|
ஜூலை 2025: வாசகர் கடிதம் |
   |
- | ஜூலை 2025 |![]() |
|
|
|
ஜூன் தென்றல் இதழில் 'தென்றல் பேசுகிறது' பகுதியில் ஆப்பரேஷன் சிந்தூரைப் பற்றிய விவரங்கள் சுருக்கமாகவும் தெளிவாகவும் எழுதியிருந்தீர்கள். ரத்தத்தை உறைய வைக்கும் சம்பவங்கள், மோதியின் துணிச்சலான காரியங்களால் பல இன்னல்களுக்குப் பின் உருவாகிவரும் புதிய பாரதத்திற்கு நாமும் உறுதுணையாக நிற்போம் .
மருங்கர் எழுதிய 'புரிதல்' சிறுகதை அருமை. அனுசரித்தலும் விட்டுக்கொடுத்தலும் திருமண வாழ்க்கைக்கு எவ்வளவு முக்கியம் என்பதும், திருமண வாழ்வில் ஒருவருக்கொருவர் புரிந்துகொண்டு வாழ்வதில் உள்ள சுகத்தை அற்புதமாக எழுதியுள்ளார்.
தமிழர்களின் தொன்மையான இசைக்கருவிகளில் ஒன்றான பறை இசையை மறைந்து விடாமல் இதுவரை காப்பாற்றி உலகம் முழுவதும் பரப்பி, அதை அழியாமல் வளர்த்து, அனைவரும் விரும்பும்படி புதுப்பித்து வரும், பறை இசைக் கலைஞர் பத்மஸ்ரீ வேலு ஆசான் அவர்களைப் பற்றிய விவரங்களைச் சிறப்புப் பார்வையில் படித்து மகிழ்ந்தேன். இந்த இசையில் இத்தனை வகைகளா! மிகமிக ஆச்சரியம்.
'அலமாரி பகுதியில் கொத்தமங்கலம் சுப்பு அவர்களுடன் பூவை எஸ். .ஆறுமுகம் அவர்களின் உரையாடலை வெளியிட்டமைக்கு மிக்க நன்றி. தென்றல் தரும் இதமான காற்று மிகவும் சிறப்பாக உள்ளது. நன்றி. |
|
சசிரேகா சம்பத்குமார், யூனியன் சிட்டி, கலிஃபோர்னியா |
|
|
|
|
|
|
|