தமிழ் ஆன்லைன் அறக்கட்டளை: தமிழ்ப்பள்ளி தொடங்க நிதியுதவி சாஸ்தா ஃபுட்ஸ் நடத்தும் 'நம்ம நவராத்திரி நச் - 2015'
|
|
இணையத்தில் தமிழ் பயில |
|
- சின்னமணி|ஆகஸ்டு 2015| |
|
|
|
|
|
"நான் வசிக்குமிடத்தில் தமிழ்ப்பள்ளி இல்லை", "தமிழை நானே சொல்லித்தர விரும்புகிறேன். ஆனால் பாடத்திட்டம் என்னிடம் இல்லை" என்பவரா நீங்கள்? கவலையை விடுங்கள். இணையத்தில் ஓராண்டு காலமாக இயங்கிவரும் இலவச இணையதளப்பள்ளி: www.Ilearntamilnow.com. லாபநோக்கின்றித் தன்னார்வலர்கள் நடத்தும் இந்தப் பள்ளியில் ஒன்றுமுதல் ஐந்தாம் வகுப்புவரை பாடங்கள் நடத்தப்படுகின்றன. ஒரு வகுப்புக்கு 25 பாடங்கள் வீதம் மொத்தம் 125 பாடங்கள் விழியமாகவும் ஒலிக்கோப்பாகவும் உள்ளன. அத்தனைக்கும் பயிற்சிகள் உள்ளன.
இணையதளத்திற்குச் சென்று பதிவு செய்துகொண்டு, Laptop, Desktop computers, Tablets (Ipad, Android), Mobile Phones (Iphone, Android Phone) என இணையத் தொடர்புடைய எல்லாக் கருவிகள் வழியேயும் கற்கலாம். 'Join the Discussion Group' என்ற இணைப்பில் சொடுக்கி, வகுப்பு ஆசிரியர் மற்றும் மாணவர்களுடன் கலந்துரையாடலாம்.
இதன் கல்வியாண்டு ஆகஸ்ட் கடைசி வாரத்தில் தொடங்கி, ஏப்ரல் மாதம் முடியும். வகுப்புக்கான மின்னூலை (eBooks) இதே இணையதளத்தில் வாங்கிக்கொள்ளலாம். வருடத்தில் மூன்றுமுறை தேர்வுகள் நடக்கும். இவற்றை இணையவாயிலாக நடத்தத் திட்டம் உள்ளது. தற்போது, கேள்வித்தாள் மின்னஞ்சல் வழியே அனுப்பப்படுகிறது.
நீங்கள் ஒரு தமிழாசிரியர் அல்லது தமிழ் ஆர்வலராக இருந்தால், இவர்களுடன் இணைந்து பணியாற்ற Teachers@ilearntamilnow.com என்ற மின்னஞ்சலுக்குத் தொடர்பு கொள்ளுங்கள்.
மேலும் விவரங்களுக்கு: இராம்கி இராமகிருஷ்ணன், இணையதள ஒருங்கிணைப்பாளர். Teachers@ilearntamilnow.com www.facebook.com/ilearntamilnow www.Ilearntamilnow.com |
|
சின்னமணி, டாலஸ், டெக்சஸ் |
|
|
More
தமிழ் ஆன்லைன் அறக்கட்டளை: தமிழ்ப்பள்ளி தொடங்க நிதியுதவி சாஸ்தா ஃபுட்ஸ் நடத்தும் 'நம்ம நவராத்திரி நச் - 2015'
|
|
|
|
|
|
|