கலைமாமணி விருதுகள்
இயல், இசை, நாடகம் ஆகிய கலைத்துறைகளில் சாதனை புரிவோரைத் தேர்ந்தெடுத்து ஆண்டுதோறும் கலைமாமணி விருது வழங்கித் தமிழக அரசு சிறப்பிக்கிறது. அந்த வகையில் 2019, 2020ம் ஆண்டுகளுக்கான விருது, கீழ்க்கண்டோர் உள்ளிட்ட 130 கலைஞர்களுக்கு வழங்கப்பட்டது.

இசைக் கலைஞர்கள்:
சிக்கில் குரு சரண், அனில் ஸ்ரீனிவாசன், ரஞ்சனி-காயத்ரி, டாக்டர் கடம் கார்த்திக், கடம் வித்வான் திருப்பனந்தாள் மாரிமுத்து, கிருஷ்ணகுமார், பின்னி கிருஷ்ணகுமார், அக்கரை சகோதரிகள் சுப்புலட்சுமி-சுவர்ணலதா, அபிஷேக் ரகுராம், ஜாலீ ஆபிரகாம், யுகராஜன், (மிருதங்கம்), சின்னதம்பி, (நாதஸ்வரம்) செல்வரத்தினம், (நாதஸ்வரம்) சுப்பிரமணியன், (தவில்), பாலேஷ்-கிருஷ்ணா பாலேஷ் (ஷெனாய்), ஜான்மோகன், (ஆர்மோனியம்), முருகபூபதி, (மிருதங்கம்), சாய்ராம் சுந்தரம், (மிருதங்கம்), கிருஷ்ணமூர்த்தி, (நாதஸ்வரம்), மாரிமுத்து, (தவில்)

நடிகர்கள்:
சௌகார் ஜானகி, சரோஜாதேவி, சங்கீதா, ஐஸ்வர்யா ராஜேஷ், தேவதர்ஷினி, மதுமிதா, ராமராஜன், சிவகார்த்திகேயன், யோகி பாபு, சாந்தி வில்லியம்ஸ், நந்தகுமார், நித்யா.

இசையமைப்பாளர்கள் மற்றும் பாடகர்கள்:
டி இமான், தீனா, சுஜாதா, அனந்து.

இசைக் கோர்வையாளர், திரைப்பட இசை ஒலிப்பதிவாளர்:
சாய் ஷ்ரவணம்

நடனக் கலைஞர்கள்:
சிவசங்கர், ஸ்ரீதர்

தயாரிப்பாளர்கள்:
கலைப்புலி எஸ் தாணு, ஐசரி கணேஷ்

பாடலாசிரியர்கள்:
காமகோடியன், காதல்மதி

இயக்குநர்கள்:
கௌதம் மேனன், லியாகத் அலிகான், மனோஜ் குமார், ரவி மரியா.

வசனகர்த்தா:
வி.பிரபாகர்

ஒளிப்பதிவாளர்:
ரகுநாத ரெட்டி

பத்திரிகையாளர்:
சபீதா ஜோசப்

பண்பாட்டுக் கலை பரப்புநர்:
'கிருஷ்ணா ஸ்வீட்ஸ்' எம். முரளி; ராமசாமி, பாரதீய வித்யா பவன், சென்னை; பிரபு, ஸ்ரீகிருஷ்ண கான சபா, சென்னை; பாலசுப்பிரமணியன், ஜே.பி.கல்சுரல் ஃபவுண்டேஷன், சென்னை.

எழுத்தாளர்கள்:
முத்துக்கிருஷ்ணன், ஆவடி குமார், சத்தியநாராயணன், தாமரை செந்தூர்பாண்டி, சுகுமார், பெருமாள்,

சொற்பொழிவாளர்:
திருச்சி கல்யாணராமன்

★★★★★




சிறப்புக் கலைமாமணி விருதுகள்
2019 - ஜெயலலிதா சிறப்புக் கலைமாமணி விருது
சரோஜாதேவி - திரைத்துறை
பி.சுசீலா - இசைத்துறை
அம்பிகா காமேஷ்வர் - நாட்டியத்துறை
2020 - ஜெயலலிதா சிறப்புக் கலைமாமணி விருது
சௌகார் ஜானகி - திரைத்துறை
ஜமுனா ராணி - இசைத்துறை
பார்வதி ரவி கண்டசாலா - நாட்டியத்துறை

★★★★★


முதலமைச்சர் கணினித் தமிழ் விருது
2019: நீச்சல்காரன் ராஜாராமன்

★★★★★


இவை தவிர்த்து ஆண்டுதோறும் படைப்பிலக்கிய வளர்ச்சிக்கு உதவும் படைப்பாளிகளும் விருதளித்து கௌரவிக்கப்படுகின்றனர்.

