Thendral Audio Advertise Aboutus
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | E-Magazine
By Category:
சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | நினைவலைகள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்
Current Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | நினைவலைகள் | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | அஞ்சலி | ஹரிமொழி
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | ஜோக்ஸ் | எனக்கு பிடிச்சது | பொது | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கவிதை பந்தல் | சிரிக்க, சிந்திக்க
Tamil Unicode / English Search
தென்றல் சிறுகதை போட்டி
சிறுகதை போட்டி பரிசுத் தேர்வுகள்

தென்றல் சிறுகதைப் போட்டி வட அமெரிக்கச் சிறுகதை எழுத்தாளர்களுக்கு ஒரு வாய்ப்பு, ஒரு சவால்.

புலம்பெயர்ந்து வந்துவிட்ட தமிழனுக்கு ஒருபுறம் தமிழின் மீது அடங்காத ஆசை, மறுபுறம் தயக்கம். தமிழ் பேசுவதில்லை, அதிகம் படிப்பதில்லை, தமிழ்நாட்டுப் பத்திரிக்கைகளே தமிலீஷில் எழுதுகின்றன. ஒரு நல்ல கதையைத் தென்றலில் படித்ததும் 'நான் இதை எழுதியிருப்பேனே' என்று தோன்றுகிறது. ஆனால் எழுதி அனுப்பத் தயக்கம், எங்கே மறுக்கப்படுமோ என்று.

போட்டி என்றால் ஏராளமான பேர் எழுதுவார்கள், அதில் நானும் முகம் தெரியாத ஒருவனாகக் கலந்து கொள்ளலாம் என்று தோன்றுகிறது. இந்தப் பெயரிலித் தன்மை எழுதத் துணிச்சலைக் கொடுக்கிறது. அதுவரை தென்றலுக்கு எழுதாதவர்கள் கையில் பேனாவை, இல்லை, விசைப்பலகையை எடுக்கிறார்கள். சிலர் ஒரு கதைக்கு மேலும் அனுப்பி யிருந்தனர். வழக்கம்போல நகைச்சுவைக் கதைகள் குறைவாகவே இருந்தன.

மொத்தம் 35 சிறுகதைகள் வந்திருந்தன. எத்தனை கருக்கள், கருத்துக்கள்! சுவையான நடைகள்; வாழ்வைக் கண்முன் கொண்டு நிறுத்தும் கற்பனைகள்.

ஆனால் யதார்த்தத்தைப் பளீரென்று சொல்லி, சற்றே மனித வாழ்க்கையின் அபூர்வத்தை, அற்புதத்தை - ஏன், சில சமயம் குரூரத்தை - தொட்டுக் காட்டும் கதைகள் கவனத்தை ஈர்க்கின்றன. கதைக்கரு, நடை என்று வெவ்வேறு அம்சங்களின் சிறப்புகளைக் கருத்தில் கொண்டே இறுதிச் சுற்றுக் கதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டன. பரிசு பெற்ற கதைகள் இவ்விதத்தில் சற்றே உயரத்தில் இருப்பதைப் பார்க்கலாம். இதோ பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவை:

1. தீவிரவாதி - ம.சீத்தாராமன், டிராய், மிச்சிகன்
2. அர்த்தங்கள் மாறும் - மோகன், ஹூஸ்டன், டெக்ஸாஸ்
3. நாராயணன் என்னும் நாணம் - சேகர், பார்ட்லெட், இல்லினாய்ஸ்

பிரசுரத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பிற கதைகளின் பட்டியல் அடுத்த இதழில் வெளியாகும்.

போட்டியில் கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றி.

தென்றல் ஏப்ரல் 2009 இதழில் சிறுகதைப் போட்டியில் பரிசு வென்ற கதைகளை வெளியிட்டிருந்தோம். பதிப்புக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டியலிலிருந்து (கீழே தரப்பட்டுள்ளது) வரும் இதழ்களில் பிற கதைகள் வெளியாகும். இதே வரிசையில் வெளியாகும் என்று சொல்வதற்கில்லை என்பதை கவனிக்கவும்.

பதிப்புக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவை:
பெங்குயின் - சுபா சேதுராமன், ப்ரீமாண்ட், கலி.
கானல் நட்பு - சாரதா ரமேஷ், ஆண்டோவர், மாஸசூஸட்ஸ்
அதே உலகம் - கற்பகம் இளங்கோவன், மிச்சிகன்
என் காது செவிடான காரணம் - கார்கில் ஜே, சிகாகோ, இல்லினாய்ஸ்
நிலாவுடன் நான் - கலா ஞானசம்பந்தம், மௌண்டன்வியூ, கலிபோர்னியா
இரக்கம் - என். சுவாமிநாதன், லாஸ் ஏஞ்சல்ஸ், கலிபோர்னியா
இடப் பெயர்ச்சி - பானுரவி, மௌண்டன்வியூ, கலிபோர்னியா
இருக்கும் இடத்தை விட்டு - சேகர் கண்ணன், ஷோம்பர்க், இல்லினாய்ஸ்
மணமகள் தேவை - இரத்தினம் சூரியகுமாரன், சான் ஹோசே, கலிபோர்னியா
முதலீடு - என். சுவாமிநாதன், லாஸ்ஏஞ்சலஸ், கலிபோர்னியா
கலைமகள் கைப்பொருள் - சேகர், பார்ட்லெட், இல்லினாய்ஸ்
நாய் விற்ற காசு - தங்கம் ராமசாமி, ஸ்ட்ரீம்வுட், இல்லினாய்ஸ்
பதவி உயர்வு - தி.சு.பா., அட்லாண்டா, ஜார்ஜியா
பாலைவனத்து இளநீர் - கலா ஞானசம்பந்தம், மௌண்டன்வியூ, கலிபோர்னியா
நல்ல மனம் - கூத்தரசன், சான் ஹோசே, கலிபோர்னியா
நீங்கள் எப்படி? - ராஜ், இஸேலின், நியூஜெர்ஸி
பார்வை - என்.சுவாமிநாதன், லாஸ் ஏஞ்சலஸ், கலிபோர்னியா
பாட்டியின் ஏக்கம் - ராசி, சான் ஹோசே, கலிபோர்னியா
தாயாகிய சேய் - நித்யா நடராஜன், சான்ஹோஸே, கலிபோர்னியா
உறைந்து போன உறவுகள் - சி. அண்ணாமலை, லாரமி, வயோமிங்
விடியல் - கலா ஞானசம்பந்தம், கலிபோர்னியா
விழிப்புணர்வு - கோமதி சுவாமிநாதன், இல்லினாய்ஸ், சிகாகோ
அதிருஷ்டம் - வதனா, சான் டியேகோ, கலிபோர்னியா

பங்கேற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

தென்றல் ஆசிரியர் குழு

***********

தென்றல் சிறுகதைப் போட்டி 2009
***********

சிறுகதை மலர் 2007