ரியல் எஸ்டேட் வாங்கத் தமிழ்நாடு சிறந்த இடம் பேராசிரியர் NVS பாராட்டு விழா தமிழக அரசின் அறிவிப்புகள் 3rd i வழங்கும் சர்வதேச தெற்காசியத் திரைப்பட விழா ஆங்கிலத்தில் நாலாயிர திவ்யப்ரபந்தம் "நம்மஊரு நவராத்திரி நச்" ஸ்வேதா பிரபாகரன்: சேம்பியன் ஆஃப் சேஞ்ச்
|
|
CIF: கிச்சன் கில்லாடி சமையல் போட்டி |
|
- சிவா சேஷப்பன்|அக்டோபர் 2015| |
|
|
|
|
|
சென்னையிலுள்ள அடையாறு புற்றுநோய்க் கழகம் (Adyar Cancer Institute) டாக்டர். சாந்தா அவர்கள் தலைமையில் ஏழைகளுக்கு இலவசமாக அல்லது குறைந்த செலவில் புற்றுநோய் சிகிச்சை அளித்துவருகிறது. அமெரிக்காவிலுள்ள புற்றுநோய் அறக்கட்டளை (Cancer Institute Foundation - CIF) இந்த அரும்பணிக்கு நிதி திரட்டி உதவி வருகிறது. அடுத்த நிதி திரட்டும் நிகழ்ச்சியாக 'CIF கிச்சன் கில்லாடி' என்ற சமையல் போட்டியை ஏற்பாடு செய்துள்ளது. இந்தப் போட்டி ஏழு வருடங்களாகத் தொடர்ந்து நடத்தப்படுகிறது.
தேர்வுச்சுற்று, இறுதிச்சுற்று என்று இரண்டு சுற்றுக்களாகப் போட்டி நடைபெறும். தேர்வுச்சுற்றுக்கு நூல்கோலில் (டர்னிப்) கற்பனை கலந்து ஒரு உணவுவகை தயார் செய்யவேண்டும். இந்தக் காய்க்குப் புற்றுநோயைத் தடுக்கும் குணம் உண்டு. தேர்வுச்சுற்று அக்டோபர் 3, சனிக்கிழமை மதியம் 2 மணிக்கு சன்னிவேல் கோவில் அரங்கில் நடைபெறும். இறுதிச்சுற்று அக்டோபர் 18, சனிக்கிழமை மதியம் 3 மணிக்கு சன்னிவேலில் உள்ள Young Chefs Academy வளாகத்தில் நடைபெறும்.
போட்டியில் வெல்லும் மூன்று குழுக்களுக்கு தங்கக்காசுகள் காத்துக் கொண்டிருக்கின்றன! தாமதியாமல் பதிவு செய்யவும்.
மேலும் விவரங்களுக்கு வலைமனை: www.cifwia.org மின்னஞ்சல்: குமுதா (நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்) - cook@cifwia.org; தொலைபேசி 845-270-9584 போட்டியில் பங்குபெறாவிட்டாலும் நிகழ்ச்சிக்கு வந்திருந்து போட்டியாளர்களை ஊக்கப்படுத்துங்கள். அனுமதி இலவசம். |
|
சிவா சேஷப்பன், ஃப்ரீமான்ட், கலிஃபோர்னியா |
|
|
More
ரியல் எஸ்டேட் வாங்கத் தமிழ்நாடு சிறந்த இடம் பேராசிரியர் NVS பாராட்டு விழா தமிழக அரசின் அறிவிப்புகள் 3rd i வழங்கும் சர்வதேச தெற்காசியத் திரைப்பட விழா ஆங்கிலத்தில் நாலாயிர திவ்யப்ரபந்தம் "நம்மஊரு நவராத்திரி நச்" ஸ்வேதா பிரபாகரன்: சேம்பியன் ஆஃப் சேஞ்ச்
|
|
|
|
|
|
|