Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
Current Issue
தென்றல் பேசுகிறது | சிறப்புப்பார்வை | சிறுகதை | கதிரவனைக் கேளுங்கள் | அலமாரி | சின்ன கதை | மேலோர் வாழ்வில்
எழுத்தாளர் | Events Calendar | நிகழ்வுகள் | முன்னோடி | பொது
Tamil Unicode / English Search
பொது
3rd i நடத்தும் 3வது சான் பிரான்சிஸ்கோ சர்வதேச தெற்காசியத் திரைப்பட விழா
- |அக்டோபர் 2026|
Share:
அக்டோபர் 9-11 சான் பிரான்சிஸ்கோவின் தி ரோக்ஸி தியேட்டரில் (The Roxie Theater) 3வது சான் பிரான்சிஸ்கோ சர்வதேச தெற்காசியத் திரைப்பட விழாவை '3rd i' நடத்த உள்ளது.

கலைப் படங்கள், ஆவணப் படங்கள், புதுமையான படைப்புகள் வரை, தெற்காசியர்களின் மாறுபட்ட திரைப்படங்களை உலகிற்கு அறிமுகப்படுத்த '3rd i' உறுதிபூண்டுள்ளது.

பாலிவுட்டைத் தாண்டி, பங்களாதேஷ், பாகிஸ்தான், பிரான்ஸ், தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளிலிருந்து, விருது பெற்ற கதை, ஆவணப்படம் மற்றும் குறும்படங்களை இந்த விழா வழங்குகிறது. இருண்ட நகைச்சுவை, வசீகரமான நாடகம் வரை, இதயத்தைத் தொடும் சமூக நையாண்டி முதல் மனிதநிலை குறித்த தனித்துவமான கண்ணோட்டங்கள் வரை, தெற்காசியா மற்றும் அதன் புலம்பெயர்ந்தோரின் அற்புதமான சினிமாக்களைக் கொண்டுவருகிறது.

தொடக்க நாளன்று இரவில், விருது பெற்ற பிரிட்டிஷ்-இந்திய இயக்குனரும் திரைக்கதை எழுத்தாளருமான ஏவி லுத்ராவின் படைப்பாற்றல் மேதைமையை அவரது நகைச்சுவை மிக்க, நுணுக்கமான, சிக்கலான, சமூக நுண்ணறிவு கொழிக்கும் குறும்படங்களைத் திரையிடுகிறது. குடியேற்றம், உறவுகள், அடையாளம், பாலினம், பாலியல், சமூக நீதி ஆகியவற்றைப் பிரதிபலிக்கும் அற்புதமான கதைகளின் தொகுப்பான “A Celebration of the Extraordinary Work of Avie Luthra” என்ற நிகழ்ச்சிக்கு வாருங்கள். இயக்குனர் ஏவி லூத்ராவுடன் கேள்வி பதில் இடம்பெறும்.

பெண்களின் குரல்களுக்கு ஒரு தளத்தை வழங்கும் பணியில், 3rd i லென்ஸுக்குப் பின்னாலும் திரையிலும் பெண்கள் இடம்பெறும் படங்களைக் கொண்டு வருகிறது. புகழ்பெற்ற திரைப்படத் தயாரிப்பாளர் அனுஷா ரிஸ்வியின் சமீபத்திய 'The Great Shamsuddin Family' (இந்தியா, 2025) ஒரு நகைச்சுவையான, கூர்மையான, இதயத்தைத் தொடும் சமூக நையாண்டி ஆகும். அவரது முதல் படம் 'Peepli Live' அகாடமி விருதுகளுக்கு இந்தியாவின் தேர்வாகும். அது சன்டான்ஸில் திரையிடப்பட்ட முதல் இந்தியத் திரைப்படமும் ஆகும். டெல்லி அடுக்குமாடிக் குடியிருப்பு வாழ்க்கையைப் பின்னணியாகக் கொண்ட, ஒரே நாளில் நடக்கும் இந்த நகைச்சுவைக் கதை, வீட்டுக் குழப்பத்தை நவீன இந்தியாவின் கதையாகச் சொல்கிறது.