உ.வே.சா. விருது - கி. ராஜநாராயணன்
கம்பர் விருது – மருத்துவர் எச்.வி. ஹண்டே
திருவள்ளுவர் விருது – வைகைச் செல்வன்
தந்தை பெரியார் விருது – தமிழ்மகன் உசேன்
மகாகவி பாரதியார் விருது – கவிஞர் பூவை செங்குட்டுவன்
அம்பேத்கர் விருது - வரகூர் அ. அருணாச்சலம்
அண்ணா விருது - அமரர் கடம்பூர் எம்.ஆர். ஜனார்த்தனன்
காமராஜர் விருது - முச. தேவராஜ்
பாரதிதாசன் விருது - அறிவுமதி (எ) மதியழகன்
திரு.வி.க. விருது - வி.என். சாமி
சொல்லின் செல்வர் விருது - நாகை முகுந்தன்
கி.ஆ.பெ.விசுவநாதம் விருது - வீ. சேதுராமலிங்கம்
ஜெயலலிதா இலக்கிய விருது - தி. மகாலட்சுமி
சிங்காரவேலர் விருது - ஆ. அழகேசன்,
மறைமலையடிகளார் விருது - மறை.தி. தாயுமானவன்
அயோத்திதாச பண்டிதர் விருது - கோ.ப. செல்லம்மாள்
வள்ளலார் விருது - ஊரன் அடிகள்
காரைக்கால் அம்மையார் விருது - மோ. ஞானப்பூங்கோதை

2019
பாரதி விருது - சீனி விஸ்வநாதன்
எம்.எஸ். சுப்புலட்சுமி விருது - எம்.எஸ். ராஜேஸ்வரி
பாலசரஸ்வதி விருது - அலர்மேல் வள்ளி

2020
பாரதி விருது - சொற்பொழிவாளர் சுகி சிவம்
எம்.எஸ். சுப்புலட்சுமி விருது - பாடகி வாணி ஜெயராம்
பாலசரஸ்வதி விருது - சந்திரா தண்டாயுதபாணி
சிறந்த கலை மன்றத்திற்கான விருது (2019) - பொள்ளாச்சி தமிழிசை சங்கம்
சிறந்த கலை மன்றத்திற்கான விருது (2020) - மதுரை தமிழிசைச் சங்கம்
சிறந்த நாடகக் குழுவிற்கான விருது - சபரி நாடக குழு, திருவண்ணாமலை

தமிழ்ச் செம்மல் விருது
மாவட்டந்தோறும், தமிழுக்கு சீரிய தொண்டாற்றி வரும் படைப்பாளிகளுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது,
சென்னை - ஜெ.வா. கருப்புசாமி
திருவள்ளூர் - வேணு புருஷோத்தமன்,
காஞ்சிபுரம் - முனைவர் சு. சதாசிவம்
வேலூர் - மருத்துவர் சே. அக்பர் கவுஸர்
நீலகிரி - ம. பிரபு,
திருச்சிராப்பள்ளி - சோம வீரப்பன்,
புதுக்கோட்டை - ஜீவி (ஜீ. வெங்கட்ராமன்)
சிவகங்கை - இரா. சேதுராமன்
மதுரை - முனைவர் போ.சத்தியமூர்த்தி
தூத்துக்குடி - ச. காமராசு (முத்தாலங்குறிச்சி காமராசு)
மற்றும் பலர்.

விருது பெறும் ஒவ்வொரு கலைஞருக்கும் பொற்பதக்கமும், சான்றிதழும், காசோலையும் வழங்கப்பட்டது. விருதாளர்களுக்குத் தென்றலின் வாழ்த்துக்கள்.

© TamilOnline.com