Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
July 2015 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | நலம்வாழ | ஹரிமொழி | முன்னோடி | சமயம் | பொது | சாதனையாளர்
சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | வாசகர் கடிதம் | கவிதைப்பந்தல் | நூல் அறிமுகம் | ஜோக்ஸ்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
பொது
மின்லாக்கர்
கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் இயல்விருது
BAFA: குறும்படப்போட்டி
சாகித்ய அகாதமி: பால புரஸ்கார், யுவ புரஸ்கார்
விளம்பரம் பத்திரிகையின் 25ம் ஆண்டு நிறைவு விழா
தோல்கேன்சருக்கு சூரியன் காரணமல்ல!
கணினியில் தமிழ் எழுத குறள் தமிழ்ச்செயலி
இளையராஜா - இப்படியும் ஓர் ஆட்டோக்காரர்!
- ஈரநெஞ்சம் மகேந்திரன்|ஜூலை 2015|
Share:
தமிழகத்தில் ஆட்டோ ஒரு பகற்கொள்ளை என்பது எல்லோரும் அறிந்த ரகசியம். சில நியாயமானவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அப்படி ஒருவர்தான் மதுரை இளையராஜா. சரி, அவர் என்ன ஸ்பெஷல் என்கிறீர்களா?

அவருடைய ஆட்டோ
* பிரசவத்திற்கு மட்டுமல்ல, கர்ப்பிணிப் பெண்களுக்கும் பயணம் இலவசம்.
* 10 வயதுவரை சிறாருக்குக் கட்டணமில்லை.
* 70 வயதுக்கு மேலுள்ள முதியவர்களுக்கு இலவசம்.
* உடற்குறைபாடு கொண்டவர்களுக்கு இலவசம்.
* மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை, அரசு மருத்துவமனை, பிற மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காகச் செல்வோருக்கு இலவசம்.
* இரவுநேர சவாரி என்றாலும் கூடுதல் கட்டணமில்லை.
* வண்டி காத்திருக்க வேண்டி வந்தால் காத்திருப்புக் கட்டணம் கிடையாது.
* 1 முதல் 5ம் வகுப்புவரை படிக்கும் குழந்தைகள் பள்ளிக்கூடம் செல்ல இலவசம். 6 முதல் 12ம் வகுப்புவரை மாணவர்கள் 5 ரூபாய் கொடுத்தால் போதும். செல்பேசியில் சவாரிக்கு அழைப்பவர்களுக்குச் சலுகை.
* ரத்ததானம் செய்யப் போகிறவர்களுக்கு இலவசம். அவரும் பலமுறை ரத்ததானம் செய்திருக்கிறார்.

Click Here Enlargeவெளியூர்வாசிகளுக்கு மீட்டர் கட்டணத்தில் 10% தள்ளுபடி. வெளி மாநிலத்தவர்களுக்கு 20 சதவீதம்! வெளிநாட்டிலிருந்து மதுரையைச் சுற்றிப்பார்க்க வருபவர்களுக்கு 30% சலுகை.

"என்னுடைய ஆட்டோவில் குடித்துவிட்டு வரவோ, புகைபிடிக்கவோ அனுமதியில்லை. நான் எந்த ஆட்டோ சங்கத்திலும் இல்லை. போராட்டங்களில் பங்கேற்பதில்லை. இதனால் நம்பிக்கையோடு மக்கள் என்னை சவாரிக்கு அழைக்கிறார்கள்" என்கிறார் இளையராஜா.

எப்படிச் சமாளிக்க முடிகிறது என்று கேட்டால், "எங்கம்மா சௌந்தரவள்ளி காசோட அருமை தெரிஞ்சவங்க. ரொம்பச் சிக்கனமா இருப்பாங்க. எனக்கும் எந்தக் கெட்டபழக்கமும் கிடையாது. நாங்க திருப்தியா, சந்தோஷமா இருக்கோம்" என்கிறார். புரிந்துகொள்கிறோம்.
இளையராஜாவுக்கு 20 வயதானபோது தந்தை காலமானார். அதுமுதல் வாழ்க்கையே போராட்டம்தான். மூன்று வருடங்களுக்குமுன் நண்பர் ஒருவர் பணம்கொடுத்து ஷேர் ஆட்டோ ஓட்டும்படி சொல்ல, அது இளையராஜாவின் வாழ்வில் திருப்புமுனையானது. அன்பான பேச்சால், செயலால், பண்பால், சலுகைகளால் மக்களைக் கவர, "இளையராஜா ஆட்டோலதான் போவேன்" என்று காத்திருந்து செல்லும் பலரை தனது வாடிக்கையாளர்களாகப் பெற்றிருக்கிறார். இன்றைக்கும் தினவாடகையாக 350 ரூபாய் செலுத்துகிறார். "சார், மாசம் 15,000 ரூபாய்க்குமேல் வருமானம் வருது. சீக்கிரத்திலேயே புது ஆட்டோ வாங்கப்போறேன். அது வந்ததும் இன்னும் நிறைய சலுகைகள் கொடுக்கறதா இருக்கேன்" என்கிறார். ஈத்துவக்கும் இன்பம் அறிந்தவர் இவர்!

மதுரைப் பக்கம் டூர் போனால் மீனாட்சியம்மைனைப் பார்த்த கையோடு இந்த இளையராஜாவையும் பார்த்துப் பாராட்டிவிட்டு வாருங்கள். இவரது மொபைல் எண்: 9382896599

தகவல், படங்கள்: ஈரநெஞ்சம் மகேந்திரன்
More

மின்லாக்கர்
கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் இயல்விருது
BAFA: குறும்படப்போட்டி
சாகித்ய அகாதமி: பால புரஸ்கார், யுவ புரஸ்கார்
விளம்பரம் பத்திரிகையின் 25ம் ஆண்டு நிறைவு விழா
தோல்கேன்சருக்கு சூரியன் காரணமல்ல!
கணினியில் தமிழ் எழுத குறள் தமிழ்ச்செயலி
Share: 




© Copyright 2020 Tamilonline