தமிழகத்தில் அ.தி.மு.க.வுக்கும் பா.ஜ.க.வுக்கும் கூட்டணி ஏற்பட்டு, நீண்ட பேச்சு வார்த்தைக்குப் பின்னர் பா.ஜ.க.வுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அவற்றில் தர்மபுரி, புதுச்சேரி, வடசென்னை, சிதம்பரம் ஆகிய 4 தொகுதிகளும் பா.ஜ.க. கேட்காமல் வந்த தொகுதிகள். இந்த நான்கு தொகுதி களுக்கும் வேட்பாளர் தேர்வில் அதிகக் குழப்பம் ஏற்பட்டாலும், கோவையில் சி.பி. ராதாகிருஷ்ணன், வடசென்னையில் சுகுமாரன் நம்பியார், நாகர்கோவிலில் பொன் ராதாகிருஷ்ணன், நீலகிரியில் மாஸ்டர் மதன், சிதம்பரத்தில் தடா. பெரியசாமி, புதுச்சேரியில் லலிதா குமாரமங்கலம் என்று அறிவித்துவிட்டனர்.
மறைந்த வாழப்பாடி ராமமூர்த்தியின் மகன் சுகந்தன் காங்கிரஸ் கட்சியில் தனக்கு தொகுதி ஒதுக்கப்படும் என்று எதிர்பார்த்து ஏமாற்றமைடைந்தார். அதிருப்தியடைந்த சுகந்தன் காங்கிரசிலிருந்து விலகி பாஜவுக் குள் நுழைந்து, தர்மபுரிக்கான தன் காய்களை நகர்த்தினார்.
சுகந்தன் துணைப்பிரதமர் அத்வானி வரை சென்று சந்தித்து மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்த வேளையில் பு.தா. இளங் கோவன் தர்மபுரியைத் தட்டிச் சென்றார். |