மீரா ரெகுநாதன் ஆஷ்ரிதா, அக்ஸிதி
|
|
|
|
|
வீடியோ கேம், பேஸ்பால், சினிமா இவைதான் சராசரி 14 வயது குழந்தைகளின் உலகமாக இருக்கும். ஆனால் விஷால் கோப்லா 14 வயதில் உலக சதுரங்க அமைப்பான FIDE வழங்கும் கேண்டிடேட் மாஸ்டர் (CM) பட்டத்தைப் பெற்றுள்ளார்.
வர்ஜீனியாவின் ஆஷ்பர்னைச் சேர்ந்த இவர் 2010ம் ஆண்டுவரை, மற்ற நான்காம் வகுப்புக் குழந்தைகள்போல பேஸ்பால், வீடியோ கேம், சைக்கிள் ஓட்டுதல் எனச் சாதரணமாகத்தான் இருந்தார். அந்த வருடம் கோடை விடுமுறையில் அவர் சதுரங்க முகாமில் பங்கு கொண்டது அவருக்குத் திருப்புமுனை ஆனது. தந்தையும் சதுரங்கவீரர் என்பதால் ஏற்கனவே விஷாலுக்குக்கு அது புதிதல்ல. முகாமிலிருந்து திரும்பிய பின்னரும் அதே கோச்சிடம் தொடர்ந்து பயிற்சி பெற்றார். அவரது அறிவுரையின்படி, 2011 ஜனவரியில் குழந்தைகளுக்கான செஸ் போட்டிகளில் பங்கேற்று மூன்றாமிடத்தில் வந்தார்.
2011-12ம் ஆண்டுகள் அவரது அசுரவளர்ச்சியைப் பார்த்தன. 400 புள்ளிகளுக்கு அருகேயிருந்த அவரது Elo தரம், 1600க்கும் மேல் உயர்ந்தது. மாஸ்டர் பட்டத்திற்கு 2200 புள்ளிகளை வென்றிருக்க வேண்டும். 2800 புள்ளிகளுக்கு மேல் பெற்றால் கிராண்ட் மாஸ்டர். ஒவ்வொரு வாரமும் விஷால் 10-20 மணிநேரம் பயிற்சிக்குச் செலவிடுகிறார். தற்சமயம் அவர் 2100 புள்ளிகளைத் தாண்டிவிட்டார். |
|
சென்ற மே மாதம், 'நார்த் அமெரிக்கன் யூத் செஸ் சேம்பியன்ஷிப்' போட்டியில் பங்கேற்று முதல் மூன்றிடங்களுக்குள் வந்தார். இந்த வெற்றி இவருக்கு கேண்டிடேட் மாஸ்டர் பட்டத்தைப் பெற்றுத்தந்தது. FIDE அமைப்பு வழங்கும், கேண்டிடேட் மாஸ்டர், FIDE மாஸ்டர், இன்டர்நேஷனல் மாஸ்டர், கிராண்ட் மாஸ்டர் ஆகிய நான்கு பட்டங்களில் இது முதலாவதாகும். 2015 ஏப்ரலில், லூயிவில், கென்டகியில் நடைபெற்ற, யூ.எ.ஸ் நேஷனல் டோர்னமெண்ட் K-8 பிரிவில் இணைமுதலிடம் பெற்றார். 2014 டிசம்பரில், ஆர்லண்டோவில் நடைபெற்ற அமெரிக்க தேசிய 8வது கிரேடு போட்டியில் இரண்டாமிடத்தில் வந்தார். 2013ம் ஆண்டு வர்ஜீனியா ஸ்டேட் அமெச்சூர் சேம்பியன்ஷிப்பை வென்றார்.
விஷால் தனது 7 வயது தங்கைக்குச் சதுரங்கப் பயிற்சி அளிக்கிறார். நேரம் கிடைக்கும்போது பிற சிறுவர், சிறுமியருக்குப் பயிற்சி அளிக்கத் திட்டமிட்டுள்ளார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 14 வயதான செஸ் வீரர்களில் இவர் முதல் 5 இடத்துக்குள் உள்ளார். 9ம் வகுப்புப் படிக்கும் இவர் படிப்பிலும் சுட்டி. கணிதத்திற்கும் அறிவியலுக்கும், பிரத்யேகமான பள்ளியான 'அகாடமி ஆஃப் சயன்ஸ்', மற்ற பாடங்களுக்கு 'ராக்ரிட்ஜ் மேல்நிலைப்பள்ளி' என இரு பள்ளிகளில் படிக்கிறார்.
விஷாலின் தந்தை விக்ராந்த் கோப்லா Clever Sys Inc என்ற கம்பெனியை நிறுவி அதன் VP, Business Development ஆக இருக்கிறார். தாய் ஹர்ஷிதா கோப்லா ஒரு உணவியல் வல்லுனர். இருவரும் மதுரையைச் சேர்ந்தவர்கள். |
|
|
More
மீரா ரெகுநாதன் ஆஷ்ரிதா, அக்ஸிதி
|
|
|
|
|
|
|