|
ஏப்ரல் 2025: வாசகர்கடிதம் |
   |
- | ஏப்ரல் 2025 |![]() |
|
|
|
 |
மார்ச் மாதத் தென்றல் இதழில் ,நாட்டிய உலகம் ,நினைவில் வைத்திருக்க வேண்டிய முன்னோடிகளில் ஒருவரான, தமிழ் நாட்டின் முன்னோடி நடனக் கலைஞர்களுள் ஒருவரான ரங்கநாயகி ஜெயராமன் அவர்களைப் பற்றிய விவரங்கள் படித்து மகிழ்ந்தேன். பல நடனக் கலைஞர்களை உருவாக்கியவர் என்பதும் ,அவரின் சீடர்கள் உலகம் முழுவதும் பரவி, நடனப் பள்ளிகளை நடத்தி வருகிறார்கள் என்பதும், நிறைய விருதுகள் வாங்கியுள்ளவர் என்பதும் மகிழ்ச்சிகரமான விஷயங்கள். பொள்ளாச்சி தமிழிசைச் சங்கம் அளித்த நடனக்கலை வித்தகி விருது வழங்கும் விழாவில் பொள்ளாச்சியில் நானும் கலந்து கொண்டது மறக்க முடியாத நினைவு. விரிகுடாப் பகுதியில் அவரின் இரண்டு மருமகள்களின் பள்ளிகளில் பயின்ற மாணவர்களின் ,பல நிகழ்ச்சிகளை நான் ரசித்துப் பார்த்து ஆனந்தம் அடைந்துள்ளேன். தங்கள் இதழில் மேலும் அவரைப் பற்றிய விவரங்கள் தெரிந்து கொண்டதில் மிகவும் மகிழ்ச்சி.
பரம்பரை பரம்பரையாக தெருக்கூத்துக் கலையை வளர்க்கும் கலைஞர்களின் பாரம்பரியத்தில் ஐந்தாவது தலைமுறையாக தெருக்கூத்தைப் பரப்பி வருபவரும் 2025-ம் ஆண்டுக்கான பத்மஸ்ரீ விருது பெற்றவருமான புரிசை கண்ணப்ப சம்பந்தன் அவர்களைப் பற்றிய சிறப்புப் பார்வை பகுதியில் வெளியிட்ட அத்தனை விஷயங்களும் மிகவும் சிறப்பாக இருந்தன. நலிந்துவரும், இயல், இசை, நாடகம் என மூன்றும் கலந்த அற்புதமான இந்தத் தெருக்கூத்துக் கலையை அவரின் பழைய, புதிய முயற்சிகள் மூலம் அழியாமல் வளர்த்து வருவதைப் பார்க்கும்போது ,அவரின் உயரிய உழைப்புக்கும், எண்ணங்களுக்கும் நாங்கள் தலை வணங்குகிறோம்.
புதிய பழைய விஷயங்களைத் தென்றலாகச் சுமந்து வரும் தங்கள் இதழின் அத்தனை பகுதிகளும் சுகந்தமாக மணம் கமழ்வதற்கு உதவி புரியும் அத்தனை அன்பர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள். |
|
சசிரேகா சம்பத்குமார், யூனியன் சிட்டி, கலிஃபோர்னியா |
|
|
|
|
|
|
|