
கன்னட சூப்பர் ஸ்டார் சுதீப் நாயகனாக நடிக்கும் முதல் தமிழ்ப்படம் இது. நாயகியாக நித்யா மேனன் நடிக்கிறார். முக்கிய வேடங்களில் டெல்லி கணேஷ், பிரகாஷ்ராஜ், நாசர், இமான் அண்ணாச்சி, கௌதமி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். வில்லன்களாக முகேஷ் திவாரி, சரத் லோஹித்சுவா தோன்றுகின்றனர். மதன் கார்க்கி பாடல்களை எழுத டி. இமான் இசையமைக்கிறார். திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் கே.எஸ்.ரவிகுமார். விரைவில் திரைக்கு வர இருக்கிறது இப்படம். |