|
| காந்தலக்ஷ்மி சந்திரமௌலி |
   |
- அரவிந்த் | நவம்பர் 2025 |![]() |
|
|
|
|
 |
சிறார் படைப்பு, சிறுகதைத் தொகுப்பு, நாவல், மொழிபெயர்ப்பு, ஆன்மீகம், சிறுவர் இலக்கியம், கட்டுரை, நேர்காணல் என எழுத்துலகின் பல களங்களில் செயல்பட்டு வருபவர் காந்தலக்ஷ்மி சந்திரமௌலி. எழுத்தாளர், இதழாளரும் கூட. நவம்பர் 08, 1954 அன்று புதுதில்லியில் எல். ராமசுப்பிரமணியன் – கனகாம்பா இணையருக்குப் பிறந்தார். பொருளாதாரத்தில் இளங்கலை பட்டம் பெற்றார். சர்வதேசச் சுற்றுலா மற்றும் பயணப் படிப்பிலும், உளவியலிலும் பட்டயம் பெற்றார். கணவர் சந்திரமௌலி, சிம்சன் நிறுவனத்தில் துணை மேலாளராகப் பணியாற்றினார். மகள் ராதிகா நரசிம்மனும் எழுத்தாளர்.
காந்தலக்ஷ்மி சிறுவயதிலிருந்தே சிறந்த கதைசொல்லி. அதற்கான களத்தை ஏற்படுத்தியது அவரது தாய். புத்தகங்களைப் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தியவர் தந்தை. அதுவே இலக்கிய ஆர்வம் ஏற்படக் காரணமானது. தொடக்கத்தில் ஆங்கிலத்தில் எழுதியவர் பின் தமிழிலும் எழுதத் தொடங்கினார். இவரது படைப்புகள் கலைமகள், விஜய பாரதம், அமுதசுரபி, லேடீஸ் ஸ்பெஷல், கோகுலம், சந்தமாமா, மேதை (கிழக்கு (பதிப்பகம்), சம்பக், சிறுவர் விகடன், Young World – The Hindu, தினமணி – சிறுவர்மணி, தினமலர் - சிறுவர்மலர் போன்ற இதழ்களில் வெளியாகின. பல சிறார் படைப்புகளை எழுதியுள்ளார்.

‘லேடீஸ் ஸ்பெஷல்’ போன்ற இதழ்களில் கட்டுரைகள், சிறுகதைகளை எழுதினார். அவ்விதழுக்காகப் பல நேர்காணல்களைச் செய்தார். தினமணி - ஞாயிறு மணி, லேடீஸ் ஸ்பெஷல், கலைமகள், அமுதசுரபி, கோகுலம் கதிர் இதழ்களுக்காகப் பலரைச் சந்தித்துப் பேட்டிக் கட்டுரைகளை எழுதினார். சிறாருக்காக 'ஹெய்டி' என்ற மொழிபெயர்ப்பு நூலை வெளியிட்டுள்ளார். இவர் எழுதிய படைப்புகள் பல்வேறு தீபாவளி மலர்களிலும், சிறப்பிதழ்களிலும் இடம்பெற்றன. பல நாடுகளுக்குப் பயணம் செய்தவர். பல்வேறு அனுபவங்களைப் பெற்றவர். அக்கறை அமைப்பின் உறுப்பினர்களுள் ஒருவர்.
ஆங்கிலத்திலிருந்து தமிழுக்குப் பல நூல்களை மொழி பெயர்த்துள்ளார். ஆங்கிலத்திலும் சில நூல்கள் எழுதியுள்ளார். வானொலி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார்.
அரவிந்த் |
|
|
விருதுகள் * நந்தலாலா சேவா சமிதி வழங்கிய 'நந்தா தீபம் விருது' * அமரர் கே.ஆர். கிருஷ்ணமூர்த்தி விருது * குழந்தை இலக்கிய ரத்னா விருது * எழுத்துச்சுடர் விருது * வள்ளியப்பா இலக்கிய வட்ட விருது * இலக்கிய சாரதி விருது * புதுக்கோட்டை இலக்கியப் பேரவை – பாராட்டு விருது * Alcoholics Anonymous வழங்கிய 20th Annual Award * Tag Corporation புத்தக நண்பர்கள் வழங்கிய சிறந்த திறனாய்வாளர் விருது * சிவசுந்தரி கலை இயக்கம் வழங்கிய பாராட்டு மலர் விருது * முலகநாடு தெலுங்கு சபா வழங்கிய முலகநாடு முத்யம் விருது * ஆப்பிள் கிட்ஸ் வழங்கிய பாராட்டு விருது * பவித்ரம் டிரஸ்ட் வழங்கிய சேவா சக்ரா விருது * ஸ்ரீ பாலா ஆன்மீக ரத்னா விருது * கவிதை உறவு அமைப்பு வழங்கிய சிறந்த ஆன்மிக நூல் விருது
நூல்கள் ஒரு குரங்கு அம்மாவாகிறது, ஒரு தோழி தெய்வமாகிறாள், நைல் நதிக் கனவு கங்கை நதியும் நைல் நதியும், நாதவடிவானவளே கண்ணம்மா, ஸ்ரீ அன்னையின் வழியில்.., அன்னையின் வாழ்வியல் வழிகாட்டுதல், சுட்டும் விழிச்சுடர், நானும் அங்கே உன்னோடு, தொலைதூரத்தில் பாசம், இந்திய நாடு என் நாடு, பிரார்த்தனையும் பலன்களும், இயற்கை விவசாயமும் பெண்களின் பங்கும், கதை கதையாம் காரணமாம், இந்திய நாடு, நீதி போதனைக் கதைகள், 12 சிறுவர் கதைகள், கங்கைநதியும் நைல் நதியும், நைல் நதிக் கனவு, அறிய வேண்டிய பெண்மணிகள், சொல்லாமலே நான் கேட்கிறேன், சாதனை சந்திப்புகள், எங்கள் வீட்டு மாடியிலே, மர்ம புத்தகம், துளசி வனம், பெண் என்னும் மகாசக்தி, ஒரு முடிவின் கதை, காதலின் தீபம் ஒன்று, கட்டுரை மலர்க்கொத்து, பெற்றோர்களே கவனியுங்கள் (இரண்டு பாகங்கள்), குட்டிக்கோதை, ஹெய்டி (மொழிபெயர்ப்பு), பொங்கலோ பொங்கல், கதை கதையாம் காரணமாம், பெற்றோர்களே கவனியுங்கள் (ஆங்கில நூலின் தமிழாக்கம்)
ஆங்கில நூல்கள் * Organic Farming And The Participation Of Women * Summer Camp At The Zoo * The Value Of Life * A Chat With A Cup Of Coffee * From The Balcony Of Our Home * Me And My Chess Problems In 64 Squares * Pyramids And Robbery |
|
|
|
|
|
|
|
|
|
|
|