|
|
 |
ஸ்ருதி ஸ்வர லயா இசைப்பள்ளி, மூன்றாவது வருடாந்திர விரிகுடாப் பகுதி கலா உத்சவம் (Bay Area Kala Utsavam) திருவிழாவை வழங்குகிறது. இந்த இரண்டு நாள் தென்னிந்திய பாரம்பரிய (கர்நாடக) இசைப் போட்டி மற்றும் கச்சேரித் தொடர் 2025 பிப்ரவரி 22 மற்றும் 23 தேதிகளில் நடைபெறும்.
ஸ்ருதி ஸ்வர லயாவின் நிறுவனரும், ஃப்ரீமான்ட் கலாச்சார கலை கவுன்சில் குழு உறுப்பினருமான அனுராதா சுரேஷ் கூறுகிறார்: "இப்போது மூன்றாவது ஆண்டில், எங்கள் விழா விரிகுடாப் பகுதி இசைக் கலைஞர்களின் அரிய திறமைகளைக் கொண்டாடுகிறது. உள்ளூர்க் கலைஞர்களைப் போட்டியாளர்களாகவும், நீதிபதிகளாகவும், கலைஞர்களாகவும் இடம்பெறச் செய்வதன் மூலம், இவர்களின் திறமையை வெளிப்படுத்தவும், சமூகத்தை இணைக்கவும், கலைகளுக்கான ஆதரவை வலுப்படுத்தவும் இது ஒரு மேடையை வழங்குகிறது.
இந்தக் கலை வடிவத்தைப் பாதுகாக்கவும் ஊக்குவிக்கவும் பணியாற்றிய விரிகுடாப் பகுதி இசைக்கலைஞரும் புரவலருமான மறைந்த ராஜம் சுவாமிநாதனை இந்த விழா கௌரவிக்கிறது.
ஸ்ருதி ஸ்வர லயாவின் இயக்குனர் மானசா சுரேஷ் கூறுகையில், "பே ஏரியாவில் வளர்ந்த எங்களுக்குக் கர்நாடக இசை இருகலாச்சார வழிமுறையின் அர்த்தம் என்ன என்பதை அறிய இது ஒரு வழியாகிறது, இரண்டு கலாச்சாரங்களை இணைத்து நாம் யார் என்பதை இனம் காட்டுகிறது. கலைஞர்களாக, அமைப்பாளர்களாக, நீதிபதிகளாக, ரசிகர்களாக இந்தப் பாரம்பரியத்தை உயிர்ப்புடன் வைத்திருப்பதில் இளைய தலைமுறையினர் முக்கியப் பங்கு வகிக்கின்றனர். இந்த விழா கடந்த தலைமுறையை கௌரவிக்கும் அதே நேரத்தில் சமூகத்தைக் கட்டியெழுப்பி, அடுத்த தலைமுறைக்கான தளங்களை உருவாக்குகிறது" என்கிறார்.
பிப்ரவரி 22-ம் தேதி இளம் கர்நாடக இசை ஆர்வலர்களுக்கான போட்டியுடன் விழா தொடங்குகிறது. இந்த ஆண்டு வாய்ப்பாட்டு, வயலின் ஆகியவற்றுடன் மிருதங்கம் உட்பட 3 பிரிவுகளாகப் போட்டிகள் விரிவடைந்துள்ளன. பிப்ரவரி 23ஆம் தேதி நடைபெறும் இறுதி நிகழ்வில் நீதிபதிகள் மற்றும் உள்ளூர்த் திறமைசாலிகளின் நிகழ்ச்சிகள் இடம்பெறும். இரண்டு நிகழ்வுகளும் மில்பிடாஸில் உள்ள சிலிக்கான் ஆந்திரா பல்கலைக்கழகத்தில் நடைபெறும்.
மேலும் தகவலுக்கு: www.shruthiswaralaya.com |
|
செய்திக்குறிப்பிலிருந்து |
|
|
|
|
|
|
|