'பெருமாளே' - நகைச்சுவை நாடகம் ஃபிலடெல்ஃபியா: TNF ஈகைவிழா டாலஸ்: 'தாண்டவகோனே' தாளம், இசை, நடன நிகழ்ச்சி கலிஃபோர்னியாவில் சத்குரு வழங்கும் தீட்சை பாரதி தமிழ்ச் சங்கம்: 'சில்லு' அறிவியல் புனைகதை நாடகம்
|
|
நவரத்னா |
|
- ஸ்ரீனி|செப்டம்பர் 2015| |
|
|
|
|
|
செப்டம்பர் 13, 2015 ஞாயிறன்று மாலை 4 மணியளவில் சான்டா கிளாராவின் Mission City Center of Performing Arts அரங்கில் ‘நவரத்னா’ என்ற நாட்டிய நிகழ்ச்சி அரங்கேற்றப்படும். இதில் விரிகுடாப்பகுதியின் பிரபல கலைஞர்களான ஐஸ்வர்யா வெங்கட், சேத்தனா சாஸ்திரி, தீபா மகாதேவன், கணேஷ் வாசுதேவா, ஜனனி நாராயணன், ஜ்யோத்ஸ்னா வைத்தீஸ்வரன், கவிதா திருமலை, நவ்யா நடராஜன், ரசிகா குமார், ரூபா சுரேஷ், ஷிர்னி காந்த், ஸ்நிக்தா வெங்கட் ரமணி மற்றும் ஸ்வேதா ரவிசங்கர் பங்கேற்கின்றனர். தஞ்சை நால்வரைச் சிறப்பிக்கும் வகையில் இந்நிகழ்ச்சி அமைக்கப்பட்டுள்ளது.
தஞ்சை நால்வர் என அழைக்கப்பட்ட சின்னையா, பொன்னையா, சிவானந்தம், வடிவேலு என்ற நான்கு சகோதரர்கள் 19ம் நூற்றாண்டில் வாழ்ந்த சிறந்த இசையமைப்பாளர்களும் பரதக் கலைஞர்களும் ஆவர். இவர்கள் பக்திப் பாடல்களை இசைக்கும் ஓதுவார் குடும்பத்தில் பிறந்தவர்கள். இவர்களது பாடல்கள் பிருஹதீஸ்வரர், பிருஹதீஸ்வரி, திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி ஆகிய தெய்வங்களின் மகிமையையும் சிவாஜி மாமன்னர், மைசூர் கிருஷ்ண ராஜேந்திர உடையார் ஆகியோரின் புகழையும் பாடும் வகையில் அமைந்துள்ளன. இவற்றில் அரிய பாடல்கள் சிலவற்றைத் தேர்ந்தெடுத்து விரிகுடாப் பகுதி நடனக் கலைஞர்களும் ஆசிரியைகளும் சேர்ந்து நடனவடிவமைத்து மேடையில் வழங்குகின்றனர். |
|
நுழைவுச்சீட்டுகள் வாங்க தொலைபேசி: ஜனனி நாராயணன் - 408-718-8414
ஸ்ரீனி, சன்னிவேல், கலிஃபோர்னியா |
|
|
More
'பெருமாளே' - நகைச்சுவை நாடகம் ஃபிலடெல்ஃபியா: TNF ஈகைவிழா டாலஸ்: 'தாண்டவகோனே' தாளம், இசை, நடன நிகழ்ச்சி கலிஃபோர்னியாவில் சத்குரு வழங்கும் தீட்சை பாரதி தமிழ்ச் சங்கம்: 'சில்லு' அறிவியல் புனைகதை நாடகம்
|
|
|
|
|
|
|