கலைஞரின் கைவண்ணத்தில் பா.விஜய் மீண்டும் மோகன் மீண்டும் தமிழில் மம்முட்டி இணையதளத்தில் பி.சுசீலாவின் பாடல்கள் பாடுகிறார் ரகுவரன்
|
 |
தீபாவளி வெளியீடுகள் |
   |
- கேடிஸ்ரீ | நவம்பர் 2007 |![]() |
|
|
|
இந்த வருடம் தீபாவளிக்கு சூர்யா, தனுஷ், சத்யராஜ் ஆகியோர் நடித்த படங்கள் திரைக்கு வருகின்றன.
வேல்
சூர்யா நடிப்பில் வெளிவருகிறது 'வேல்'. சூர்யாவுடன் அசின் இப்படத்தில் ஜோடி சேர்ந்திருக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் வெளிவரவிருக்கும் இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் மட்டுமல்லாமல்
படத்தை இயக்குவும் செய்திருக்கிறார் ஹரி.
'வேல்', வெற்றிவேலாக வாழ்த்துக்கள்.
*****
அழகிய தமிழ் மகன்
விஜய்யின் 'அழகிய தமிழ் மகன்' தீபாவளிக்கு வெளிவர வேண்டும் என்பதற்காக மிக வேகமாக வேலை நடைபெற்று வருகிறது. நாயகி ஸ்ரேயா.
ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருக்கும் இப்படத்தில் மொத்தம் ஆறுபாடல்கள். பரதன் இயக்குகிறார். 'சொர்க்கம்' படத்தின் 'பொன்மகள் வந்தாள்' பாடலை அழகிய தமிழ் மகனுக்காக ரீமிக்ஸ் செய்திருப்பது படத்தின் சிறப்பு.
***** |
|
பொல்லாதவன்
ரஜினியின் வெற்றிப்படமான 'பொல்லாதவன்' அவரது மருமகன் தனுஷ் நடிப்பில் தீபாவளி அன்று மீண்டும் திரைக்கு வருகிறது. மிகுந்த எதிர்பார்ப்பில் காத்திருக்கிறார்கள் தனுஷ் ரசிகர்கள். தனுஷ¤க்கு ஜோடி திவ்யா.
இவர்களுடன் பானுப்ரியா, கருணா போன்றோரும் நடித்திருக்கிறார்கள்.
இசை ஜி.வி.பிரகாஷ். படத்தில் மொத்தம் ஐந்து பாடல்கள். கதை, திரைக்கதை, வசனம், இயக்கத்தைச் செய்திருக்கிறார் வெற்றிமாறன். 'நினைத்தாலே இனிக்கும்' படத்தில் வந்த 'எங்கேயும் எப்போதும்' பாடல்
பொல்லாதவனுக்காக புதுமையான முறையில் ரீமிக்ஸ் செய்யப்பட்டுள்ளது.
*****
கண்ணாமூச்சி ஏனடா!
பிருத்விராஜ் நாயகனாக நடிக்க, நாயகியாக சந்தியா நடிக்கும் இப்படத்தில் சத்யராஜ், ராதிகா போன்ற சீனியர் நடிகர்களும் நடித்திருக்கிறார்கள். படத்தை 'கண்ட நாள் முதல்' ப்ரியா இயக்கியிருக்கிறார். படத்திற்கான கதை,
திரைக்கதை வசனம் ஆகியவற்றையும் இவரே செய்திருக்கிறார்.
*****
மச்சக்காரன்
முற்றிலும் புதுமுகங்கள் நடிப்பில் வெளிவருகிறது 'மச்சக்காரன்'. கணவன், மனைவிக்குள் ஏற்படும் பிரச்சனைகளை சுவாரசியமாகச் சொல்கிறது 'மச்சக்காரன்'.
யுவன்சங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இப்படத்துக்குக் கதை, திரைக்கதை, வசனம் எழுதி, இயக்கியிருக்கிறார் தமிழ்வாணன்.
தொகுப்பு: கேடிஸ்ரீ |
மேலும் படங்களுக்கு |
 |
More
கலைஞரின் கைவண்ணத்தில் பா.விஜய் மீண்டும் மோகன் மீண்டும் தமிழில் மம்முட்டி இணையதளத்தில் பி.சுசீலாவின் பாடல்கள் பாடுகிறார் ரகுவரன்
|
 |
|
|
|
|
|