சரவணா உருவாகிறது டான் சேரா மீண்டும் ராமராஜன் பிரச்சனையில் சிவகாசி பாலகுமாரனின் வசனத்தில்........ புதுமுகங்களின் புனிதம்
|
 |
இம்சை அரசன் வடிவேலு |
   |
- கேடிஸ்ரீ | டிசம்பர் 2005 |![]() |
|
|
|
நகைச்சுவை நடிகர்கள் கவுண்டமணி, விவேக் இவர்களை அடுத்து வடிவேலுவும் கதாநாயகனாக நடிக்கப்போகிறார். படத்திற்கு 'இம்சை அரசன் 23ம் புலிகேசி' என்று பெயரிட்டிருக்கிறார்கள்.
இப்படத்தை ஷங்கரின் 'எஸ்' பட நிறுவனம் தயாரிக்கிறது. ராஜா-ராணி கதையை மையமாகக் கொண்டு உருவாகவிருக்கும் இப்படத்தில் நகைச்சுவையே முக்கியப்பங்கு வகிக்கும். இயக்குநர் சேரனிடம் உதவியாளராகப் பணியாற்றிய சிம்புதேவன் இப்படத்திற்கான கதை, திரைக்கதை, வசனம் மற்றும் இயக்கத்தைக் கவனிக்கிறார்.
வடிவேலுவுக்கு ஜோடியாக மோனிகா, நந்திதா நடிக்கவிருக்கின்றனர். இவர்களைத் தவிர நாகேஷ், மனோரமா, நாசர், ஸ்ரீமன், வெ.ஆ. மூர்த்தி என்று ஏராளமான நட்சத்திரங்கள் நடிக்கவிருக்கின்றனர்.
இசை சுபேஷ்முரளி, ஒளிப்பதிவு ஆர்தர். |
|
கேடிஸ்ரீ |
|
 |
More
சரவணா உருவாகிறது டான் சேரா மீண்டும் ராமராஜன் பிரச்சனையில் சிவகாசி பாலகுமாரனின் வசனத்தில்........ புதுமுகங்களின் புனிதம்
|
 |
|
|
|
|
|