முப்பருப்பு லட்டு
  | 
											
											
	  | 
											
												| 
                                                    
                                                    
                                                    
												 | 
                                            
                                            
	  | 
											
	  | 
											
												சர்க்கரைவள்ளி, உருளை பொடிமாஸ்   தேவையான பொருட்கள் சர்க்கரைவள்ளிக் கிழங்கு - 1/4 கிலோ  உருளைக்கிழங்கு - 1/4 கிலோ  தேங்காய்த் துருவல் - 1/2 கிண்ணம்  மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி  உப்பு - தேவையானது மல்லித்தழை - அலங்கரிக்க  வறுத்து அரைக்க:  மிளகாய் வற்றல் - 3  கடலைப்பருப்பு - 1 மேசைக்கரண்டி  மல்லி விதை - 1/2 மேசைக்கரண்டி  மிளகு - 1/2 தேக்கரண்டி  ஜீரகம் - 1 தேக்கரண்டி  தாளிக்க: கடுகு - 1 தேக்கரண்டி  உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி  பெருங்காயத்தூள் - 1/2 தேக்கரண்டி  கறிவேப்பிலை - சிறிதளவு  பச்சை மிளகாய் - 6  எண்ணெய் - 2 மேசைக்கரண்டி | 
											
											
												| 
 | 
											
											
											
												செய்முறை சர்க்கரைவள்ளிக்கிழங்கு, உருளைக்கிழங்கை அரை வேக்காடு வேகவைத்துத் தோல் உரித்து, கேரட் சீவியில் துருவிக் கொள்ளவும் பச்சை மிளகாயைச் சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும். வாணலியை அடுப்பில் வைத்து, மிளகாய் வற்றல், கடலைப்பருப்பு, மல்லி விதை, மிளகு, ஜீரகத்தை வறுத்து எடுத்து ஆறியதும் மிக்ஸியில் பொடி செய்து வைக்கவும்.   வாணலியில் எண்ணெய் விட்டு அடுப்பில் வைக்கவும். சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள், பச்சை மிளகாய் தாளித்துக் கொள்ளவும். அதில் சர்க்கரைவள்ளிக் கிழங்கு, உருளைக்கிழங்கு துருவலைப் போட்டுக் கிளறவும் மஞ்சள் தூளைப் போட்டுக் கலக்கவும் தேவையான உப்பைப் போட்டுக் கலந்து மூடிவைக்கவும் தீயைக் குறைத்து 5 நிமிடம் வைத்திருக்கவும். இடையிடையே கிளறி விடவும் அடுப்பை அணைத்து விட்டு, தேங்காய்த் துருவலைப் போட்டுக் கிளறவும். மல்லித்தழை தூவிப் பரிமாறவும். இந்தப் பொடிமாஸ் சற்றே இனிப்புச் சுவையுடன் சாப்பிட நன்றாக இருக்கும் 
  ராதா நரசிம்மன்,  ஹூஸ்டன், டெக்சஸ் | 
											
											
												 | 
											
											
	  | 
											
												More
  முப்பருப்பு லட்டு
  | 
											
											
	  | 
											
												 | 
											
                                            
												| 
												
												
												 | 
											
                                            
											
											
                                            
												 | 
											
											
												| 
													
													
																											
												 | 
											
											
												| 
													
												 |