விடைகள்1 வரிசை கீழ்கண்ட அமைப்பில் உள்ளது.
3 + 7 = 10 = 8 + 2
2 + 9 = 11 = 4 + 7
9 + 6 = 15 = 8 +7
ஆக விடுபட்ட இடத்தில் வர வேண்டியது 4 + 2 = 6 = 1 + 5. விடுபட்ட இடத்தில் வர வேண்டிய எண் = 6.
2. 300ஐவிடச் சிறியது என்பதால் அந்த எண் 123 முதல் 299 வரை எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் ஐந்தால் வகுபடக் கூடியது என்பதால் 125 முதல் 215 வரை இருக்கலாம். கூட்டுத்தொகை எட்டு மற்றும் முதல் இலக்க எண்ணைவிட இரண்டாவது எண் பெரியது என்பதால் சரியான எண் = 125
3. தந்தையிடம் இருந்த மொத்தத் தொகை - 16200 டாலர்.
அதில் மூன்றில் ஒரு பங்கு = 16200/3 = 5400;
முதல் மகனுக்குக் கிடைத்தது 5400 டாலர்;
எஞ்சிய தொகை = 16200-5400 = 10800;
அதில் மூன்றில் ஒரு பங்கு = 10800/3 = 3600;
இரண்டாவது மகனுக்குக் கிடைத்தது = 3600 டாலர்;
எஞ்சிய தொகை = 10800-3600 = 7200;
அதில் மூன்றில் ஒரு பங்கு 7200/3 = 2400;
மூன்றாவது மகனுக்குக் கிடைத்தது = 2400;
எஞ்சிய தொகை = 7200-2400 = 4800;
அதில் மூன்றில் ஒரு பங்கு = 4800/3 = 1600;
நான்காவது மகனுக்குக் கிடைத்தது = 1600;
எஞ்சிய தொகை = 4800-1600 = 3200;
பேரனுக்குக் கிடைத்தது = 3200 டாலர்.
ஆக மகன்களின் எண்ணிக்கை நான்கு. அவர்களுக்குப் பிரித்துக் கொடுக்கப்பட்ட தொகைகள் முறையே 5400, 3600, 2400, 1600.
4. இயலும்.
33 - 3 + 3/3 = 31
33 + 3 + 3/3 = 31
5. முதல் பெட்டியில் 1, இரண்டாம் பெட்டியில் 2, மூன்றாம் பெட்டியில் 4 என்று தொடர்ந்து அவன் ஒவ்வொரு பெட்டியிலும் முறையே 1, 2, 4, 8, 16, 32, 64, 128, 256, 489 என்று தொகையை வைத்திருந்தான். அதன்மூலம் தாத்தா கேட்ட எந்தத் தொகையையும் அவனால் கொடுக்க முடிந்தது.