மினசோட்டா: கோடை பிக்னிக் CCC: அமெரிக்காவில் பாரத தரிசனம் ஒஹையோ TNF: நெடுநடை அரங்கேற்றம்: நிக்கிலேஷ் பாஸ்கர் டொரண்டோ: சங்க இலக்கியப் பயிலரங்கு வடகரோலினா: பிக்னிக் அரங்கேற்றம்: பல்லவி நாராயணன் அரங்கேற்றம்: ரிதி ரவிச்சந்திரன் அரங்கேற்றம்: ஷ்ரேயஸ் முரளிதரன் BTS: இலக்கிய சந்திப்பு அரங்கேற்றம்: சுருதி சேதுராமன் அரங்கேற்றம்: கிஷன் ஸ்ரீகாந்த் ரெட்மண்ட் தமிழ்ப்பள்ளி ஆண்டுவிழா
|
|
வடகரோலினா: சுதந்திர தினம் |
|
- ஸ்ரீவித்யா ஜெயராம், அனுஷா கோபாலகிருஷ்ணன், பாலகிருஷ்ணன் சுப்ரமணியன்|செப்டம்பர் 2015| |
|
|
|
|
|
ஆகஸ்டு 15, 2015 அன்று வடகரோலினா ஹிந்து சங்கம் ஏற்பாடு செய்த இந்திய விடுதலைத் திருநாள் நிகழ்ச்சியில், தமிழ் கலாசார சங்கம் மற்றும் வடகரோலினா சங்கம் பங்கேற்றன. மோரிஸ்வில்லில் இந்திய கொடி பறக்க பெருமையுடன் இவ்விழா நடந்தேறியது. மோட்டார்பைக் பேரணியும் பல்வேறு கலைநிகழ்ச்சிகளும் இதில் இடம்பெற்றன. வெவ்வேறு அமைப்பினர் அமைத்த சாவடிகளும், அங்கே பரிமாறப்பட்ட உணவு வகைகளும், ஆடை ஆபரணங்களும் என அவ்விடமே விழாக்கோலம் பூண்டிருந்தது.
வடகரோலினா தமிழ் கலாசார சங்கம் (TCANC) அமைத்திருந்த சாவடியில் தமிழ்நாடு மாநிலம், பண்பாடு, சமயம், பன்முகம் பற்றிய தகவல்களும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. சங்கத்தின் கடையில் வைக்கப்பட்டிருந்த இட்டலி, பொங்கல், வடை முதலியவை நொடிப்பொழுதில் விற்றுத்தீர்ந்தன. சங்கம் ஒரு சிறப்பு நடன நிகழ்ச்சியையும் வழங்கியது. 'நாட்யத்வனி நடன மற்றும் இசைப்பள்ளி'யின் திருமதி. உமா வெங்கட்ராமன் தலைமையில் ப்ரக்யா ஜெயராம், ஸ்ருதி சுரேஷ், சம்ரிதா ஸ்ரீராம் மற்றும் அஸ்மிதா காக்ர்லாத்தின் நடனம் கண்ணுக்கு விருந்தாக அமைந்தது. |
|
ஸ்ரீவித்யா ஜெயராம், அனுஷா கோபாலகிருஷ்ணன், பாலகிருஷ்ணன் சுப்ரமணியன், கேரி, வடகரோலினா |
|
|
More