நாதலயா: 'சிவா-சக்தி' இசைநிகழ்ச்சி மிச்சிகன் பாரதீய கோவில்: பஞ்சாயதன யக்ஞம் FeTNA தமிழ் விழா
|
|
|
|
|
ஏப்ரல் 26, 2015 ஞாயிறன்று மதியம் 2:00 மணிமுதல் சிகாகோவின் சம்ஸ்கிருதி அறக்கட்டளை 'ரசானுபவம்' என்ற கலைநிகழ்ச்சியை மேடன் தியேட்டரில் (Madden Theatre, North Central College, Naperville, IL) வழங்கவுள்ளது. இதில் சங்கீத சாம்ராட் சித்ரவீணை ரவிகிரண், மிச்சிகன் நாட்டியமணி சுதா சந்திரசேகர், சம்ஸ்கிருத ஆய்வாளர் மரகதம் சுந்தரேசன், மிருதங்கக் கலைஞர் வினோத் கோபிநாத் ஆகியோர் பங்கேற்கின்றனர். பரதமுனி தமது நாட்டிய சாஸ்திரத்தில் ரசானுபவத்தை எவ்வாறு வகுத்திருக்கிறார் என்பதை இந்தக் கலைஞர்கள் விளக்கி, சேர்ந்தும் தனித்தும் உரையாற்றுவார்கள்.
இருபதாண்டுகளாகச் சிகாகோவில் கலைப்பணி ஆற்றிவரும் சம்ஸ்கிருதி ஃபவுண்டேஷனை, குரு ஷோபா நடராஜன் அவர்கள் நிறுவி அதன் இயக்குனராகவும் இருந்து வருகிறார். அமெரிக்க அதிபரின் 'சிறந்த ஆசிரியை' விருது பெற்றவர் இவர் என்பது குறிப்பிடத் தக்கது. இப்பள்ளி பாரம்பரியம் மாறாத நாட்டியம், இசை, யோகம் ஆகியவற்றைக் கற்பிக்கிறது. கோடை விடுமுறையில் 'குருகுலம்' முகாமை நடத்துகிறது. இந்த 'ரசானுபவம்' நிகழ்ச்சித்தொடர் மூலம் ரசிகர்களின் கலையுணர்வை மேம்படுத்தத் திட்டமிட்டுள்ளது. |
|
தொடர்புக்கு தொலைபேசி: 630-527-1898 மின்னஞ்சல்: samskriti@aol.com வலைமனை: www.samskriti.yapsody.com
செய்திக்குறிப்பிலிருந்து |
|
|
More
நாதலயா: 'சிவா-சக்தி' இசைநிகழ்ச்சி மிச்சிகன் பாரதீய கோவில்: பஞ்சாயதன யக்ஞம் FeTNA தமிழ் விழா
|
|
|
|
|
|
|