரங்கேற்றம்: மீனாக்ஷி குமரகுரு வீணையிசை: ராஜேஷ் வைத்யா STF: ஐந்தாம் ஆண்டுவிழா ஃபிலடெல்ஃபியா: இளையோர் ஈகைப் பயிலரங்கம் Access Braille: 'அந்தர்ஜோதி' கணேஷ்-குமரேஷ் வயலின் கச்சேரி டென்னசி: ஈஷா அகமுக அறிவியல் பயிற்சிக் கூடம் டாலஸ்: தமிழ் மலரும் மையம் 'குதூகலவிழா' அரங்கேற்றம்: சாத்விகா வீரவல்லி சங்கர நேத்ராலயா: சிறிய கருணைச் செயல்கள்
|
|
|
|
|
2015 அக்டோபர் 24-25 நாட்களில் சான்டா கிளாரா கன்வென்ஷன் சென்டரில் சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்கள் ஷாம்பவி மகாமுத்ராவை வழங்கினார். அமெரிக்காவின் பல பகுதிகள், ஐரோப்பா, இந்தியா ஆகியவற்றிலிருந்து வந்திருந்த ஆயிரம் பேருக்கும் மேல், இந்தப் பழமைமிகு பாரம்பரிய யோகப்பயிற்சியை அறிந்துகொண்டனர். சத்குருவின் 'இன்னர் இஞ்சினியரிங்' பயிற்சியை முன்னரே எடுத்துக் கொண்டவர்கள் மட்டுமே நிகழ்ச்சியில் பங்கேற்கத் தகுதிபெற்றவர்கள். அவர்களை அடுத்த நிலைக்கு அழைத்துச் செல்லும் பயிற்சியாகும் இது. இன்னர் இஞ்சினியரிங் ஒருவரை ஒரு அன்புநிறை உயிராய் மலரச்செய்யும் பயிற்சிமுறை. இது ஆன்லைனில் 7 பகுதிகளாக (7 sessions) வழங்கப்படும். சத்குருவால் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பங்கேற்றவர்களில் ஒருவர், யோகி ஒருவரின் அதீதமான சக்திகளைப் பற்றிக் கேள்வி எழுப்பியபோது, சத்குரு "எனது சட்டை பையிலிருந்து ஒரு புறாவை மந்திரசக்தியால் வரவழைத்துப் பறக்கவிட்டால், அதை ஓர் அதிசயமாகப் பார்த்து வியக்கலாம். அவ்வாறு செய்தால் உங்களிடம் ஒரு புறாவும் என்னிடம் ஒரு அழுக்கான சட்டைப்பையும்தானே இருக்கும்! என்னைப் பொருத்தமட்டில் நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர், தம் கண்களை மூடி அமர்ந்து, தாம் அடையும் பேரானந்தத்தால் கன்னங்களில் வழியும் ஆனந்தக்கண்ணீரே அற்புதம்" என்று கூறியது சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தது!
ஷாம்பவி மஹாமுத்ரா ஓர் உயிரோட்டமான நுட்பம், வெறும் பயிற்சி அல்ல. தினசரி செய்துவந்தால் உள்ளேயிருந்து ஆனந்தம் பொங்கிப் பிரவாகிக்கும். வாழ்க்கையை உருவாக்கிக் கொள்வதற்குத் தேவையான திறமை, அறிவு, சக்தி அனைத்தையும் வளர்க்கும். 21 நிமிடங்களில் செய்யக்கூடிய 'ஷாம்பவி மகாமுத்ரா' நமது உட்சக்தியை தூய்மைப்படுத்தும் ஒரு மூச்சுப்பயிற்சி. யோகக்கலை பற்றிய முன்னறிவு, அனுபவம் எதுவும் இதற்குத் தேவையில்லை. எந்த வயதினரும் அன்றாடம் எளிதாகப் பின்பற்றத்தக்கது. |
|
கலிஃபோர்னியா நிகழ்ச்சிக்குப் பிறகு, டெட்ராயிட் நகரில் உள்ள 'மேசோனிக் டெம்பிள் தியேட்டர்' அரங்கில் சத்குரு பொதுமக்களிடையே உரையாற்றுவார். 2016 ஜனவரியில் மீண்டும் சத்குரு அமெரிக்காவிற்கு வருகைதருவார். விவரங்கள் விரைவில் வெளியிடப்படும்.
சத்குருவின் உலகளாவிய பயணங்கள் பற்றி அறிய: Isha.Sadhguru.org
இன்னர் இஞ்சினியரிங், ஷாம்பவி மஹாமுத்ரா பற்றி அறிய www.InnerEngineering.com
செய்திக்குறிப்பிலிருந்து |
|
|
More