பிப்ரவரி 6, 2016 அன்று மதியம் 2:00 மணிமுதல் நியூ இங்கிலாந்து தமிழ்ச் சங்கம் தனது பொங்கல் விழாவை வாழையிலை விருந்தோடு லிட்டில்டன் உயர்நிலைப்பள்ளியில் நடத்தவுள்ளது.
சங்கம் சென்னை வெள்ள நிவாரண நிதி திரட்ட முடிவு செய்து, டிசம்பர் 3ம் நாள் தொடங்கி, இரண்டே வாரங்களில் இலக்கை எட்டியது. தமிழ்நாடு அறக்கட்டளை ($2000), உதவும் கரங்கள் ($1000), AID
($2000), அக்ஷயபாத்ரா ($2000), சேவா இன்டர்நேஷனல் ($1000) ஆகிய அமைப்புகளுக்கு இந்த நிதியைப் பகிர்ந்தளித்தது. டிசம்பர் மாத இறுதிக்குள் கொடை சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
பொங்கல்விழா பற்றிய முழு விவரங்களுக்கு: new.netamilsangam.org |