|
ராமரின் கன்னம் |
   |
- | பிப்ரவரி 2025 |![]() |
|
|
|
 |
ஒரு வணிகர் இருந்தார், அவரது குரு இறை நாமத்தை ஜபிக்கும்படி அவருக்கு அறிவுறுத்தினார். உட்கார்ந்து ஜபிக்கத் தனக்கு நேரமில்லை என்று அவர் கெஞ்சினார்; நேரமும் சக்தியும் கடையிலேயே செலவாகிப் போனது. மலம் கழிக்க தினமும் காலையில் கிராமத்திலிருந்து சிறிது தூரம் செல்ல வேண்டியிருந்தது. அதற்குச் சுமார் அரை மணி நேரம் செலவிட்டார். குரு அந்த நேரத்தை தினசரி நாம ஸ்மரணத்திற்குப் பயன்படுத்துமாறு கூறினார்.
ஒருநாள் ராமபக்த ஹனுமான் வான்வழியே சென்று கொண்டிருந்தபோது, அந்த வணிகர் மலம் கழித்துக் கொண்டிருப்பதைக் கண்டார், அந்தச் சமயத்தில் அவர் 'ராம், ராம்' என்று ஜபிப்பதைக் கேட்டார். ஹனுமான் அவரது அகம்பாவத்தைக் கண்டு ஆத்திரமடைந்தார், அசுத்தமாக இருக்கும்போது ராம நாமத்தை உச்சரிப்பதன் மூலம் அதை இழிவுபடுத்துவதாகக் கோபப்பட்டார். அவரது கன்னத்தில் ஓங்கி அறைந்துவிட்டு, அயோத்தியை நோக்கிப் பயணத்தைத் தொடர்ந்தார்.
அவர் ராமரின் சன்னிதியை அடைந்து, ராமரின் ஒளிமிக்க முகத்தைப் பார்த்தார். ராமரின் கன்னத்தில் அறைந்த கையின் சிவந்த அடையாளத்தைக் கண்டார். ஹனுமான் அதிர்ச்சியடைந்தார், வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவுக்கு ஆழமாகத் துயரடைந்தார்.
ராமர் அவரிடம், "ஹனுமான்! இப்படி அறைந்தவரின் பெயரை என்னிடம் கேட்காதே. என் பக்தனுக்குப் பேரிடர் நேரப்போகும் தருணத்துக்காக நான் காத்திருக்கிறேன். சரியான கணத்தில் புகுந்து காக்கிறேன். நீ வரும் வழியில் கிராமத்திற்கு வெளியே உட்கார்ந்து, என் நாமத்தை ஜபித்துக் கொண்டிருந்த அந்த அப்பாவி வணிகரால் உன் கோபமான அறையைத் தாங்கமுடியுமா? அந்த ஆள் சம்பவ இடத்திலேயே இறந்து விழுந்திருப்பான். எனவே, நான் குறுக்கிட்டு அந்த அறையை என் கன்னத்தில் வாங்கிக் கொண்டேன்!" என்றார்.
நன்றி: சனாதன சாரதி, நவம்பர் 2024 |
|
பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபா |
|
|
|
|
|
|
|