விடைகள்1. ரொட்டியின் எண்ணிக்கை = 20
ஆண்களுக்கு = 2
பெண்களுக்கு = 1/2
குழந்தைகளுக்கு = 1/4
ரொட்டியின் எண்ணிக்கையும், பெறுபவர்களின் எண்ணிக்கையும் சமம் = ரொட்டி = பெறுபவர்கள் = 20 என்றால்
ஆண்கள் = 8 x 2 = 16
பெண்கள் = 4 x 1/2 = 2
குழந்தைகள் = 8 x 1/4 = 2
**********************
20 20
**********************
ஆக ஆண்கள் 8 பேர்; பெண்கள் 4 பேர், குழந்தைகள் 8 பேர் ரொட்டிகளைப் பகிர்ந்து கொண்டனர்.
2. மொத்த கால்களின் எண்ணிக்கை = 128
கிளி, புறா, மைனா, கோழிகளுக்கு 2 கால்கள்;
நாய், பூனைகளுக்கு 4 கால்கள்;
ஒவ்வொன்றும் எண்ணிக்கையில் சமம் என்றால்
கிளி = 8; புறா = 8; மைனா = 8; கோழி = 8; நாய் = 8; பூனை = 8
கால்கள் = 16 + 16 + 16 + 16 +32 + 32 = 128
3. 3 தந்தைகள், 3 மகன்கள் என்று மொத்தம் ஆறு பேர்கள் இருப்பதாகத் தோன்றினாலும் அது தவறு. முதல் தந்தை, தனது மகனுக்கு 200 டாலர் கொடுத்தார். அவர் அதைப் பெற்றுக் கொண்டு, 50 டாலரை வைத்துக் கொண்டு மீதி 150 டாலரைத் தனது மகனுக்கு, அதாவது முதலாமவரின் பேரனுக்குக் கொடுக்கிறார். அந்த மகன் அதனைப் பெற்றுக் கொண்டு, தான் 50 டாலரை வைத்துக் கொண்டு மீதம் 100 டாலரை தனது மகனுக்கு அதாவது முதலாமவரின் கொள்ளுப் பேரனுக்குக் கொடுக்கிறார். ஆக, தந்தைகளின் எண்ணிக்கை மூவராகிறது. மகன்களின் எண்ணிக்கையும் மூவராகிறது என்றாலும் மொத்தம் இருப்பது அப்பா, மகன், பேரன், கொள்ளுப்பேரன் என நான்கு பேர்கள் மட்டுமே!. ஆக, அவர்களிடம் இருக்கும் மொத்த கூட்டுத் தொகையும் 50+50+100 = 200 ஆகிறது
4. சங்கரின் வயது = x
சந்திரனின் வயது = x - 5
ரமேஷின் வயது = x + 5
x + x - 5 = 25
2x = 30;
x = 15
சங்கரின் வயது = 15
சந்திரனின் வயது = x - 5 = 15 - 5 = 10
ரமேஷின் வயது = x + 5 = 15 + 5 = 20
மூவரின் வயதையும் கூட்டினால் வரும் தொகை = 15+10+20 = 45 = ரமேஷின் வயதைவிட 25 அதிகம் = 20 + 25 = 25.
5. 9999 / 9 = 1111. இது தொடர் வரிசை என்பதால் மிகச் சிறிய எண் = 1107. மிகப் பெரிய எண் =1115.