Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
Current Issue
தென்றல் பேசுகிறது | சிறப்புப்பார்வை | சிறுகதை | கதிரவனைக் கேளுங்கள் | அலமாரி | சின்ன கதை | மேலோர் வாழ்வில்
எழுத்தாளர் | Events Calendar | நிகழ்வுகள் | முன்னோடி | பொது
Tamil Unicode / English Search
சின்னக்கதை
கழுதை இறந்தது
- |அக்டோபர் 2026|
Share:
ஆன்மிக சாதனையோ, உலக வாழ்க்கையோ எதுவானாலும், ஆழமாகச் சிந்தித்து, அது நன்மை தரும் என்று திருப்தி அடைந்த பிறகுதான் ஒவ்வோர் அடியையும் எடுத்து வைக்கவேண்டும், இல்லையெனில், அது அழுமூஞ்சி நகரத்தின் கதைபோல ஆகிவிடும்.

ஒருநாள், ராணியின் நெருங்கிய பணிப்பெண் ஒருத்தி மிகுந்த துயரத்தில் அழுதுகொண்டே அரண்மனைக்கு வந்தாள். அதைப் பார்த்து ராணியும் கண்ணீர் சிந்தத் தொடங்கினார். ராணி அழுவதைக் கண்டதும், அந்தப்புரம் முழுவதும் அழுதது. அந்த அழுகை ஆண் சேவகர்களுக்கும் தொற்றிக் கொண்டது. தேற்றமுடியாத சோகத்தில் ராணி அழுவதைக் கண்ட அரசரும் சேர்ந்து அழுதார். அதைப் பார்த்த நகரமே ஓலமிட்டு அழுதது.

கடைசியாக, விவேகியான மனிதர் ஒருவர் இதைக் குறித்து விசாரிக்கத் தொடங்கினார். அந்த விசாரணை, ஒவ்வொருவராகக் கடந்து இறுதியில் ராணியைப் போய் அடைந்தது. தனது பணிப்பெண் மிகவும் துக்கத்தில் இருப்பதாக ராணி சொன்னார். சலவைத் தொழிலாளியான அந்தப் பணிப்பெண்ணை விசாரித்தபோது, எல்லாவற்றுக்கும் காரணம் தனக்குப் பிடித்த கழுதை திடீரென்று இறந்ததே என்று ஒப்புக்கொண்டார்.

இந்தச் செய்தி பரவியபோது, அழுகை நின்று, எங்கெங்கும் பரவலாகச் சிரிப்பும் வெட்கமும் ஏற்பட்டன. சிந்தனை செய்யுங்கள், பகுத்தறியுங்கள்; அவசரப்பட்டு முடிவு எடுக்காதீர்கள். வெறும் வதந்திகளால் தடம்மாறிப் போகாதீர்கள்.
பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபா
Share: 




© Copyright 2020 Tamilonline