|
|
 |
பெர்க்கலி வேதாந்த சொசைட்டி, இந்திய கான்சுலேட்டுடன் இணைந்து சுவாமி விவேகானந்தர் அமெரிக்காவின் விரிகுடாப் பகுதிக்கு விஜயம் செய்த 125-வது ஆண்டைக் கொண்டாடும் வகையில் பல நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து வருகிறது. இவற்றில் இவ்வாண்டு பிப்ரவரி 22-ல் தொடங்கி, 2026-ம் ஆண்டு பிப்ரவரி 21-ம் நாள்வரை சர்வசமய உரையாடல், வேதாந்த விவாதம், ஆன்மீக முகாம், உலக இசை மேதைகளின் மாபெரும் இசை நிகழ்ச்சி, பல்கலைக்கழகத்தில் கல்வி தொடர்பான நிகழ்ச்சி, புத்தக வெளியீடு, ஆன்மிக சுற்றுப்பயணம், நிறைவு நாள் நிகழ்ச்சி என அனைத்தும் அடங்கியதாகும்.
ஜூலை 26,2025 அன்று நடக்கவிருக்கும் உலக மேதைகள் இசை நிகழ்ச்சியில் பத்மபூஷண் டாக்டர் எல். சுப்ரமணியம், பண்டிட் ஸ்வப்பன் சௌத்ரி, திரு ராகேஷ் சௌராஸியா, பத்மஸ்ரீ திருமதி அஷ்வினி பிடே தேஷ்பாண்டே, திரு அம்பி சுப்ரமணியம் ஆகியோர் பங்கேற்று இசைப்பார்கள்.
இதற்கான சீட்டுகள் வாங்க |
|
செய்திக்குறிப்பில் இருந்து |
|
|
|
|
|
|
|