மாயாஜாலம் போன்ற, இனிய, கண்ணுக்கு விருந்தான Ghost School (பாகிஸ்தான்/ஜெர்மனி/சவுதி அரேபியா, 2025) படம் பிரிட்டிஷ்-பாகிஸ்தான் சீமாப் குல் இயக்கியது. பேய்களின் பயத்தால் நடுங்கும் ஒரு சமூகத்தில் ஒரு குழந்தை பதில்களைத் தேடுவதைப் படமாக்கி இருக்கிறார். ஒரு பரந்த, சூரிய ஒளிமிக்க நிலப்பரப்பில் பயணிக்கும் பத்து வயது ராபியா, பேய்க் கதைகளுக்கான காரணங்களையும், தனது கிராமத்தில் உள்ள ஒரே பள்ளி ஏன் மூடப்பட்டது என்பதையும் கண்டுபிடிக்கும் தேடலில், அனைத்து வகுப்புகள் மற்றும் பின்னணிகளைச் சேர்ந்த மக்களைச் சந்திக்கிறாள்.

இந்த ஆண்டின் திரைப்பட விழா, எளிய வகைப்படுத்தலை எதிர்க்கும், கதைசொல்லலின் எல்லைகளை விரிவுபடுத்தும் இந்தியக் கதைகளை வழங்குகிறது. இருண்ட நகைச்சுவை ததும்பும், வண்ணமயமான Lali (பாகிஸ்தான், 2026) என்ற த்ரில்லரை இயக்குனர் சர்மத் கூசாட் வழங்குகிறார், இதில் பேய்கள் உயிருள்ளோர் நடுவே நடமாடுகின்றன. ஓர் இளம் பஞ்சாபி தம்பதியினர் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்கு ஜோசியம் முக்கியமாக இருக்கிறது. ஜீபாவுடன் திருமணத்துக்கு நிச்சயிக்கப்பட்ட மூவர் மர்மமான முறையில் இறந்து போகவே, அவர் சஜாவலைத் திருமணம் செய்து கொள்கிறார். ஒரு விறுவிறுப்பான சமூக நையாண்டியாகத் தொடங்கி, பொறாமை மற்றும் அமானுஷ்யத்துக்கு நகர்கிறது. இவர் கேன்ஸ் திரைப்பட விழா ஜூரி பரிசு வென்றவர். அகாடமி விருதுகளுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பாகிஸ்தானின் முதல் படமான Joyland படத்தையும் கூசாட் தயாரித்தார்.

சோதனை ரீதியான கலைப்படம் Sand City (பங்களாதேஷ், 2025). இயக்குனர் மஹ்தே ஹசன் பங்களாதேஷின் டாக்காவை ஆராய்கிறார், அங்கு குடியிருப்போரும் உள்ளதொரு ஆழமான தொடர்பு மணல். இதில் பிரெஞ்சு ஒளிப்பதிவாளர் மேத்யூ ஜியோம்பினி, ஒரு கடுமையான ஆனால் அழகான ஓவியத்தை வரைகிறார், அது ஓர் இடம் மட்டுமல்ல, உயிருள்ள, சுவாசிக்கும் ஜீவன். தனித்தனிக் கோடுகளான எம்மா மற்றும் ஹசன் சந்திக்கும் ஒரு புள்ளியில் மணல், தனிமை, நகர்ப்புற அந்நியமாதல், செயலிழப்பு, பெருநகர வனாந்தரத்தில் உயிர்வாழ வேண்டிய விசித்திரமான விஷயங்கள் ஆகியவை குறுக்கிடுகின்றன.

இயக்குனர் கௌதம் சோண்டியின் Technocats (இந்தியா, 2026) போன்ற கண்கவரும் ஆவணப்படங்களும் விழாவில் இடம்பெறுகின்றன. இந்தியாவின் உயரடுக்கு இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தில் (IIT), ஒரு “Cat” என்றால் எல்லாவற்றையும் கற்றுத் தேர்ந்தவர். இந்தப் பொறியியல் பள்ளிகள் கூகிள், மைக்ரோசாப்ட், ஐபிஎம் மற்றும் பிற தொழில்நுட்ப ஜாம்பவான்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளை உருவாக்கியுள்ளன. ஐஐடி முன்னாள் மாணவரான சோண்டி, சீர்மை கோரும் செலவு, அதன் பொருள், தரவரிசைக்குப் பின்னால் உள்ள உண்மை மற்றும் இந்தியாவின் மிகவும் தீவிரமான நிறுவனங்களில் ஒன்றை வழிநடத்தும் இளம் மனங்களின் அமைதியான மீட்சித்தன்மை ஆகியவற்றை ஆராய்கிறார்.

பிரமிக்க வைக்கும் வனங்களில் படமாக்கப்பட்டுள்ளது Eternal Trees, Eternal Mountains (இந்தியா/அமெரிக்கா, 2026). சிக்கலான, நெகிழ்வான பழங்குடி சமூகத்தைச் சித்திரிக்கும் படம் இது. ஹர்ஷா ரெட்டி மற்றும் கிறிஸ் செகுரி இயக்கியுள்ளனர். 1998ஆம் ஆண்டில், அமெரிக்க மாணவர் ஹர்ஷா புலிகளை ஆய்வு செய்யத் தென்னிந்தியாவின் காடுகளுக்குச் சென்றார். அடுத்து இருபதாண்டுகளுக்குப் பிறகு, தனது வரலாற்றாசிரியர் நண்பர் கிறிஸ் உடன் செஞ்சு மக்களின் கிராமங்களுக்குத் திரும்பினார், இந்த பழங்குடி சமூகத்தின் வேர்கள் அவர்கள் தமது வீடென்று அழைக்கும் பண்டைய காடுகளைப் போல ஆழமாக ஓடுகின்றன. ஹர்ஷா ரெட்டி மற்றும் கிறிஸ் செகுரியுடன் கேள்வி பதில் இடம்பெறும்.

பிரெஞ்சு-இலங்கை லாரன்ஸ் வாலின் இயக்கிய The Loyal Man (பிரான்ஸ், 2020) படத்துடன் விழா நிறைவடையும். கடந்த ஆண்டு பெருத்த வரவேற்பைப் பெற்றது அவரது Little Jaffna. இந்த ஆண்டில், பிரான்சின் புகழ்பெற்ற பாரிஸின் கடுமையான பாதாள உலகில் நம்மை மூழ்கடிக்க வருகிறது அவரது முதல் பிரெஞ்சு-இலங்கை தமிழ்ப் படம். கடத்தல் கும்பலின் கட்டுப்பாட்டில் உள்ள கடத்தப்பட்ட பெண்ணான மினாலேவை ஆதி காதலிக்கிறான். அவன் முதலாளிக்கும் தனது விசுவாசத்தைக் காட்ட வேண்டும்.

ஸ்ருதி பரேக் இயக்கிய Homebody என்ற குறும்படத்துடன் நிறைவு நாள் நிகழ்ச்சி தொடங்குகிறது. இயக்குனர் லாரன்ஸ் வாலினுடன் பிரத்யேகமாக கேள்வி பதில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நுழைவுச் சீட்டுகள்:
தனிப்பட்ட படங்கள் $13. காட்சி நேரத்திற்கு 30 நிமிடங்களுக்கு முன்புவரை ஆன்லைனில் டிக்கெட் வாங்கலாம். Roxie Box Office - ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் 30 நிமிடங்களுக்கு முன்பு டிக்கெட்டுகளை விற்கும்.

மேலும் தகவலுக்கு: thirdi.org
Share: 




© Copyright 2020 Tamilonline